அதிரூபவதிக்கு… (11)

Athiroobavathikku"உன் முகத்தை
நேருக்கு நேராய்ப்
பார்க்கும் தைரியம்
முன்பே
எனக்கு வாய்த்திருந்தால்…
எப்பொழுதோ
உனக்குக்
கணவனாயிருப்பேன்.

……………………………………

உன் செழுமையைப்
பார்த்துப் பார்த்தே
பரவசமடைந்த
என்
மனதிலிருந்து
எப்படி வரும்…
வறுமை பற்றிய கவிதை!

…………………………………………
மறுபடியும்
எங்களூர்
விழாக்கால இரவுகளை
நினைவுபடுத்துகிறது…
உன் புன்னகை.

………………………………
உயிர்
வலிக்கும்போதெல்லாம்
புன்னகைக்கிறேன்
ரணமளித்தவள்
நீ அல்லவா…

படம்: நன்றி Wikipedia.

loading...

About The Author