ஆசைப்படுகிறேன்…

கோவணத்தோடு
திரிபவரே
நாகரிகத்தில்
அறிவாளியென்றால்

ஆடைகட்டி
நான்
முட்டாளாகவே
ஆசைப்படுகிறேன்

******

காலத்தின்
கடைசிவரை
சோகத்தைச்
சுமப்பவன்தான்

காதலனென்றால்

நேசத்திலும்
நிதர்சனத்தையே
நான்ஆசைப்படுகிறேன்

******

உனக்காகவே
வாழ்வதில்
உனக்கே
வலிக்கிறதா

எனக்காக
ஒருமுறையை
எடுத்துக்கொள்ளவே
ஆசைப்படுகிறேன்

******

எப்படியும்
வாழ்வதில்தான்
சேர்க்கை
உண்டானால்

இப்படியே
பிரிவதையே
ஆசைப்படுகிறேன்.

******

விட்டுக்கொடுப்பு
ஒருபாகம்தான்
விடைசொல்லுமானால்

விட்டுவிடவே
ஆசைப்படுகிறேன்.

******

எப்படிமுடியும்
என்னால்

எமக்கு நடுவே
எதுவந்தாலும்

இப்படியே
இறந்துவிடவே
நான்
ஆசைப்படுகிறேன்.

loading...

About The Author

2 Comments

Comments are closed.