உன் வார்த்தை

நீ மௌனமாகவே இருந்திருக்கலாம்
இதயத்தைக் கூறு போடுகிறது
உன் பேச்சு

மௌனம் கலைத்து
உன் இல்லாத காதலை
சொன்னதை விட
பேசாமலேயே இருந்திருக்கலாம்

உன் இதயம் எனக்கானது இல்லை
என்று சொல்லி என்னைக்
கொல்வதற்கு, நீ
பேசாமலேயே இருந்திருக்கலாம்

உன் ஒவ்வொரு
மௌனத்திலும் வாழ்ந்த
என் காதலுக்காகவாவது நீ
பேசாமலேயே இருந்திருக்கலாம்

loading...

About The Author

5 Comments

  1. priya

    சுபெர்ப் கவிதை…..மனதை கயபடுடுகிரது சில நினைவுகல் இந்த கவிதயை படிதவுடன்….வாழ்துக்கல்

  2. bharani

    நல்ல கவிதை. சில நேரங்களில் மெளனம் பேசுவதைக் காட்டிலும் விரும்பப் படுவதாகவே உள்ளது. உன் இதயம் எனக்கானது இல்லை” என்ற வரிகள், கண்ணீரை வருவிப்பதாக உள்ளது.”

Comments are closed.