கடவுளின் காலடிச் சத்தம் (3)

சர்க்கஸ் நொடித்த வறுமை
கோமாளி வீட்டில்
சிலந்தி வலை

****

கடுமையான குளிரில்
சட்டையை ஏன் கழற்றுகிறான்
ஓ கிழிசல் தைக்கிறான்

****

கண்ணீர் நின்றுவிட்டது
வேடிக்கை பார்க்கிறது குழந்தை
வெளியே மழை

****

பூட்டிய வீட்டில் தொலைபேசி
பதறியெழும்
உத்திரத்துக் குருவி

****

(கடவுளின் காலடிச் சத்தம் – மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

loading...

About The Author