கவிதைகள் (2)

2. கலா.. தமிழரசி..
பாக்கியலட்சுமி, விஷ்ணுப்ரியா
நான்..
எல்லாம் ஒன்றாகத்தான்
படித்தோம்
ஒண்ணாம் வகுப்பு முதல்..
பள்ளி இறுதி வரை..
அவ .. அவ..
எந்த திசையில போனான்னு
இப்ப புரியல..
ஒவ்வொருத்தி கல்யாணத்துக்கு
எல்லாம் போனது போவ..
கடைசீல எங்கல்யாணத்துக்கு
தமிழும் பாக்கியும்தான்
வந்தாங்க..
எத்தன விஷயம்
பேசியிருப்போம் அப்பல்லாம்..
இப்ப பேச நிறையவே
சங்கதி இருக்கு..
சொல்லி அழ
ஆளைத்தான் காணோம்..
எங்கடி போயிட்டீங்க எல்லாரும்..

loading...

About The Author

1 Comment

  1. SANTHOSHI

    அதெல்லாம் சரி. கவிதை எங்கே? இதை எல்லாம் கவிதை என்று பிரசுரம் வேறு பண்ணியிருக்கிறீர்களே!!

Comments are closed.