கவின் குறு நூறு-16

46

முடி வெட்டிவிட முடிவு செய்து
கடைக்குக் கவினைக் கொண்டு போய்
முடி வெட்டாமல் திரும்பினேன்;
கத்தரிக்கோலைக் கேட்டு அப்படி ஒரு அடம்.

47

குறும்புகளின் உலகம் குழந்தையைத்தான்
தியானிக்கிறது; அதன் மூலம்
கற்பனைச் சுவர்க்கத்தின்
கனவுகளைத் திறக்கிறது.

48

கவினிடம் உடைபடுவதில் கிடைக்கும்
இன்பம் எந்தப் பொருளுக்கும்
அதைப் பத்திரப்படுத்தும்
யாரிடமிருந்தும் கிடைப்பதில்லையே!

49

கவினிடம் மணி என்ன என்று கேட்டால்
அவன் சொல்லும் நேரத்தைக்
காட்ட முடியாத கடிகாரம்
ஒரு கணம் நின்றுவிடுகிறது.

loading...

About The Author