கவின் குறு நூறு-30

88

தூங்கும் அம்மா முகத்தில்
மீசை வரைந்த குழந்தை
அப்படியே அப்பா நெற்றியில்
ஒரு பொட்டு வைத்தது.
அப்புறம் கண்ணாடி முன் போய்
நின்று தன் பிம்பத்தின் கன்னத்திலும்
ஒரு பொட்டு வைத்தது.

89

பொம்மைகள் பைக்குள்
போய்ப் பதுங்கின
அடுக்களைப் பொருள்கள்
ஆடுகளம் வந்தன.

90

கிலுகிலுப்பையை உடைத்துவிடாதே
என்ற அப்பா கையில்
கிலுகிலுப்பையாக அவன்
உடைத்த தொலைபேசி.

loading...

About The Author