காதல் பட்ட பாடு

காதலர்கள்,
கணவன் மனைவி ஆனபோது,
காதல் அவர்களை வாழ்த்தியது!
ஊடியபோது,
உள்ளே நுழைந்து, ஒன்றுபடுத்தியது!
சண்டையிட்டபோது,
சமரசம் செய்வித்தது!
முரண்பட்டு நின்றபோது,
முந்நாட்களை நினைவூட்டியது!
பிரிய முனைந்தபோது,
பிளவு வேண்டாமென்று யாசித்தது!
‘உன்னால்தான் யாவும்’ என்றே
இருவரும் இணைந்து
எட்டி உதைத்தபோது,
ஏதும் பேச இயலாமல் திகைத்து நின்றது!

loading...

About The Author

4 Comments

  1. kamalesh

    காதலயும் திருமன வாழ்கைஐயும் நன்ன்ட்ராக விமர்சிகிரது உமது கவிதை

  2. s.kris

    காதல் பிரிந்தாலும் வதைக்கிரது சேர்ன்டாலும் வதைக்கிரது

  3. suganthe

    காதல் திருமனத்திட்கு முன் பின் நல்ல உதாரனம்

Comments are closed.