குறுங்கவிதைகள் (1)

பூமியின் பொறுமைக்கு
வானத்தின் வாழ்த்துக்கள்
மழை.

***

வானம் விரும்பும்
பஞ்சுமிட்டாய்
மேகம்.

***

மேகங்கள் அனைத்தும்
மௌன விரதமாம்
மழை நிறுத்தம்.

***

கலர்க்கலராய் கனவுகள்
காத்திருக்கும் கவிதைகள்
குழாயடிக் குடங்கள்.

***

அறியாமையின்
நீண்ட கனவு
பிரபஞ்சம்.

***

‘யாரோ இல்லை எவரும்’ மின்னூலிலிருந்து

To buy this EBook, Please click here

loading...

About The Author