குறுங்கவிதைகள் (3)

கருப்புப் புடவையை
இழுத்துப் போர்த்திய அடக்கம்
இருள்.

***

காரும் கல்நகைகளும்
கச்சிதமாய் வீடும் போதும்
வேண்டாம் வரதட்சணை.

***

தண்டவாள தந்திகளில்
தாளத்துடன் இசைமீட்டல்
ரயில்.

***

தனித்தனியாய் அமர்ந்து
சேர்ந்து செய்யும் கூட்டுத்தவம்
இலைகள்.

***

அன்பின் ததும்பல் அல்லா
கருணையின் கசிவு கர்த்தர்
நேசத்தின் நெகிழ்வு நெடுமால்.

***

யாரோ இல்லை எவரும்‘ மின்னூலிலிருந்து

To buy this EBook, Please click here

About The Author