குறுங்கவிதைகள் (4)

உயர்ந்து நின்றாலும்
தலைவணங்கும் பணிவு
மரம்.

***

யாரோவானாலும்
நம்மவர் ஆக்கிவிடும்
புன்னகை.

***

நேற்றில் அல்லது நாளையில்
நிகழ்வில் மட்டுமில்லாமல்…
மனம்.

***

வானத்தரசியின் வைரமூக்குத்தி
மின்னலாய் மின்ன
மேக மன்னனின் மத்தள ஒலி
இடியாய் முழங்க
இருவரும் ஆடிய நடனத்தில்
இடையே சிந்திய வியர்வைதான்
மழையோ?

***

(யாரோ இல்லை எவரும் – மின்னூலில் இருந்து.)

To buy the EBook, Please click here

loading...

About The Author