தோல்வி

“இருட்டினிலே உங்களுக்கு
இத்தீபம் வழிஉதவும்
பொருட்டிதனைக் கொண்டு வந்தேன்;
போங்களினிப் பயமின்றி!”

என்றுரைத்தேன் அவர்களிடம்!
ஏனோநான் திரும்புகையில்
முன்னிரவே கங்குவினில்
மூழ்கிவிட்டத் தெருக்களெலாம்

அமைதியிலே ஆழ்ந்திருக்கும்;
ஆங்கதனைத் தாளாமல்
குமைகின்ற நெஞ்சத்தின்
கொந்தளிப்பைக் கொட்டிவிட்டேன்;

“வானவெளிச் சுடரே!நீ
வர்ஷிப்பாய் ஒளிஎன்மேல்;
ஏனென்றால் நானிங்கே
ஏற்றிவைத்த பொன்தீபம்

மடிந்ததனின் துகள்களெலாம்
மண்ணுடனே கலந்துஉயிர்
துடிப்பதனைக் காண்கிலையோ?
துயிலாதே; விழித்துப்பார்!!”

loading...

About The Author

1 Comment

  1. vidhyasan

    யலிய நடை இல் இருந்தால் இன்னும் நன்ராக இருக்கும்.

Comments are closed.