புதுக்கவிதைகள்

தலைமுறை இடைவெளி

எனக்கு மீசை வைக்க
ஆசை வந்தபோது
அப்பாவுக்கு
தலை
நரைத்துவிட்ட்து !

மச்சம்

அசைவப் பிரியரின்
வீட்டில்
அழகான மீன்கள்
நீந்திக் கொண்டிருந்தன-
கண்ணாடித் தொட்டியில்!

சகுனம்

குறுக்கே
நான் வந்தது பற்றி
பூனை கவலைப்படவில்லை!
நான்தான்
சகுனத்தடை என்று
பின்வாங்குகிறேன்!
நான் பேசுவதை
பல்லி பொருட்படுத்துவதில்லை:
நானோ, அது சப்தமிட்டால்
அர்த்தத்தோடு பார்க்கிறேன்;
யோசித்துப் பார்த்தால்
ஐந்தறிவே போதும்,
ஆன்ந்தமாய் இருக்க!”

loading...

About The Author

7 Comments

 1. sankar

  அரவிந்த் சந்திரனின் கவிதை அனைத்தும் அருமையாக இருந்தன.

 2. மீனாட்சி சுந்தரம்

  சார்! உங்க மனசுக்கு வயசு 16 – 20 இருக்குமா
  அசத்தீட்டீங்க போங்க!!!!

 3. அரவிந்த் சந்திரா

  பாராட்டி எழுதிய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி

 4. மணிமகன்

  கவிதைகள் அருமை.சிந்தனைகளுடன் சிறக்கின்றன.பாராட்டுகள்

Comments are closed.