மௌனமாய் உன் முன்னே(5)

பார்த்தும் பார்க்காது
சென்றாய்

கோபமாய் இருப்பதை
நான் அறிந்து கொள்ளவாம்

விழிகள் நீ அறியாது
விசாரித்தன நலமாவென
இதழ்கள் நீ அறியாது
இனிதாய் நகைத்தன

நெற்றியில் ஆடும்
ஒற்றை முடிக்கற்றை
சற்றே அருகில் வா என்றது
முற்றிலும் வினயமாய்

அத்தனை பிரியமா உனக்கு
நான்

மொத்த உடல்மொழியும்
மொத்தமாய் சதி செய்கிறதே
எத்தனை காலமானாலும்
இத்தனை அழகை ரசித்திட

கோடிக்கண்கள் போதாது
கோபத்துடனேயே இரு

(‘மௌனமாய் உன் முன்னே’ -மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

loading...

About The Author