ரிஷபன் கவிதைகள் (2)

விரட்டாதீர்கள்.
எதையும்.. யாரையும்..
நம் வாசலுக்கு வந்ததாலேயே
அவர்கள் மதிப்பிழந்து போகவில்லை..

ஒவ்வொரு இதயக் கதவையும்
தட்டிப் பார்த்து
ஈரம் உணர்த்திப் போகிறார்கள்.
வாழ்வின் சாரம்
எடுப்பதில் அல்ல..
கொடுப்பதில்தான்..

பகிர்தலுக்கான நேரம்
வரும்போது
அவர்கள் தாமாகவே
நம்மிடம் வருகிறார்கள்..

கதவுகளை மூடி வைத்தாலும்
இமைக் கதவுகள்
திறந்துதானிருக்கும்.
எதற்கும் சாட்சியாய்..

loading...

About The Author