வினைத்தொகை நான்கு குறிப்புகள் (2)

3. சதா இயங்கியபடியிருக்கும்

நம் ஆடுபாதத்தை

நிச்சலனமாக்கி

வினைத்தொகையை

வெற்றாக்கி

விண்ணில் பறக்கலாம்

சொன்னான் சித்தன்

வருவாயா உன்

தலைச்சுமையிறக்கி

விண்ணில் பறக்க?

4. சூத்திரம் ஒன்று:

ஆடுபாம்பு=ஆடியபாம்பு

+ஆடும்பாம்பு

+ஆடப்போகும் பாம்பு

சூத்திரம் இரண்டு:

ஆடுபாம்பு=நீ+நான்

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

loading...

About The Author