விரல் தொட்ட வானம் (14)-நாணயம்

நாணயம்

கீழ்நோக்கி இறங்குகிறது
சுண்டிவிடப்பட்ட
நாணயம்.
எல்லோருடைய பார்வையிலும்
இருக்கிறது
தான் மட்டுமே
மேலே வரவேண்டும்
என்கிற ஆசை.

அன்பின் அடையாளமாய்

பூக்கள்
மௌனம் சூடிக்கொள்கின்றன
பூங்காவை விட்டு
நீ
வெளிநடப்பு செய்த பிறகு!
பாலைவனம்
பூக்க ஆரம்பித்துவிட்டது
உன் பாதம் பட்ட பிறகு!
அன்பின் அடையாளமாய்
பனித்துளிகளைப்
பரிசளிக்கக் காத்திருக்கிறேன்.
வந்துவிடு
சூரியனை முந்திக் கொண்டு!

–தொட்டுத் தொடரும்…

About The Author