ஹைகூ கவிதைகள்

உதவலாம் வாங்க

மீன்கள் சுவாசிக்க
அலைகள் பறித்துவரும்
காற்று!

ஒன்றே தேவன்

சுப்ரமணிய சாமி கோவில்
சிவபிரகாசம் உபயம்
பூ தொடுப்பாள் பார்வதி

துணை வெல்லும்

கொண்டை சேவல் கூவ
விழித்துக்கொள்கிறான்
ஆதவன்

எழுதி வைப்பான்

ஐந்து ரூபாய் கரும்பு சாறு
அப்பாவின் பெட்டிக்கடையில்
கடித்தே சுவைக்கும் பையன்

loading...

About The Author