கவின் குறு நூறு (16-18)

16
தெருவில் யானையைப் பார்த்துவிட்ட
கவின், கேட்டான்
‘என் புத்தகத்தில் ஏன் யானை
இப்படிச் சின்னதாய்ப் போனது?’

17
நடைவண்டியை உருட்டிக் கொண்டே வந்த
பேரன் ‘இனி இதை நீ வச்சுக்க
இதை நான் எடுத்துக்கிறேன்’ என்று
வீட்டுக்கு வந்த பாட்டியின்
ஊன்றுகோலைத் தூக்கிக்கொண்டு
ஓடினான்.

18
அப்பாவின் கண்ணாடியைப்
பொம்மைக்குப் போட்டுவிட்டவன்
படிக்கும்படி சொல்லிப்
புத்தகம் எடுத்துக்கொடுத்தான்.

About The Author

1 Comment

  1. sankar P.K

    கருத்தாழம் மிக்க கவின்மிகு கவிதைகள். தமிழன்பனின்
    கற்பனைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

Comments are closed.