பருப்பு உசிலி

(வாழைப்பூ, பீன்ஸ், கொத்தவரங்காய், முட்டைகோஸ்,வெங்காயம் ஆகிய காய்களில் இதை செய்யலாம்.)

தேவையான பொருட்கள் :

உப்பு தேவையான அளவு

(இரண்டு மணிநேரம் ஊற வைக்க வேண்டியவை)

துவரம் பருப்பு 1 கப்
கடலைப் பருப்பு 1/2 கப்
உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

வெங்காயத்தைத் தவிர ஏனைய காய்களில் செய்வதற்கு: முதலில் காயை நறுக்கி தனியாக உப்பு போட்டு வேக வைத்து தண்ணீர் போக வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஊறிய பருப்புகளுடன் மிளகாய் வற்றல்,பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து (தண்ணீர் ஊற்றக்கூடாது. தேவையென்றால் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்) இட்லிபானையில் வைத்து வேக விடவும். நன்றாக வெந்ததும் இறக்கி ஆற வைத்து கைகளால் உதிர்க்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உதிர்த்தவற்றைப் போட்டு கிளறவும். சிறிது நேரத்தில் மேலும் நன்றாக உதிர்ந்து விடும். வேக வைத்து வடிய வைத்திருக்கும் காயை கைகளால் பிழிந்து உசிலியில் போடவும். காயும், உசிலியும் சேர்ந்து கலக்கும் வரை கிளறி தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து அடுப்பை அணைக்கவும்.

வெங்காயப் பருப்புசிலிக்கு வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி பின் உசிலியில் சேர்க்க வேண்டும்.

வற்றல் மிளகாய் – 8
பெருங்காயம் 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
கடுகு 2 டீஸ்பூன்
எண்ணெய் ( தாளிக்க) 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்

loading...

About The Author