பால் போண்டா மற்றும் முளைப்பயறு கீர்

பால் போண்டா

தேவையான பொருட்கள்:

மைதா – 1/4 கிலோ
ரவை – 1/4 கிலோ
சர்க்கரை – 1/4 கிலோ
ஏலக்காய் – 3
வாழைப்பழம் – 2
சோடா – சிறிது
பால் – தேவையான அளவு
பொறிப்பதற்கு தேவையான எண்ணெய்

செய்முறை:

வாழைப்பழத்தை துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து நன்றாக மசித்துப் பிசையவும். பின் அரை மணி நேரம் வைத்திருக்கவும். தேவையான அளவு எண்ணெயைக் காய வைத்து, நன்கு காய்ந்த பிறகு சிறு சிறு உருண்டைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

***********

முளைப்பயறு கீர்

தேவையான பொருட்கள்:

முளை கட்டிய பயறு – 100 கிராம்
வேர்க்கடலை – 25 கிராம்
வாழைப்பழம் – 2

செய்முறை :

முளைப்பயறுடன் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை பருப்பையும், வாழைப்பழத் துண்டுகளையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்கவும் இறக்கி ஆற வைத்து பின் சாப்பிடலாம்.

*************

loading...

About The Author