ரவை பணியாரம்

தேவையான பொருட்கள் :

ரவை – 1 கப்
சர்க்கரை – 3/4 கப்
ஏலக்காய் – 3
எண்ணெய் – பொறிக்க தேவைக்கேற்ப.

செய்முறை :

ரவையை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின்னர், மிக்சியில் ரவையை நன்றாக அரைத்துக் கொண்டு சர்க்கரையும், ஏலக்காயும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது சிறிது எண்ணெய் ஊற்றி, மட்டான தழலில் ரவைக் கலவையை ஊற்றி இரு புறமும் பொன்னிறமாக வரும்படி சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

loading...

About The Author