வெந்தய பாயசம்

பருப்பு பாயசம்

தேவையான பொருட்கள் :

பயத்தம்பருப்பு – 1 கப்
நெய் – சிறிது
வெல்லம் – 1 கப்
ஏலப்பொடி, தேங்காய்ப்பால் – தேவைக்கேற்ப
வறுத்த தேங்காய்ப்பூ – தேவையானால்.

செய்முறை :

பருப்பை நன்றாகக் கழுவி சிறிது நேரம் ஊற வைத்த பின், வேக வைத்து மசித்துக் கொள்ளவும். அதே அளவு வெல்லத்தை சிறிது நீர் சேர்த்துக் காய்ச்சி பாகு வைத்துக் கொள்ளவும். கரைந்த பின்னால் வெந்து மசித்த பயத்தம் பருப்புடன் சேர்த்து நன்றாகக் கலந்து விட்டு ஏலப்பொடி சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரித் துண்டுகளைப் போட்டு தேங்காய்ப்பால் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

******

வெந்தய பாயசம்

தேவையான பொருட்கள் :

அரிசி – கால் கப்
வெந்தயம் – ஒரு மேசைக் கரண்டி
தேங்காய் – 1
பூண்டு – தேவையானால்
கருப்பட்டி (அ) வெல்லம் – தேவைக்கேற்ப

செய்முறை :

முந்தைய இரவில் கால் கப் அரிசியுடன் ஒரு மேசைக்கரண்டி வெந்தயத்தைப் போட்டு நீரில் ஊற வைக்கவும். ஒரு பெரிய தேங்காயைத் துருவி வெந்நீரைச் சேர்த்துப் பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். அதே தேங்காய் துருவலில் மீண்டும் வெந்நீரைச் சேர்த்துப் பிழிந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மறுநாள், இரண்டாவது பாலுடன் அரிசியையும், வெந்தயத்தையும் (விரும்பினால் சில பூண்டு பற்கள் சேர்க்கலாம்) சேர்த்து ஐந்தாறு விசில்கள் வரும் வரை வேக வைக்கவும். நன்கு வெந்ததும் குழிக்கரண்டியால் நன்றாக மசிக்கவும்.. அல்லது மிக்சியில் ஊற்றி ஓரிரு நிமிடங்கள் ஓடவிடலாம். இதனுடன் தேவையான கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்துக் கரையும் வரையில் கொதிக்க வைக்கவும். இறுதியில் முதல் தேங்காய்ப் பாலை சேர்த்து இறக்கவும். மிகவும் சுவையான சத்துள்ள பானம் இது.

loading...

About The Author