ஆட்டுக் கறி வறுவல்

தேவையான பொருட்கள்:

ஆட்டுக் கறி – 500 கிராம்
வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 3
காய்ந்த மிளகாய் – 5
இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி,
மிளகு – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய் – தேவையான அளவு
கொத்துமல்லி – சிறிதளவு
பட்டை – தாளிக்க

செய்முறை:

கறியை நன்கு கழுவி, தேவையான அளவு தண்ணீருடன் குக்கரில் போட்டு மூடி, பதினைந்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.
தண்ணீர் முழுவதும் சுண்ட விட வேண்டும்.

மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து , ஒரு டேபிள் ஸ்பூன் உப்புச் சேர்த்து விழுதாக அரைத்து, கறியில் போட்டுப் பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும்.

வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயைச் சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, பட்டை போட்டுத் தாளிக்க வேண்டும்.

வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு எல்லாவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.

வதங்கியதும் கறிக் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பைச் சிறு தீயில் வைக்க வேண்டும். அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்ணீர் வற்றியதும் சிறிதளவு கொத்துமல்லி தூவி இறக்க வேண்டியதுதான்.

சுவையான ‘ஆட்டுக்கறி வறுவல்‘ தயார்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author