இறால் மசாலா

தேவையான பொருட்கள்:

இறால் – ½ கிலோ,
வெங்காயம் – 2,
தக்காளி – 1,
ஸ்பிரிங் ஆனியன் (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு,
இஞ்சி – சிறிய துண்டு,
பூண்டு – 10 பற்கள்,
பச்சை மிளகாய் – 3,
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி,
சோயா சாஸ் – ¼ மேசைக் கரண்டி,
வினிகர் – 1 மேசைக் கரண்டி,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,
சில்லி சாஸ் – 2 மேசைக் கரண்டி,
சர்க்கரை – ½ தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் முதலியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

இறாலை ஓடு நீக்கி சுத்தம் செய்த பின், முதுகுப்புறம் கீறிக் கருப்பு நிறத்தில் தெரிகின்ற நரம்பை எடுத்து விட வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள், சோயா சாஸ், வினிகர் மூன்றையும் சிட்டிகை உப்புடன் கலந்து இறாலில் தடவி 30 நிமிடம் ஊற விடுங்கள்.

ஊறிய இறாலை ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் போட்டுப் பொரித்தெடுத்துத் தனியே வைத்துக் கொள்ளுங்கள்.

அதே எண்ணெயில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, சில்லி சாஸ், உப்பு, மீதமுள்ள வினிகர், சர்க்கரை எல்லாவற்றையும் போட்டுக் கலந்து மீதமான தீயில் 5 நிமிடம் கிளறுங்கள்.

பின், பொரித்து வைத்துள்ள இறாலைப் போட்டு இறக்கி ஸ்பிரிங் ஆனியன் தூவிச் சுடச் சுடப் பரிமாறுங்கள்!

புதுமையான இந்த இறால் மசாலாவைச் சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

About The Author