ஓட்ஸ் கேசரி

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 200 கிராம்
சர்க்கரை – 100 கிராம்
ஏலக்காய் – 3
நெய் – 2 மேசைக்கரண்டி
கேசரி பவுடர் – ¼ தேக்கரண்டி
முந்திரி, திராட்சை – தேவையான அளவு

செய்முறை :

ஓட்ஸை தண்ணீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து, பின்பு தண்ணீரை வடிகட்டியால் வடிகட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஓட்ஸ் ஊறி மிருதுவாக இருக்கும்.

ஒரு வாணலியை மிதமான தீயில் வைத்து ஓட்ஸ், சர்க்கரை, கேசரி பவுடர் மூன்றையும் சேர்த்துப் போட்டு கிளற வேண்டும்.

கொஞ்சம் கெட்டியாக ஆகி வரும்போது, நெய்யில் வறுத்த ஏலக்காய், திராட்சை மற்றும் முந்திரி ஆகியவற்றைத் தூவி இறக்கி விட்டால் போதும். சூடான சுவையான ஓட்ஸ் கேசரி தயார்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author