குடமிளகாய் சாதம்

தேவையான பொருட்கள்

குடை மிளகாய் – 2
பாஸ்மதி அரிசி – 1 கப்
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
கடுகு – 1/2 தே.கரண்டி
சீரகம் – 1/2 தே.கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
உளுந்தம் பருப்பு – 1 தே.கரண்டி
வேர்க்கடலை – 2 தே.கரண்டி
கருவேப்பில்லை – 5 இலை
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் (அல்லது) நெய் – 2 தே.கரண்டி
தேங்காய் துறுவல் – 2 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. முதலில் குடை மிளகாயை விதைகளை நீக்கிப் பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. பாஸ்மதி அரிசியை 2 தம்ளர் தண்ணீருடன் 1 தே.கரண்டி எண்ணெய் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

3. இப்பொழுது ஒரு கடாயில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் ,உளுந்தம்பருப்பு, வேர்க்கடலை ஆகியவைகளைப் போட்டு நன்றாக வறுக்கவும்.

4. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள குடை மிளகாய், கருவேப்பில்லை மற்றும் மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.

5. வறுத்து வைத்துள்ள பொருட்களை மிக்ஸியில் கொஞ்சம் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

6. குடை மிளகாய் பாதி வெந்ததும், அதில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து கிளறி வேகவிடவும்..

7. கடைசியில் தேங்காய் துறுவல் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கிளறவும். அதன் பின் பாஸ்மதி சாதத்தை இத்துடன் சேர்த்து நன்றாகக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

About The Author