குல்ஃபி ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள் :

பால் – 1 லிட்டர்
பாதாம் பருப்பு – 10 கிராம்
முந்திரிப் பருப்பு – 10 கிராம்
பிஸ்தா – 10 கிராம்
ஜெலடின் – 1 தேக்கரண்டி
ரோஸ் எஸ்ஸென்ஸ் – 1/4 தேக்கரண்டி
பொடித்த சர்க்கரை – 8 தேக்கரண்டி

குறிப்பு : குல்ஃபி செய்வதற்கு பிளாஸ்டிக் அச்சுகளை (Moulds) விட அலுமினிய அச்சுகளே சிறந்தவை.

செய்முறை :

பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளை வெந்நீரில் ஊற வைத்து உரித்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை சூடான பாலில் ஊற வைத்து எல்லாவற்றையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பாலை மட்டான தழலில் வைத்து அரை லிட்டராகக் குறுக்கிக் கொள்ள வேண்டும். ஜெலட்டினைச் சற்று வெதுவெதுப்பான நீரில் கலந்து பாலுடன் சேர்க்க வேண்டும்.

பின் பொடித்த சர்க்கரையையும், அரைத்த பருப்பு விழுதையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும். ரோஸ் எஸ்ஸென்சையும் கலந்து நன்றாக கலக்கி விடவும்.

அச்சுகளில் வெண்ணெய் அல்லது நெய் தடவி, கலவையை அதனுள் ஊற்றி உறையத்தில் (Freezer) வைத்தால் இரண்டு மணி நேரத்தில் குல்ஃபி தயார்.

About The Author