சேமியா கேசரி

தேவையான பொருட்கள்:

சேமியா – 400 கிராம்
சர்க்கரை – 300 கிராம்
தண்ணீர் – 5 கோப்பை
நெய் – தேவையான அளவு
முந்திரிப் பருப்பு – 25 கிராம்
ஏலக்காய் – 5
கேசரிப் பொடி – சிறிதளவு

செய்முறை
:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது நெய்யில் சேமியா, முந்திரிப் பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளுங்கள்.

மற்றோர் அடுப்பில், ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வையுங்கள்.

கொதித்ததும் வறுத்து வைத்துள்ள சேமியாவைப் போட்டுக் கிளறி வேக விடுங்கள்.

சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்த்து, மேலும் கொஞ்சம் நெய், கேசரிப் பொடி போட்டுக் கிளறி இறக்க வேண்டும்.

பிறகு முந்திரிப் பருப்பு, பொடி செய்த ஏலக்காய் ஆகியவற்றால் அலங்கரிக்க, சுவையான ‘சேமியா கேசரி‘ தயார்! சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author