நார்த்தம்பழம் சாதம்

தேவையான பொருட்கள்:

உதிரியாக வடித்த சாதம் – ஒரு கோப்பை,
நார்த்தம்பழம் – இரண்டு (பிழிந்து சாறாக வைத்துக்கொள்ளவும்),
மஞ்சள் – அரை தேக்கரண்டி,
சிகப்பு மிளகாய் -மூன்று ,
பச்சை மிளகாய் – இரண்டு,
தேவையான அளவு – உப்பு,
நல்லெண்ணெய்-இரண்டு மேசைக்கரண்டி,
சிறிது கொத்துமல்லி,
சிறிது கறிவேப்பிலை ,
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி,
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி.

செய்முறை:
சாதத்தை சூடாகத் தயாரித்துக் கொள்ளவும்.

தாளிக்கும் கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு , உளுத்தம்பருப்பு தாளித்துக் கொண்டு , சிகப்பு மிளகாய் துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் மஞ்சள் பொடி, கறிவேப்பில ஆகியவற்றைச் சேர்த்து தாளித்து சாதத்தில் கொட்டி , பிழிந்து வைத்த நார்த்தம்பழச் சாற்றையும் , உப்பையும் சேர்த்து, நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்து சூடாகப் பிசையவும். அதன் மீது கொத்துமல்லித் தழைகளைத் தூவி அலங்கரிக்கவும். குளிர் காலத்தில் சுடு சாதத்துடன் கலந்து சாப்பிட சுவைக்கு சுவை, மருந்திற்கு மருந்து.”

About The Author