நெல்லிக்காய் சட்னி

வைட்டமின் c நிறைந்த மலை நெல்லிக்காய்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தவை. நம் தினசரி உணவில் அவற்றை சட்னி, துவையல், ஊறுகாய், ஜாம் எனப் பலவகைகளில் பய‎ன்படுத்திப் பயன் பெறலாம்.

நெல்லிக்காய் சட்னி செய்முறையை ‏இங்கே காணலாம். வரும் வாரங்களில் இதர வகைகளையும் காண்போம்.

நெல்லிக்காய் சட்னி

முதல் முறை :

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய்கள் – ஆறு
பச்சை மிளகாய் – நான்கு
இஞ்சி – ஒரு சிறு துண்டு
சுவைக்கு – தேவையான உப்பு
தேங்காய்த்துருவல் – 1/4 கப்
தாளிக்க – எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு

செய்முறை:

நெல்லிக்காய்களை நன்றாகக் கழுவிக் கொ¡ண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொண்டு, பச்சை மிளகாயைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். மிக்சியில் நெல்லிக்காய்களுடன் பச்சை மிளகாயையும், இஞ்சித் துண்டுகளையும், தேங்காய்த் துருவல், உப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ‏இறுதியில் கடுகு, உளுத்தம்பருப்பைத் தாளித்துக் கொட்டவும்.

இரண்டாம் முறை :

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய்கள் – பத்து
பச்சை மிளகாய்கள் – ஐந்து
தேங்காய்த்துருவல் – இரண்டு மேசைக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
தாளிக்க – எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை

செய்முறை:

கழுவிய நெல்லிக்காய்களையும், பச்சை மிளகாய்களையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயைக் காய வைத்து நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கவும். பி‎ன் பச்சை மிளகாய் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும். அத‎ன்பின் தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். வதக்கிய கலவையை அரைத்துக் கொள்ளுங்கள்.

சுவையான நெல்லிக்காய் சட்னி தயார். தோசை, சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் பய‎ன்படுத்திப் பாருங்கள். அருமையாக இ‏ருக்கும்.

About The Author

1 Comment

  1. vasenthi

    சுவையாக இருக்குமா அதெர்கும் செதுபர்கிரென்

Comments are closed.