மசால் வடை

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 1 கோப்பை,

கடலைப்பருப்பு – ½ கோப்பை,

உளுத்தம் பருப்பு – ½ கோப்பை,

பயத்தம் பருப்பு – ½ கோப்பை,

பச்சை மிளகாய் – பதினைந்து,

தேங்காய்த் துருவல் – 2 மேசைக்கரண்டி,

கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு,

இஞ்சி – ஒரு சிறு துண்டு,

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

பருப்பு வகைகள் எல்லாவற்றையும் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அவற்றுள், முதலில் உளுத்தம் பருப்பை அரைத்து எடுத்துக் கொண்டு மீதி எல்லாவற்றையும் அதனுடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். மாவு அரைவதற்குள் பச்சை மிளகாயைச் சின்னஞ்சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இஞ்சியையும் தோல் சீவி அதே போல் நறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு, மேலே உள்ள பட்டியலில் மிளகாய் முதல் இஞ்சி வரையான அனைத்தையும் மாவில் கலந்து கொண்டு, எண்ணெயைச் சூடாக்கி வடைகளாகத் தட்டி பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள். சுடச்சுட மசால் வடை தயார்!

பி.கு: மாவை இட்லி மாவு போல் குழைவாக இல்லாமல், கரகரப்பாக அரைக்க வேண்டும். அப்பொழுதுதான் மசால் வடை மொறுமொறுப்பாக வரும்.

About The Author