மைதா பால் பேணி

தேவையானவை:

மைதா – 1 கோப்பை
பால் – 1 கோப்பை
சர்க்கரை – 1½ கோப்பை
புது கிரீம் – 3 மேசைக்கரண்டி
ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
நெய் – 1 மேசைக் கரண்டி
தண்ணீர், எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையையும், தண்ணீரையும் கலந்து அடுப்பில் வையுங்கள். கம்பிப் பதம் வரும் வரை கொதிக்கவிடுங்கள். பிறகு இறக்கி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்க்க வேண்டும்.

புது (fresh) கிரீமை நன்கு கடைந்து, அதனுடன் பால், மைதா, நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வாணலியை மிதமான தீயில் வைத்து, எண்ணெயைக் காய வைத்து, கரைத்து வைத்துள்ள மாவை அதில் ஒரு கரண்டி எடுத்து ஊற்றுங்கள்.

இருபுறமும் திருப்பி, நன்கு வேகவிட்டு எடுத்துச் சர்க்கரைப் பாகில் போட வேண்டும்.

அவ்வளவுதான், சுவையான ‘ மைதா பால் பேணி’ தயார்! சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்த பேணிகளை ஒரு தட்டில் அடுக்கி, மீதமுள்ள பாகை அவற்றின் மேல் ஊற்றிப் பரிமாற வேண்டியதுதான்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author