வெஜிடபிள் பாத்

தேவையானவை:

பாசுமதி அரிசி – 1 கோப்பை,
பச்சைப் பட்டாணி – ¼ கோப்பை,
உருளைக்கிழங்கு – 1,
கத்திரிக்காய் – 1,
பெரிய வெங்காயம் – 1,
பெரிய தக்காளி-1
பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை – 2 மேசைக்கரண்டி,
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி,
உப்பு -சுவைக்கேற்ப,
தனியாத் தூள்- 2 தேக்கரண்டி,
சீரகத்தூள் – 2 தேக்கரண்டி,
மிளகாய்தூள் – 2 தேக்கரண்டி,
கரம் மசாலாத்தூள் – ¾ தேக்கரண்டி,
எண்ணெய் – ஒன்றரை மேசைக்கரண்டி,

அரைப்பதற்கு:

தேங்காய்த் துருவல் – 2 மேசைக்கரண்டி,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு – 5 அல்லது 6 பல்.

செய்முறை:

அரிசியைக் கழுவித் தண்ணீரை இறுத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காயையும், உருளைக்கிழங்கையும் சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது, அடுப்பில் குக்கரை வையுங்கள். குக்கர் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு இலேசாக வதக்குங்கள். பிறகு தக்காளி, பட்டாணி, கத்திரிக்காய், உருளைக்கிழங்கு துண்டுகளையும் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, கரம் மசாலா, மஞ்சள்தூள், தனியாத் தூள், சீரகத்தூள் ஆகியவற்றையும் சேருங்கள்.

அதில் 2 கோப்பை நீர் விட்டு, உப்பு போட்டுக் கொதிக்கவிடுங்கள். நீர் கொதித்ததும் அரிசியைப் போட்டுக் குக்கரை மூடி, வெயிட் போடவேண்டும். ஒரு விசில் வந்தவுடன் நிறுத்தி விடலாம்.

பிறகு, இறக்கி மல்லித்தழை தூவிச் சுடச் சுடப் பரிமாறுங்கள்! மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author