வெண்டைக்காய் மோர்க் குழம்பு.

தேவையான பொருட்கள்:
தயிர் – 2 கோப்பை,
வெண்டைக்காய் – 250 கிராம்,
மஞ்சள் பொடி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி,
வெங்காயம் – 1,
மிளகாய் வற்றல் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு,
சீரகம் – அரை தேக்கரண்டி,
சமையல் எண்ணெய் – தேவையான அளவு.

அரைக்க:
அரிசி – 1 மேசைக் கரண்டி,
துவரம்பருப்பு – 1 தேக்கரண்டி,
சிறிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 2.

செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை முதலில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தயிரைத் தேவையான நீர் விட்டு மோராக்கிக் கொள்ளுங்கள்.
வெங்காயம், வெண்டைக்காய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மிளகாய் வற்றல், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு, பொரிந்ததும் வெங்காயம், வெண்டைக்காய் ஆகியவற்றைப் போட்டு வதக்குங்கள். பிறகு, அதில் தண்ணீர் விட்டு வேக வையுங்கள். பாதியளவு வெந்த பிறகு அரைத்த விழுது, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றைப் போட்டுக் கிளற வேண்டும்.
காய் நன்கு வெந்ததும், மோரை அதில் கலந்து, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், சிறிது கறிவேப்பிலை போட்டு, இறக்கி வைத்து ஆற விடுங்கள். சுவையான வெண்டைக்காய் மோர்க்குழம்பு தயார்.
சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

About The Author