சில்லுனு ஒரு அரட்டை

வந்தனம்! வந்தனம்!

வாசகர்கள் எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு சாரி, சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

புது வருசத்தில இதை கண்டிப்பா செய்யனும்,அதை செய்யக் கூடாது அப்படின்னு ஒரு பெரிய லிஸ்ட் வைச்சிருப்பீங்களே.
எல்லாத்தையும் செய்யாட்டியும் ஒன்னையாவது மறக்காம செய்யுங்க.

ரிஷிகிட்டே உங்க புது வருட சபதம் என்னன்னு கேட்டா, ஒன்றா இரண்டா ஆசைகளுன்னு சொல்லி என்னைச் சிரிக்க வைச்சுட்டாரு. ரிஷியோட நகைச்சுவையைப் பத்திதான் உங்க எல்லோருக்கும் தெரியுமே. அவரோட ஜோக்ஸ் பகுதி அரை சென்சுரி அடிச்சிருச்சு. அதில ஒருபகுதியை நீங்க ரசிக்க:

http://www.nilacharal.com/ocms/log/11240817.asp

எடிட்டரம்மா நிலாச்சாரலில் வந்த கதைகள், கட்டுரைகளை மின் புத்தகமாக போடறாங்க. ரிஷியோட ஜோக்ஸ் பகுதியையும் ஒரு புத்தகமாக்கலாம். அதை வாங்கிப் படிச்சிட்டு யாராவது ரிஷியை அடிக்க வந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாதுன்னு வாசகர்களாகிய உங்களை சாட்சியா வைச்சு சொல்லிக்கிறேன்.

புத்தகம்னு சொன்னதும் நான் சமீபத்தில படிக்க நேர்ந்த “Imagining India” பத்தி சில விஷயங்களை சொல்லனும். இன்ஃபோசிஸின் ஆரம்ப நாட்களில் உடனிருந்த நந்தன் நிலாக்னியால் எழுதப்பட்ட இந்த புத்தகம் கலாமோட ‘இந்தியா 2020’ கனவை நனவாக்கும் வழிகளைச் சொல்லுது.

ஸ்லாம்டாக் மில்லியனர் எடுக்கப்பட்ட மும்பை தராவி பகுதியில் பலரும் குடிசைத் தொழிலாய் பல வேலைகளை செய்யறாங்க. அவங்களுக்கெல்லாம் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் இருக்கிற மாதிரி SSN (Social Security Number) கொடுத்து, அரசாங்கத்தோட தொழில் உதவி, கடன்கள் எல்லாம் நேரடியாக அவங்களோட வங்கிக் கணக்குக்கு அனுப்பினால் இடையே நடக்கும் லஞ்ச,லாவண்யங்களைத் தடுக்கலாம்னு யோசனை சொல்லியிருகிறார் ஆசிரியர். அப்படியும் நம்ம மக்கள் ஏமாத்த மாட்டாங்க அல்லது ஏமாற்றப்பட மாட்டார்கள் என்கிறதுக்கு உத்தரவாதம் இல்லை.

இன்ஃபோசிஸ் ஆரம்பித்த நாரயண மூர்த்தி, சுதா நாரயண மூர்த்தியின் சுயசரிதையிலிருந்து சில பகுதிகளைப் படிக்க:

http://www.nilacharal.com/ocms/log/12010808.asp

ஏமாத்தறது இந்தியாவுல மட்டும்தான். அமெரிக்காவில எல்லாம் நடக்காதுன்னு நினைக்காதீங்க. Have a good day னு சொல்லிக்கிட்டே ஏமாத்தறதை நான் பாத்திருக்கேன். ஒரேயொரு வித்தியாசம் நாம சின்ன விஷயத்தில ஏமாத்தினா அமெரிக்காவில டெக்னிகலா ஏமாத்தறாங்க.

காரில்லாதவங்க வார இறுதியில வாடகைக்கு எடுத்து கடைகளுக்குப் போவதுண்டு. அப்படி முதல் முறை கார் வாடகைக்கு எடுத்தப்ப,எங்களுக்கும், நண்பருக்கும் வந்த பில்லில் அதிக வித்தியாசம் இருந்தது. ஒரே மாடல் கார், பயன்படுத்திய நேரமும் ஒன்றாகவே இருந்தும் பில்லில் வித்தியாசம். நண்பரிடம் கேட்ட போதுதான் தெரிந்தது நாங்க ஏமாந்திட்டோம்னு. கார் புக் பண்ணும் போது கார் வாடகை + இன்சுரன்ஸ் + கொலீஸன் டேமேஜ் எல்லாத்துக்கும் சேர்த்து பணம் கட்டணும். அதில கொலீஸன் டேமேஜ் அப்படிங்கறதுக்கு மட்டும் அதிக பணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனா நண்பர் டேமேஜுக்கு பணம் கட்டலை. அவரிடம் விசாரித்த போது நம்மிடமுள்ள விசா கார்டே அதுக்கும் பொறுப்பேத்துக்கும்னு சொன்னார்.

இப்படி துப்பு துலக்கி தப்பைக் கண்டுபிடிச்சு, கார் வாடகை நிறுவனத்தில கேட்டா, அதையெல்லாம் நாங்க சொல்லமாட்டோம். நீங்கதான் பாத்துக்கணும் அப்படினு சொல்லிட்டாங்க. நீங்களாவது ஏமாறாம இருங்க.

www.visa.com

நம்ம அரசியல்வாதிங்ககிட்ட நாம ஏமாறது சகஜம். தேர்தல் நேரத்தில ‘அதைச் செய்யறோம் இதைச் செய்யறோம்’னு சொல்லறதுல எது நடக்குதோ இல்லையோ நல்லா சிரிக்க முடியுது. அரசியல்வாதிகளிடம் இருக்கிற நகைச்சுவை பத்தி ஜ.ப.ர. எழுதிய கட்டுரை நல்ல உதாரணம்:

http://www.nilacharal.com/ocms/log/03090903.asp

எந்த சேனலைத் திருப்பினாலும் மெகா சீரியல்,தேர்தல் நியூஸ்ன்னு இருக்க, ஒரு சேஞ்சுக்கு சன் டிவியோட ராமாயணம் தொடர் பார்த்தேன்.அசந்து போயிட்டேன். எனக்கு 10 வயசு இருக்கும் போது தூர்தர்ஷன்ல வந்த ராமாயணத்தில கதை மாந்தர்கள் பேசறதுக்கும், வாயசப்புக்கும் சம்பந்தமே இருக்காது. சன் டிவி ராமாயணத்தில் தமிழை ரசிக்க முடியுது.
முழுக்க செந்தமிழாய் இருந்தாலும் புரியற மாதிரி படைச்சிருக்காங்க.

நமக்குப் பெருமை சேர்க்கிற இன்னொரு காவியம் மகாபாரதம். அதை ACD வடிவத்திலே வாங்க, நிலாஷாப்புக்கு வாங்க:

http://www.nilashop.com/product_info.php?products_id=1010

மீண்டும் சந்திக்கும் வரை, இந்த புத்தாண்டு உங்களுக்கு அன்பையும், ஆரோக்கியத்தையும் வாரி வழங்க வாழ்த்துகளுடன்

சிங்கி.

loading...

About The Author

3 Comments

 1. maleek

  புதிதாக இங்கு வருபவர்களும் நீங்கள் சொன்ன சிக்கலை சந்திக்கிறார்கள் என்பது உண்மை தான்.அமெரிக்காவில் எங்கு சென்றாலும் இதே மாதிரி தான் எல்லா கார் வாடகை நிறுவனங்களும் செய்யும்.இது ஏமாற்று வேலை என்றெல்லாம் சொல்வதற்கில்லை-தவிரவும் அமெரிக்கா என்றால் எல்லாமே இங்கு படு சுத்தம் என்று நாம் நினத்தால் அது இவர்கள் குற்றமா?ஹேவ் எ குட் டே!.

 2. Dr. S. Subramanian

  சன் டீ வீ யில் ராமாயணமா? அவர்கள் எப்போது ராம பக்தர்களானார்கள்? ஓ இல்லையா? பண பக்தர்கள் என்கிறீர்களா? ஆமாம் பணம் என்றால்……..
  அடுத்து கலைங்யர் டீ வீ யில் மகிஷாசுர மர்தனி தான் தினமும்!

 3. Dr. S Subramanian

  Regarding the overcharging for the rental car here is the fact. In the US there is a saying caveat emptor” (buyer beware). The seller of a service, goods or any other device wants to get the maximum price (aand profit). Accordingly they add “bells and whistles” to their products/services. One has to be aware of that and ask for breakdown of the charges and if each one is necessary. At that time the seller has to give out the details. The buyer can then reject those features which he does not want. So technically the car rental company is not cheating but is “maximizing” their profits. Gullible people will be taken.”

Comments are closed.