சில்லுனு ஒரு அரட்டை !

Helloo ! Hai !

How are you guys?. Wait…

இது நிலாச்சாரல் பக்கமில்லைன்னு போயிராதீங்க. ஒரு மாறுதலுக்காக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன். யாருன்னே சொல்லலையே சிங்கி பேசறேன்.

ஆவணி வந்தாச்சு ! ஆளாளுக்கு கல்யாணப் பத்திரிக்கை நீட்டறாங்க. என் நண்பர்கள், அண்ணன்கள், என் கணவரின் தங்கை என ஆவணில இருக்கற எல்லா மூகூர்த்தத்திலும் கல்யாணம்.

பிரகாஷோட தங்கச்சி கல்யாணத்துக்கு போயே ஆகணும்னு சொல்லி பொறுப்பான அண்ணியாகி, அப்படியே எல்லா கல்யாணத்தையும் பார்க்கலாம்னு பிளான் போட்டேன். நாம ஒன்னு நினைச்சா, தெய்வம் ஒன்னு நினைக்கும்னு சொல்ற மாதிரி, எங்களோட விசா முடிஞ்சு, ரெனுவல இருக்குது. கணினியே சரணம் நெட் கேமராவே சரணம்னு சொல்லி வீட்டுல நடக்கிற விசேஷங்களை பார்த்திட்டு இருக்கிறோம்.

ரிஷியோட கல்யாணத்துக்குள்ள அவரோட மீசை நல்லா வளரணும்னு என் அழகுக் குறிப்புகள் கட்டுரைக்கு பின்னூட்டம் அனுப்பிச்சாரு. ரிஷி கேட்டு சொல்லாம இருக்கறதா?

அவரோட விசிறிகள் அடிக்க வந்திருவாங்கனு பதில் சொன்னேன். ஒருவர் காங்கயத்திலிருந்து நெய் வாங்கி தடவச் சொல்லியிருந்தார். மறவபாளையத்திலிருந்து 6 கி.மீல இருக்கு காங்கயம். ஊருக்கு போனைப் போட்டு ஒரு 10 லி நெய்யை ரிஷிக்கு பார்சல் அனுப்பச் சொன்னேன். உடனே இது பக்கத்து இலைக்கு பாயாசம் எனச் சொல்லி அவரோட நண்பரை கைக் காட்டிடாரு ரிஷி. ம்ம் .. ஒரு நல்லது செய்ய விடமாட்டாங்களே!.

என்னோட இன்னொரு கட்டுரையான உணவே மருந்தை recap பகுதியில போட, வாசகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு. பின்னூட்டம் அனுப்பின எல்லோருக்கும் நன்றி.சீக்கிரமே உடல் எடை குறைய, எடை அதிகரிக்க உதவும் உணவுகளைப் பற்றி எழுதறேன்.

வாசகர் ஒருவர் நிலாச்சாரலோட முந்தைய இதழ்களை எப்படி படிக்கறதுன்னு கேட்டிருந்தார். கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்க:

http://www.nilacharal.com/archives/archives.html

படைப்புக்களை அனுப்ப, முதல் பக்கத்தில் வலதுக்கை பக்கம் பார்த்தீங்கனா, வழிமுறைகளைத் தொகுத்து அதற்கான சுட்டியைக் கொடுத்திருப்போம்.

http://www.nilacharal.com/write.html

இராணுவத்தில வேலைச் செய்ய நம்ம ரிஷி மட்டுமில்ல, என் கணவரும் ஆசைப்பட்டாரு. (மாவீரர்களுன்னு இவங்களுக்கெல்லாம் ஒரு நினைப்பு மனசுக்குள்ள ..) . அடிச்சு பிடிச்சு உடல் தகுதியில தேர்வாகி, நேர்முகத்தில, ஒரு கேள்விக்கு சொன்ன பதிலால வேலை கிடைக்கலை. என்ன கேள்வின்னு தெரிய, தொடர்ந்து படிங்க.

What is your name?
மேரா நாம் பிரகாஷ்.

If I ask in English,you should answer in English.

My Name is sunlight.

எல்லோரும் அளவா சிரிங்கப்பா !. ஏன்னா இது இராணுவச் சிரிப்பு. இராணுவம் தொடர்பான ஜோக்குகளை பத்மநாபன் சார் அழகா தொகுத்திருப்பார். அதைப் படிக்க:

http://www.nilacharal.com/ocms/log/08030907.asp

கடந்த இருமுறையும் சுற்றுலா பற்றிய செய்தி இல்லை. என்ன நடக்குதுன்னு எடிட்டரம்மா கேக்குறது காதுல விழுகுது. வாங்க அமெரிக்காவின் உல்லாசத்தளமான லாஸ் வேகஸ் போலாம்.

Casinoஒரு நிமிஷம். உங்க கிரிடிட், டெபிட், சட்டை பாக்கெட், பேண்டோட முன்பக்க, பின்பக்க பாக்கெட் எல்லா இடத்திலும் போதும் போதும்னு சொல்ற வரைக்கும் டாலர் நிரப்பியாச்சா?. இப்படிப் போனாதான் லாஸ் வேகஸ்ல இருக்கற எல்லா விளையாட்டையும் விளையாடி, நம்ம பணத்தை லாஸ் ஆக்கலாம். அந்தளவுக்கு அங்கு உலகின் பிரபலமான கட்டிடங்கள் போல் கட்டப்பட்ட சூதாட்ட விடுதிகள் அதிகம். பேலஜியோ வாட்டர் ஷோ நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று. என் நண்பர் பதிவு செய்ததை உங்களுக்காக தருகிறேன்.

http://www.youtube.com/watch?v=hMkGNbQRRpg

இதே போல இணையத்தில ரசிக்க வைச்ச சில ஃபிலிம்களை உங்களுக்காக தொகுத்திருக்காங்க நிலா:

http://www.nilacharal.com/ocms/log/03170815.asp

Vegasஈஃபிள் டவர் மாதிரியே ஒரு விடுதி. அந்த டவரோட மையப்பகுதியில் ஒரு உணவு விடுதி. நடுவானத்துல உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே மின்னொளியில மிதக்கிற நகரத்தை ரசிக்கலாம் உங்க பாக்கெட் கனமாய் இருந்தால். டவரோட கூரையை வானத்தைப் போல வடிவமைச்சு இருக்காங்க. அதைப் பார்த்ததும் என் பொண்ணு, தூக்குங்க என்றாள். எதுக்குனு கேட்டா, நீங்க தூக்கினா நான் கை நீட்டி வானத்தைத் தொடுவேன் என்றாள். மலர் கண்காட்சி, மங்கைகள், நடனம் , நாடகம்னு ஜாலியாய் செலவழிக்கவே ஒரு ஊர். வர்ற வழியில் ஹுவர் அணையைப் பார்த்தோம். மரங்களை நட்டு, செயற்கையா பாறைகளை பதிச்சிருக்காங்க. பார்க்கறதுக்கு பாறைக்குள்ளே இருந்து மரம் வளர மாதிரி. நாங்க உள்ள போய் நிலாச்சாரலிலிருந்து வர்றோம்னு சொன்னதும் எங்களுக்கு கறுப்பு பூனைப்படையே அனுப்பி, பத்திரமா சுத்திக் காட்டுனாங்க. எங்க காரை கறுப்புப் பூனைகள் பின் தொடர்ந்து வருவதைத்தான் போட்டாவில பார்க்கிறீங்க.

Black catsநான் சொன்னதை உண்மைன்னு நம்பி, யாரும் போய் மாட்டிக்காதீங்க. காருல்ல போக போராடிச்சா, இப்படி கூட்டமா பைக் எடுத்துட்டு, ஒரே மாதிரி உடையணிந்து, (பெரும்பாலும் கறுப்பு உடை) ஊர் சுத்தறது அமெரிக்கர்களின் வழக்கம் போல.

அடுத்த முறை பிளக்ஸ்டப் போட்டோவுடன் உங்களை சந்திக்கும் வரை,

அன்பாய் இருங்கள்
ஆரோக்கியமாய் இருங்கள்
எனக் கூறிப் போய் வருகிறேன்.

loading...

About The Author

5 Comments

 1. maleek

  லாஸ் வேகாஸ் போயி,நானும் பத்துக்காசு தோத்தேன்னு எழுதிவீங்க எனக்கும்
  ஒரு ஆறுதலா இருக்கும்னு பார்த்தா ……என்ன கவிதா இப்படி பன்னிட்டிங்க.

 2. kavitha

  நிலாக்குழுவிவில் லாஸ் வேகாஸுக்கு போக டிக்கட் மட்டும்தான் கொடுத்தாங்க. விளையாட சொந்த காசு போட்டு, தோத்து போக நான் என்ன மாலீக்கா?

 3. Hema

  Nice photos kavitha. The nilacharal readers around the world know you. This is the privilege. //நிலாச்சாரலிலிருந்து வர்றோம்னு சொன்னதும் எங்களுக்கு கறுப்பு பூனைப்படையே அனுப்பி, பத்திரமா சுத்திக் காட்டுனாங்க// The day will come Kavitha. waiting to read your beauty tips.

 4. kavitha

  நன்றி Hema. I am also waiting for that wonderful day. Regarding beauty tips, i will send it soon.

 5. Dr. S. Subramanian

  ஈஃபிள் = Eifel (pronounced as aifel”)
  பிளக்ஸ்டப் = Flagstaff (Arizona)
  கிரிடிட் = Credit
  Can these words be written in proper Thamizh letters so that those who read them in Thamizh will pronounce it properly?
  I have known several Indians who live in Raleigh, North Carolina pronounce it as “rAlE” rather than the actual pronunciation “rAlee”. When I try to correct them they laugh and move on (but continue to pronounce it the same way they did before).”

Comments are closed.