சில்லுனு ஒரு அரட்டை

வந்தனம் வந்தனம்னு வணக்கம் சொல்றது கொங்கு நாட்டு தங்கம் (ரிஷி சிங்கத்தை விட தங்கத்துக்கு மதிப்பு அதிகம்னு சொல்லி பேரை மாத்திட்டாரு!)

கி.மு. 100 ஆம் ஆண்டு நாம எப்படி இருந்தோம்னு பாக்கற மெஷினை அமெரிக்காவில கண்டுபிடிச்சிருக்காங்க. அதில ஏறி நான் எப்படி இருந்தேன்னு பார்த்து எடுத்த போட்டோ உங்களுக்காக கீழே..

எவ்வளவு சந்தோஷமா ஆடிப் பாடி வாழ்க்கையைக் கொண்டாடி இருக்கிறேன்னு நீங்க பொறாமைப் பட்டீங்களா? நான் சும்மா உங்களைக் கலாய்ச்சேனாக்கும்! போட்டோவில இருக்கிறது கிரான்ட் கேன்யான் அப்படிங்கிற மலைப் பகுதியில இருக்கிற செவ்விந்தியர்கள் என்ற மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடன போட்டோ.

கிரான்ட் கேன்யான் தெரியாதவங்க, நிச்சயம் ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்பீங்க. டைட்டில் போடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் சிவந்த நிறத்தில மலை, பள்ளத்தாக்கு காட்டுவாங்களே அந்த மலைதான். அதை நேர்ல பாக்கறதுக்கு முன்னால வரைக்கும் நான் அதை கிராஃபிக்ஸ்னு நினைச்சேன். இயற்கைக்கு, ஒரே மாதிரியான மலையைப் படைச்சு போரடிச்சு போய் கொஞ்சம் மெனக்கெட்டு கலரான படிக்கட்டுக்கள் போல அமைச்சிருக்கிற மலைகளை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.

லுங்-கோம்-பா லாமாக்கள் அப்படிங்கிற பழங்குடியினர் பத்தி ரிஷி ஒரு அருமையான கட்டுரையை நமக்காக எழுதியிருக்கிறார். அதைப் படிச்சிட்டு வாங்க முக்கியமான விஷயம் பேசணும்.

http://www.nilacharal.com/ocms/log/01260907.asp

படிச்சிட்டிங்களா? என்ன அது முக்கியமான விஷயம்னா, ‘இந்தியா 2020’ அப்படின்னு ஒரு யாகூ குழு இருக்குது. கலாமோட கனவை நிஜமாக்க விரும்பறவங்க சேர்ந்து ஆரம்பிச்சது. அதில் இருக்கிற ஒரு புண்ணியவான் தேர்தல் வேட்பாளர்களை பற்றி நீங்க தெரிந்து கொள்ள போன், SMS (சிவா மனசுல சக்தி இல்லீங்க – Short message Service) இணையம் மூலம் உதவுறாரு.

http://incmforgoodgovernance.blogspot.com/2009/04/national-election-bonanza-this-is.html

Toll-free no: 1-800-110-440

SMS மூலம் விபரங்கள் பெற பதிவு செய்யணும்.

MYNETA ன்னு டைப் பண்ணி 56070 நம்பருக்கு அனுப்புங்க.

அதே குழுவில Dr.சந்தோஷ் பாபு அவர்களும் இணைந்துள்ளார். சந்தோஷ் பாபு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர். ஒலிம்பியன் ஃபேக்டரின்னு விளையாட்டுக்காக ஒரு பள்ளியை கிருஷ்ணகிரி தொழிலதிபர்கள் உதவியோட அமைச்சிருக்காரு. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாடணும்னு வெறியோட உழைக்கிறவங்களுக்கு இது நிச்சயம் பயன்படும். அவரோட இன்னொரு வெற்றி ‘ரூரல் BPO’. அதைப் பத்தி அடுத்த அரட்டையில சொல்றேன்.

ஒரு குட்டிக் கதை கேட்கிறீங்களா?

ஒரு மனிதன் சாயுங்காலத்துல மலையேற ஆரம்பிச்சானாம். மலை உச்சிக்கு நடு ராத்திரியில் போய் சேர்ந்தானாம், அங்கேயே காத்திருந்து காலையில மலையிலிருந்து இறங்காம, உடனே இறங்க ஆரம்பிச்சானாம். இருட்டில் கீழே விழப் போனவன் ஒரு மரக் கிளையை பிடிச்சிக்கிட்டு கடவுளை வேண்டினானாம். கடவுளும் அவன் முன்னாடி தோன்றி, உன் கைவிரல்களை விட்டு விட்டு குதி, மலையடிவாரம் வந்திரும்னு சொன்னாராம். நம்பிக்கை வராம விடியறவரைக்கும் பிடிச்சிருந்தவன் காலையில பார்த்தால் அவனோட காலடியிலிருந்து 10 அடியில தரை இருந்ததாம். கடவுளே சொல்லியும் நம்பாத மனிதனை கிரான்ட் கேன்யானின் ஸ்கை வாக் பகுதியில நினைச்சேன். பள்ளத்தாக்கின் சில அடி தூரம் வரை வட்ட வடிவ பாதையை கண்ணாடியால அமைச்சு, பார்வையாளர்களை நடக்க அனுமதிக்கிறாங்க. கண்ணாடிச் சுவற்றின் கைப்பிடியை பிடிச்சிட்டுத்தான் எல்லோரும் நடந்தாங்க. கண்ணாடியின் மையப் பகுதியில நடக்க ரொம்ப யோசிச்சாங்க. கண்ணாடி உடைஞ்சிட்டா என்னவாகுமோங்கற பயம். பள்ளத்தாக்கின் அழகை பரவசங் கலந்த பயத்தோட நாங்க ரசிச்சதைத்தான் போட்டோவில பாக்கிறீங்க:

அடடே! ஒரு விஷயம் சொல்ல மறந்திட்டேன். தலைவர் ஜோவும் அனாமிகாவும் கோடையைக் கொண்டாட விடுமுறையில போயிருக்காங்க. அதுனாலதான் இரண்டு வாரத்துக்கு முன்னாடி அரட்டையில அப்பீட் ஆன நான் இந்த வாரம் ரீப்பிட்.

ரிஷியும் வாசகர் திலகங்களின் காதுகளின் வழிந்த இரத்தத்தைப் பார்த்துவிட்டு தன்னோட நகைச்சுவை பகுதியை தம்பிக்கு விட்டுக் கொடுத்திட்டாரு. மாயன் அப்படிங்கிற புனைப் பெயரில் ஜோக்ஸ் எழுதறது நம்ம ரிஷியோட தம்பிதான். அதில ஒன்னைப் படிச்சிட்டு நாலு வரி எழுதிப் போட்டீங்கன்னா நல்லா வளருவாரு.

http://www.nilacharal.com/ocms/log/04060919.asp

அவருக்கு கதையும் எழுதத் தெரியும். லாட்டரிச் சீட்டு என்னும் கதை நிலாச்சாரலில் வெளியாகியுள்ளது.

http://www.nilacharal.com/ocms/log/03160914.asp

என் படைப்புகள் பற்றி கதைக்க போன் பண்ணுங்க:
மூணு ஜீரோ -மறுபடியும் மூணு ஜீரோ – கடைசியாய் நாலு ஜீரோ.

ஈழப் போர் பற்றிய செய்திகளை படிச்சிருப்பீங்க. தமிழனாய் இல்லாவிட்டாலும் சக மனிதனாக அங்குள்ளவங்களை நினைச்சு அவங்க வாழ்வு மலர வேண்டிக்கிலாமே.

ஈழத்து மக்களுக்கான பிராத்தனைகளுடன் அன்பாய் இருங்கள்! ஆரோக்கியமாய் இருங்கள் எனக் கூறிப் போய் வருகிறேன்!.

சிங்கி,

சாரி.. தங்கமய்யா தங்கம்!

loading...

About The Author

4 Comments

 1. P.Balakrishnan

  கேன்யான் படங்கள், செய்திகள் நன்று.

 2. Rishi

  கவிதா,
  சிங்கம் தங்கமானது லிப்ஸ் ஸ்லிப் ஆனதால!!

  //மூணு ஜீரோ -மறுபடியும் மூணு ஜீரோ – கடைசியாய் நாலு ஜீரோ. //
  இந்த நம்பருக்கு ட்ரை பண்ணேன். ஒரு ப்யூட்டிஃபுல் வாய்ஸ் ஹஸ்க்கியா பேசிச்சே!! பேரு கவிதா இல்லையாமே! இதத் தானே சொன்னீங்க (30-40-40). முன்னாடி லோக்கல் கோடைப் போட்டேன்! 😉

 3. kavitha

  சார்,
  நாந்தான் அமெரிக்காவில இருக்கேன்னு சொல்லியிருக்கேனே!.
  லோக்கல் கோடு போட்டு உங்க ஆளுக்கு போன் பண்ணினா அவங்கதான் பேசுவாங்க!.
  என் பேரைச் சொல்லி அவங்ககிட்டப் பேசிட்டு அம்மாவை நல்லா ஏமாத்திறீங்க.

Comments are closed.