அயல்நாடு வாழ் இந்தியருக்கு சொத்து ஆலோசனை

நான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறேன். தமிழ் நாட்டில் சொத்து ஒன்று வாங்க எண்ணுகிறேன். நான் என் பெயரில் வாங்க முடியுமா? நான் என் தந்தைக்குப் பணம் அனுப்பி அவர் பெயரில் சொத்து வாங்கலாம் என்று நினைக்கிறேன். இது சரியான வழியாக இருக்குமா?

நீங்கள் அமெரிக்காவில் இருப்பதால் தமிழ்நாட்டில் உங்கள் பெயரில் சொத்து வாங்க முடியாது என்பது தவறான எண்ணம். உங்கள் பெயரிலேயே சொத்து வாங்கலாம். அதற்கு ஒரு பவர் ஏஜண்ட்டை நீங்கள் தமிழ்நாட்டில் நியமிக்க வேண்டும். அதற்கான பத்திரம் தயாரித்து அதில் அமெரிக்காவில் உள்ள நோட்டரி பப்ளிக் (Notary Public) ஒருவரிடம் கையொப்பம் வாங்க வேண்டும். அதைத் தமிழ்நாட்டில் உள்ள நீங்கள் நியமிக்கும் பவர் ஏஜன்ட் அனுப்பி, இங்குள்ள ஏதாவது ஒரு மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub-Registration Office) அட்ஜுடிகேஷன் (Adjudication) செய்ய வேண்டும். அட்ஜுடிகேஷன் என்பது ரூ.100/- பணம் செலுத்தி அந்தப் பத்திரத்தைப் பதிவு செய்யும் முறையாகும். இந்த முறையின் மூலம் உங்கள் பெயரில் சொத்து வாங்கலாம். உங்களுக்கு பதில், பத்திரத்திலும், சார் பதிவாளர் அலுவலகத்திலும் (Sub Registration Office) உங்களுடைய பவர் ஏஜண்ட் கையொப்பமிடுவார்.

பவர் ஏஜண்டை நியமித்தால் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று சில பேர் நினைப்பதுண்டு. பவர் ஏஜன்ட் தவறான வழியில் செயல்பட்டு விடுவார்கள் என்று சந்தேகிப்பதுண்டு. பவர் பத்திரம் சரியான முறையில் தயாரித்து விட்டால் இந்தப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.

பவர் ஏஜண்டை நியமிக்கும் போது அதற்கான பத்திரத்தில் நீங்கள் வாங்க நினைக்கும் சொத்தின் முழு விவரத்தையும் கொடுத்து, குறிப்பிட்ட அந்த சொத்தை வாங்குவதற்கு மட்டும் ஒருவரை பவர் ஏஜண்டாக நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கும் போது உங்கள் பெயரில் சொத்து வாங்குவதற்கு மட்டும்தான் அவர் பவரை உபயேகிக்க முடியும். மேலும், விற்பதற்கோ, அடமானம் போன்ற காரியங்களை செய்வதற்கோ பவர் ஏஜண்டால் முடியாது.

நீங்கள் உங்கள் தந்தையையே பவர் ஏஜண்டாக நியமிக்கலாம். உங்கள் அப்பா பெயருக்குப் பணம் அனுப்பி, அவர் பெயரில் சொத்து வாங்கும் போது அவருக்கு வருமானத்திற்கான (Income Tax) வழிமுறை காட்ட வேண்டும். மேலும், உங்கள் தந்தைக்கு திடீரென்று ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டால் உங்களுக்காக வாங்கப்பட்ட சொத்திற்கு அவருடைய எல்லா வாரிசுதாரர்களும் உரிமையாளர்களாகி விடுவார்கள்.

***********

வாசகர்களுக்கு இது போன்ற கேள்விகளுக்கு பதில் தேவைப்பட்டால் இந்தப் பக்கத்தின் கீழுள்ள படிவத்தின் மூலம் அனுப்பலாம்.

மேற்கண்ட ஆலோசனையை வழங்கியவர் செ‎ன்னை தி.நகரில் இயங்கும் ட்ரைஸ்டார் ஹௌஸிங் பி லிட்(Tristar Housing Pvt Ltd) என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. பீட்டர் அவர்கள். இந்நிறுவனம் சொத்துக்கள் குறித்து ஆலோசனைகள் வழங்குவதோடு, அவற்றைப் பராமரிப்பதிலும் வாடிக்கையாளர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

பீட்டர் அவர்களின் ஆலோசனை பெற விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்:
0091 44 2431 2431

Disclaimer : The information in the above article are obtained from sources, which we believe to be reliable. We make no guarantee, representation, or warranty in respect of the information contained herein and accept no liability as to its accuracy or completeness.

About The Author

2 Comments

  1. shanthi

    இந்த கட்டுரையை படித்தென் நான் என்னன்க்க சில ப்ரொபெர்டி எஙல் வுரில் வஙி இருகிரஎன், என் தன்தைக்கு முரைபடி பொநெர் ஒf அட்டொர்ன்ய் தந்து இருந்தஎன் ஆதனல் நான் இஙகஎ இஙிலந்தில் இருந்து பனம் அன்னுப்ப அவர் என்னக்க எல்லம் வாஇஙி பரமரிதார் ஆனல் கடந்த வருடம் அவர் இரைவனடி சைர்ந்து விட்டர். எல்ல பதிரஙலௌம் என் தாயர் என்னிடமஎ தந்து விட்டர், அவர் தர்பொது பரமரிது வருகிரர். எனக்கு ஒரு ஆன்ன்னனும் ஒரு தன்ம்பியும் இருகிரரல், ஆன்னன் ஈன்டிஅவிலும் .. தன்ம்பி இஙஎயும் இருகிரர். நன் இப்பொலுது என் சொதுகலை பரமரிது என் முடிவுஇக்கு பிரகு என் பில்லைகலுக்கு தந்து விட வென்டும் என்ட்ரு நினைகிரஎன். என் பில்லைகல் இருவரும் இந்த நட்டிலஎ தான் இருபர்கல். பிர்கலதில் அவர்கலுஇகு என் சொதை பரமரிபதரிஒக்கொ அலல்து விர்படக்ரிக்கொ எந்த ப்ரசினையும் வாரது இருக்க நன் என்ன சைய வென்டும் என்ன்ட்ரு வுஙல் ஆலொசனைகல் தெவை. என் ந்னன்ட்ரிகல்.

  2. k.selvakumar

    My friend is a france citizen. He want buy agriculture land in tamilnadu.what is the procedure to it.any way please tell me sir.

Comments are closed.