இது குற்றமில்லையா?

முந்தைய நாள் வரை மிகவும் பிரபலமாக இருந்து, அனைத்துத் தர மக்களும் பாதத்தில் விழுந்து வணங்கி மகானாகக் கருதப்பட்ட ஒரு ஆன்மீகவாதியின் படங்களை அதே மக்கள் அடுத்த நாளே காலால் மிதித்துத்தேய்த்து அவமானப்படுத்துகிறார்கள். காரணம், அவரைப் பற்றி வெளியான அதிர்ச்சியான படங்களும், செய்திகளும்! – அதைப் பற்றி எழுதப் போவதில்லை.

இன்னும் சில மாதங்களில் அவர் மீது குற்றமேதுமில்லை என்று நிரூபிக்கப்பட்டால், மீண்டும் அவர் பாதங்களில் விழ மக்கள் தயங்க மாட்டார்கள் – இந்த மந்தை மனப்பான்மையைப் பற்றியும் எழுதப் போவதில்லை.

எந்த வித பலவந்தமோ வன்முறையோ செய்யாமல், தன்னிச்சையாக வந்த ஒரு பெண்ணுடன் இணங்கி இருந்தது சரியா, தவறா என்ற சர்ச்சையைப் பற்றியும் எழுதப் போவதில்லை.

ஞான மார்க்கம், தியான முறைகள் பற்றி மக்களுக்கு போதித்து நல்ல வாழ்வியல் தீர்வுகளை வெளியில் உபதேசித்த ஒருவர் – மனம்தான் உடலைக் கட்டுப்படுத்துகிறது என்ற மெய்ஞான போதனைகளை போதித்த ஒருவர் – தனக்கென ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கு உரிமையில்லையா என்று எழும் வாதங்களைப் பற்றியும் எழுதப் போவதில்லை.

அவரைப் பற்றி வெளியான படங்கள் உண்மையானவையா அல்லது வெட்டி ஒட்டப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளா என்ற ஆராய்ச்சிகள் பற்றியும் எழுதப் போவதில்லை.

அவரைப் பற்றிய எந்த செய்திகளையும் நியாயப்படுத்தியும் எழுதப் போவதில்லை! நான் எழுதிக் கேட்க விரும்புவதெல்லாம் ஒன்றுதான்!

Media ethics – ஊடகங்களின் தர்மம் என்றால் என்ன என்பது பற்றித்தான்!

தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் போன்ற சமூகப் பொறுப்புள்ள, சக்தி வாய்ந்த ஊடகங்கள், ஒரு ஆன்மீக (அல்லது அரசியல்)வாதியின் அறையில் நடந்த அல்லது நடந்ததாகச் சொல்லப்படும் அந்தரங்க, அதிர்ச்சியான காட்சிகளை அப்படி ஒரு முழு நீல(ள)ப் படமாகக் காட்டத்தான் வேண்டுமா?

இல்லத்தினர் அனைவரும் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்க்கும் ஒரு வரவேற்பறைக்குள், படுக்கையறைக் காட்சிகளைக் கொண்டு செல்வது சரிதானா? குற்றம் இழைத்தவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம், அப்போதுதான் குற்றத்தின் தன்மை புரியும் என்ற சப்பைக்கட்டுகள் சொல்லி சமாளிப்பது சரியா?

குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பருவ வயது மாணவ மாணவிகள் கணினி மூலமாக ஆபாசப் படங்களைப் பார்ப்பதைத் தடுக்க வேண்டும் என்று சமூக அக்கறை கொண்ட பலரும் முயற்சி எடுத்து வரும் இத்தருணத்தில், இத்தகைய காட்சிகளை திரும்பத் திரும்ப தொலைக்காட்சி ஊடகங்கள் காண்பித்து வருவதுதான் உண்மையான சமூக அக்கறையா அல்லது கிளுகிளு காட்சிகளைக் காட்டி பணம் சம்பாதித்திடும் வணிகத்தனமா?

அந்த ஆன்மீகவாதி செய்தது குற்றமென்றால், அந்தக் காட்சிகளை சலிக்கும்வரை அனைவரும் பார்க்கட்டும் என்று விலாவாரியாக வீட்டிற்குள் நுழைத்துக் காண்பிப்பதும் குற்றமில்லையா?

ஒருவரின் பொய் முகத்தை வெளியில் காட்டுகிறேன் என்ற பெயரில் தங்களுடைய இரட்டை முகத்தை ஊடகங்கள் காண்பிப்பது சரிதானா?

சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைப்பது நியாயமெனில் ஊடகங்களின் இந்த பொறுப்பற்ற குற்றங்களுக்கும் தண்டனை கிடைப்பது நியாயமல்லவா?

About The Author

9 Comments

  1. dr sundaram

    excellant. well said. but if they dont put some in media how will people know it also. May be they should restrict telecasting to minium requiremnt.

  2. maleek

    தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது தனக்குப்பணிவிடை செய்ய அவர்
    வந்தது உண்மை என்று சுவாமிகளே வாக்குமூலம் (யு டுயுப் மார்ச் 13)
    தந்தாலும் அதைப்பற்றியும் எழுதப்போவதில்லை………..
    ……..

  3. Rishi

    [[ excellant. well said. but if they dont put some in media how will people know it also. May be they should restrict telecasting to minium requiremnt. ]]

    Yes, Dr. Sundaram. They have to publish / telecast ONLY THE NEWS!!

  4. ashraf

    சன் டிவி எஙகள் வீட்டில் இல்லை இருந்து இருந்தால் நாமும் பார்த்து இருக்கலாம் என்று நினைத்து இருந்தேன் நனபரின் உதவியால் மொபைலில்பார்த்தேன்.கண்றாவி.சன்னியாசியாக இறுந்தாலும் மனிதன் தானே.மனிதனுக்கு தேவையானதை அனுபவிக்காமல் இருக்கமுடியாது.அதன் படி நடந்ததை தான் மீடியா மூலம் காட்டினர்கள்.

  5. Dr. S. Subramnian

    இந்திரியங்களை அடக்கியவன் தான் சன்யாசி. அது முடியாதவன் மக்களுக்கு எதுவும் போதிக்கத் தகுதியுள்ளவன் அல்ல. மேலை நாடுகளில் கத்தோலிக்க சாமியார்கள் பலர் இந்த மாதிரி அல்லலில் பல வருடங்களாக மாட்டிக்கொண்டிருக்கிரார்கள் ஜனங்கள் அவகளை மன்னிப்பதில்லை. இந்த சாமியாரும் இனிமேல் தலை தூக்க முடியாது. தானாக ஒதுங்கிக்கொள்வது தான் அவருக்கு நல்லது. பொதுஜனங்களுக்கும் நல்லது.

  6. kanmani

    ஊடகங்கள் பொய் முகங்களைக் காட்டவில்லை என்றாலும் மக்களுக்கு இவை தெரியப் போவது இல்லை. ஆனாலும் ஊடகங்கள் அளவுக்குமீறி தொடர்ச்சியாகக் காட்டியதும் தவறாகத் தெரிகிறது. எவ்வளவுதான் கூறினாலும் இந்த மக்கள் திருந்தப் போவதும் இல்லை. உண்மையாலும்,உழைப்பாலும் நன்மையைச் செய்பவர்கள் சாமியார்களை நம்பமாட்டார்கள்.

  7. அருணாசலம். பா

    நல்ல கருத்து. ஏற்கனவே ஊடகம் மூலம் சன் டிவியும் கலைஙர் டிவியும் காட்டும் நிகழ்ச்சிகள் முகம் சுளிக்க வைக்கின்றன.

  8. இரா.சேகர்(ஷக்தி)

    ஊடகங்களுக்குச் சுய கட்டுப்பாடு தேவை.அதற்கான உட் கோட்பாடுகளை நமது ஊடகங்களே தமக்குள் விதித்துக்கொள்ள வேண்டும்.

    இந்த நிகழ்ச்சியில் இருந்து என்ன சொல்ல விரும்புகிறார்கள்?..மக்களே முட்டாள்களாக இருந்து விட்டீர்களே என்று ஆதங்கப்

    படுகிறார்களா அல்லது இனிமேல் முட்டாள்களாகாதீர்கள் என்று அறிவுறுத்துகிறார்களா?

    தனிமனிதனைக் கோடிட்டுக் காட்டிப் பல்லாயிரக்கணக்கானவர்களின் எதிர்கால நம்பிக்கைகளை சிதைக்கும் முயற்சியாகவல்லவா

    இது இருக்கிறது?

    நித்தியானந்தர் இந்த நிகழ்ச்சியின் மூலம் நம்பத்தகாதவராகத் தெரிவதாகவே வைத்துக்கொள்வோம்.ஆனால் அவர் பெயரில்

    வெளியான ஆயிரக்கணக்கான நூல்களில் இருந்து நல்ல கருத்துக்களைக் கற்றுக்கொண்டு வாழ்ந்து வரும் அப்பாவிகளின்

    நம்பிக்கைகள் நமது ஊடகங்களின் இந்த சமூகப் பொறுப்பின்மையால் தகர்ந்து போகாதா?

    இந்த இடத்தில் அயல் நாட்டு ஊடகங்களின் ஒரு கோட்பாட்டைக் குறிப்பிட்டாக வேண்டும்-விபத்தில் இறந்த்வர்களின் உடல்

    சிதைவை(நமது ஊடகங்கள் போல)இவைகள் வெளிச்சம் போட்டுக்!காட்டுவதில்லை.

    (நான் நித்யானந்த தாசனல்லன்.)

    (சமூகப் பிரக்னயுடன் )அவரை சட்டத்திடம் ஒப்படைத்து விட்டு வேறு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கலாமே?

  9. Dr. S. Subramanian

    >>உண்மையாலும்,உழைப்பாலும் நன்மையைச் செய்பவர்கள் சாமியார்களை நம்பமாட்டார்கள்.

Comments are closed.