கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

பழசும் புதுசும்

நலியாத நகைச்சுவை

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தான் வறுமையில் இருந்தபோதும் தனக்கே உரிய நகைச்சுவை குன்றாமல் பேசுவார் என்பதற்கான ஒரு நெகிழ்ச்சியான நிகழ்ச்சி

கடன் சுமையால் அவரது வீடு ஏலத்திற்கு வந்தது. அந்த கோர்ட்டின் attachment ஆர்டரை அவரிடம் கொடுக்க கோர்ட்டிலிருந்து ஒரு ஆள் வந்திருந்தார். அப்போது என்.எஸ்.கே.யை பார்க்க வந்திருந்த ஒரு நண்பர் கோர்ட்டிலிருந்து வந்திருந்தவரைப்பார்த்து “யார் இவர்?” என்று கேட்டார்.

வழக்கமான சிரிப்புடன் என்.எஸ்.கே சொன்னார். “அவர் எனக்கு வேண்டியவர். அவருக்கும் எனக்கும் ரொம்ப attachment”

கோர்ட்டிலிருந்து வந்தவருக்கு ஒரு வேதனையான சிரிப்பு..

யார் துறவி?

முந்தைய காலங்களில் வயது முதிர்ந்தவர்கள் ஒரு நிலையில் துறவு மனப்பான்மையுடன் காசிக்கு நடந்தே செல்வது வழக்கமாக இருந்தது. அப்படி ஒரு தம்பதியர் துறவு பூண நடந்தே சென்று கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் மண்ணின் கீழே ஒரு வைரக்கல் இருப்பதை கணவர் பார்த்தார். அந்த வைரத்தைப் பார்த்தவுடன் மனம் மாறி தன் மனைவி துறவு மனப்பான்மையை மறந்து விடுவாளோ என்று எண்ணி அதைத் தன் கால்களால் மறைக்க முயன்றார். அதைக் கவனித்த மனைவி சொன்னாள். “மண்ணுக்கும் வைரத்திற்கும் வித்தியாசம் தெரிந்த நீங்கள் எப்படித் துறவியாக முடியும்?” என்று கேட்டாள். நாணினார் கணவர்!

ஏன் இந்த மவுனம்?

ரஸ்ய அதிபர் குருஷ்சேவ் பதவியேற்றவுடன் ஒரு பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் இழைத்த கொடுமைகளைப் பற்றி அடுக்கிக் கொண்டே பேசினார்.

கூட்டத்தில் இருந்த ஒருவன் குரல் கொடுத்தான் “நீங்கள் ஸ்டாலினின் மந்திரிசபையில் இருந்தவர்தானே? ஏன் அப்போதெல்லாம் பேசாமல் இருந்தீர்கள்? அவரை எதிர்த்து பேசியிருக்கலாமே?”

கேள்வி கேட்டவன் யாரென்று தெரியாததால் “யார் அப்படிக் கேட்டது?” என்று அதிகாரமாகக் கேட்டார் குருஷ்சேவ். ஒருவர் கூட வாய் திறக்கவில்லை. கேள்வி கேட்டவனும் பதில் சொல்லவில்லை.

சிறிது நேரத்திற்குப் பின்பு குருஷேவ் “இப்போது புரிந்திருக்குமே.. நான் ஸ்டாலினை ஏன் எதிர்த்துப் பேசவில்லை என்று” என்று அமைதியான குரலில் சொன்னார்.

ஸ்டாலினை எதிர்த்துப் பேசுவதற்கு எல்லோருமே பயந்தார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார் குருஷேவ்.

ஒரு ஜென் கதை

ஒரு ஜென் துறவி மரத்தடியில் தன் சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கையில் அவ்வழியாக வந்த அந்த நாட்டின் சேனாதிபதி துறவியிடம் கேட்டார். “நரகம் எ‎ன்றால் எது? அது ‏இருப்பது உண்மையெ‎ன்றால் அதைக் காட்ட முடியுமா?

“அது சரி. நீ யார்?”என்று கேட்டார் துறவி.

மமதையுடன் சொன்னான் அவன். “நான்தா‎ன் இந்நாட்டின் சேனாதிபதி”

துறவி ஏளனமாகச் சிரித்தார். “நீயா.. சேனாதிபதியா? உன்னைப் பார்த்தால் ஆடு வெட்டும் கசாப்புக் கடைக்காரன் மாதிரியல்லவா இருக்கிறது?”

சேனாதிபதிக்கு வந்ததே கோபம்! வாளை எடுத்தான். ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தபடி அவரைக் கொல்ல வந்தான்.

ஜென் துறவி, கோபமும், ஆத்திரமும், அகங்காரமும் அடங்கிய அவனது முகத்தை நோக்கி சுட்டிக்காட்டி “இதுதான் நரகம்” என்றார்.

கோபத்தை விட பெரிய நரகம் எது?

எத்தனை நேரம்?

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக நீண்ட க்யூ நி‎ன்றிருந்தது. அதில் ஒரு வெள்ளையருக்கு முன் ஒரு கறுப்பு இனத்தவர் நின்று கொண்டிருந்தார். வெள்ளையர் நேச பாவத்துடன் முன்னால் இருந்த கறுப்பு இனத்தவரைக் கேட்டார். “வெகு நேரமாகக் காத்திருக்கிறீர்களா?”

அவர் சுருக்கென்று பதில் சொன்னார். “ஆமாம்.. இருநூறு வருஷங்களாக!”

முடிந்தால் சிரிக்கலாம் – எது நின்றது?

டாக்டர் ஒரு நோயாளியின் நாடியை ஒரு கையாலும், ஒரு வாட்சை இன்னொரு கையாலும் பிடித்தபடி மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

பக்கத்திலிருந்த நர்ஸ் எதுவும் புரியாமல் கேட்டாள் “என்ன டாக்டர் வாட்ச்சையும் பேஷண்டின் நாடியையும் மாறி மாறிப் பார்க்கிறீர்களே.. ஏன்?”

டாக்டர் சொன்னார். “இந்த இரண்டில் ஏதோ ஒன்று நின்று விட்டது. அது எது என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!”

(எல்லாமே இரவல்தான்! “இரவலருக்கு” நன்றி)

About The Author

5 Comments

  1. darshi yamunarajan

    பலசும் புதுசும் – நகைசுவை வாசித்து, சிரித்து என் வயிரு இன்னும் நோகின்ரது. ஏன்னுடய வால்துக்கல்!!!.

    தர்ஷி யமுனரஜன்

  2. என் சுரேஷ்

    மிகச் சிறப்பாக மிக நல்ல செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளீர். நான் ரசித்து மகிழ்ந்தேன்.
    அமெரிக்கரின் கேள்விக்கு பதிலாக 200 வருடங்களாக நிற்கிறேன் என்ற கருப்பு இன பிரதிநிதியின்
    பதில் என்னை அதிரவைத்தது.
    அதில் தான் எத்தனை ஆழமான உணர்வுகள்! கோபத்தை விட வேறேது நரகம் என்ற பாடம் என்போன்று
    கோபப்படுபவர்களை திருத்தம் செய்யும் நல்ல ஜென்கதை. என்.எஸ் கிருஷ்ணனின் அட்டேச்மெண்ட் பற்றின
    துணுக்கு, ஆகா எப்படி இப்படி சதாகாலமும் நகைச்சுவையில் ஒருவருக்கு இருக்க முடிந்தது என்று யோசிக்க
    வைத்தது. வைரத்திற்கும் மண்ணிர்கும் வித்தியாசம் தெரியாமல் எப்படி ஒருவன் ஆன்மீகத்தில் தன்னை
    சேர்த்துக்கொள்ள முடியும் என்ற கேள்வியும் இதில் சிறப்பாக இருந்தது.

    மொத்ததில் இந்த தொகுப்பு மிகவும் சிறப்பு!

    நல்வாழ்த்துக்களுடன்
    என் சுரேஷ்

  3. Senthil Kumar

    இ நச் வெர்ய் நிcஎ ஜொகெச்.ணொந் அ டய்ச் அல்ல் தெ பெஒப்லெ அரெ டொடல்ல்ய் டென்சிஒன் அன்ட் திச் ட்ய்பெ ஒf ரெஅல் ஜொகெச் நில்ல் ரெல௯ தெ பெஒப்லெச்.Tகன்க்ச்.

Comments are closed.