கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல் (5)

அதிசய குணம் கொண்ட கற்கள்l

1. 21.5.2007 தேதியிட்ட டெக்கான் கிரானிக்கள் தின இதழில் பதிவான செய்தி பற்றி பார்ப்போம்.

காட்மாண்டுவிற்கு 133 கி.மீ. வடக்கில் உள்ள டோலகா மாகாணம் ஜிரி நகரில் உள்ள பீம்சன் கோயில். இக்கோயிலில் உள்ள தெய்வ(கல் சிலைக்கு)த்திற்கு வியர்க்கும்போதெல்லாம் நாட்டுக்கும் அரச குடும்பத்திற்கும் கெடுதல் வந்து விடுமாம். இதற்கு உதாரணமாகப் பல நிகழ்ச்சிகளைச் சொல்கிறார்கள்.

1990 இல் வியர்த்த பிறகு, ஷா குடும்ப ஆட்சி முடிவிற்கு வந்தது. 2001 இல் (இரவில்)வியர்த்த பிறகு, அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருடன் ,அரசரும், இராணியும் கொல்லப்பட்டனர். 2005-ல் வியர்த்த பிறகு, அரசர் ஞானேந்திராவின் அரசு புரட்சிப் படையால் கவிழ்ந்தது.

2. சூரசம்ஹாரத்தில் வேல் வாங்கும் விழாவின் போது(மட்டும்) வியர்த்துப் போகும் (சிக்கல்) சிங்காரவேலன்.

(குறிப்பு : இது பற்றி எழுத்தாளர் சுஜாதாவின் கருத்துக்கள்–14.6.2007 குங்குமம் வாசகர் கேள்வி– சமீபத்தில் நேபாளத்தில் இருக்கும் பீமேஸ்வர சிலைக்கு வியர்த்ததாக செய்தி வந்தது. சிக்கல் சிங்காரவேலருக்கும் வருடந்தோறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் வேல் வாங்கும்போது வியர்க்கும். இதற்கும் அறிவியல் ரீதியாகக் காரணம் ஏதாவது உண்டா?

சுஜாதாவின் பதில் : அறிவியல் ரீதியாகப் பார்த்தால் கல் வியர்க்காது. கல்லுக்குள் ஈரம் சிறைப்பட்டிருந்தால் அது வெளிப்பட்டிருக்கலாம். எப்படியும் சூரசம்ஹாரத்தின்போது கூட்டத்தில் மனிதர்களுக்கு வியர்க்கும். அது அறிவியல் ரீதியாகச் சாத்தியமே.)

3. கோழிகுத்தியிலுள்ள வியாச ராஜர் பிரதிஷ்டை செய்த தட்டினால் "சரிகமபதநி" இசை பாடும் சப்தஸ்வர ஆஞ்சநேயர்.

4. கடலூர்-சிதம்பரம் சாலையில் 13 கி.மீ. தொலைவில் உள்ள ஆலப்பாக்கத்தில் இருக்கும் திரிச்சோபுரம் ஆலயத்தில் உள்ள 1200 வருடங்கள் பழமையான , அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட, சப்தஸ்வரங்களை எழுப்பும் தட்சிணாமூர்த்தி விக்கிரஹம்.

5. விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் சாளக்கிராமக கற்கள், நேபாள நாட்டின் கண்டகி நதியில்கிடைக்கும். இயற்கையிலேயே ஒரு சிறிய பள்ளத்துடன் சங்கு சக்கர அமைப்புடன் பல நிறங்களில் கிடைக்கும் புனிதமாக வழிபடப்படும் தெய்வீகக் கற்கள் இவை.

6. கோவை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள குறிச்சிக்குளக்கரையில் கோயில்கொண்டிருக்கும் பொங்காளியம்மன் தனது தீவிரமான பக்தர் பொன்னுசாமியின் கனவில் தோன்றி, ஆகாயத் தாமரை படர்ந்த தனது குளக்கரையைச் சுத்தம் செய்யச் சொன்னதால், தனியாளாகக் குளத்தில் இறங்கி 24 நாட்களில் 60 சதவிகிதம் குளத்தைச் சுத்தப்படுத்தினார் பொன்னுச்சாமி. யூ.ம. 19.8.2007

இத்துடன் கற்களைப் பற்றிய தேடலும், ஆய்வும் முடிவுக்கு வருகிறது. வேறொரு பகுதியில் மீண்டும் சந்திப்போம். வணக்கம்!

About The Author

2 Comments

  1. Mohan

    ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்தேன் இத்தொடரை. இப்படி சொதப்பலாக முடித்திருக்கிறீர்கள். எங்கெங்கோ வந்த செய்திக்குறிப்புகள் மட்டும் தான் உங்கள் கட்டுரையில் இருக்கிறதே தவிர, எந்த ஆய்வும் இல்லை, தேடலும் இல்லை.

  2. இரா.சேகர்(ஷக்தி)

    ந்ண்பருக்கு,
    தங்கள் ஆதங்கம் புரிகிறது.கட்டுரையின் இரண்டாம் பகுதி பார்த்துவிட்டுக் கருத்துத் தெரிவிக்கவும்.நன்றி!

Comments are closed.