சில்லுனு ஒரு அரட்டை

சங்கரம் சிவ சங்கரம்!

அன்புடையீர்! அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்!

எப்படி இருக்கீங்க….! என்ன என்ன புது விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டீங்க? நண்பர்கள் தினம், சகோதரர்கள் தினம் எல்லாம் முடிஞ்சாச்சு. அன்னையர் தினம், அப்பாக்கள் தினம், சகோதரர்கள் தினம், நண்பர்கள் தினம், காதலர்கள் தினம்ன்னு ஒவ்வொருத்தருக்கும் ஒரு நாள் கொடுத்து அந்தந்த உறவுகளை பாராட்டி வர்றோம். இதெல்லாம் மேலை நாட்டு கலாசாரம். ஒரே ஒரு நாள் கொண்டாடிட்டு மற்ற நாட்கள் எல்லா மறந்திடுறாங்கன்னு சொல்றவங்க ஒரு பக்கம். அந்த ஒரு நாள் மட்டுமாவது மரியாதை தர்றாங்களேன்னு சந்தோசப்படுகிறவங்க மறு பக்கம்! ‘ஆல் டே….ஜாலி டே’ன்னு பாடிக்கிட்டு, ஒவ்வொரு நிமிசத்தையும், நின்னு நிதானமா அனுபவிச்சு வாழற நமக்கு…. இது கொண்டாடக் கிடைச்ச இன்னொரு நாளு….(திருந்தவே மாட்டீயா??? …..ம்ம்ம்…யோசிக்கிறேன்!!!!)

நீங்க திருந்தக் கொடுத்த நேரத்தில வேகமா இங்க போய்
http://www.nilashop.com/index.php?cPath=28

பார்த்தேனா, கொட்டிக் கிடக்குது நல்ல புள்ளைங்க விசயம்….முடியல என்னால நண்பர்களே !!!! (நான் நல்ல புள்ள ஆட்டத்துக்கு வரலப்பா….)

Australia

படம்:Gold coast City (எந்த கோணத்தில பார்த்தாலும் உலகம் அழகாத்தான் இருக்கு!!!!)

வேக நடை போடுற இந்த விஞ்ஞான உலகத்தில உறவுகளுக்கு இடையிலிருந்த பிணைப்பு மெதுவா தளர்வடைஞ்சு… சில இடங்கள்ள பிணைப்பு உடைய ஆரம்பிச்சுட்டு வர்ற மாதிரி இருக்குதில்லன்னு (ஆமாவா? இல்லையானு எல்லாம் கேட்கக் கூடாது சரியா? தோழி மனசு கஷ்டப்படுமில்ல!) என் தோழி ரொம்ப வருத்தப்பட்டா…. சரி ..எதாவது ஃபெவிகுயிக் கிடைக்குமான்னு (யார் வாயை ஒட்ட???…இது எதோ கிராஷ் டாக் நண்பர்களே…. விட்டுத் தள்ளுங்க..) அவ கூட சேர்ந்து தேடிட்டு இருந்தப்போ ‘மென் ஆர் பிரம் மார்ஸ் உமென் ஆர் பிரம் வீனஸ்’ புத்தகம் கையில கிடைச்சது. அதில ஆணும் பெண்ணும் வேறு வேறு கிரகத்தில் இருந்து வந்தவங்க. கருத்துக்கள் வேற வேற மாதிரிதான் இருக்கும். ஆனா வேற வேற கருத்துக்கள் உள்ளவங்க எப்படி சேர்ந்து சந்தோஷமா வாழலாம்ங்கிறதுக்கு யோசனை. சின்ன…சின்ன விசயங்களை எப்படி ஏற்றுக் கொள்ளலாம்….எவற்றை எல்லாம் தவிர்க்கலாம்ன்னு சொல்லி இருப்பார் புத்தக ஆசிரியர். இது கணவன்-மனைவிக்கு மட்டும் இல்லீங்க…எல்லாருக்குமே உறவுகளை மேம்படுத்த உதவும்.

உறவுகளை மேம்படுத்த, நமது அறிவுத்திறனை உதவிக்கு கூப்பிட்டுக்கலாம். (ரொம்ப நல்லவங்க…!!!) இப்போ அந்த அறிவை கொஞ்சம் சோதிக்கப் போறோம். அதுக்கு தயார்படுத்திக் கொள்ள முதல்ல ஒரு எளிய பயிற்சி. இத படிங்க!

https://www.nilacharal.com/tamil/jokes/tamil_jokes_318.asp

படிச்சுட்டீங்களா? இதற்கும் நம்ம தேர்வுக்கும் சம்பந்தம் இருக்குங்க…. நாம சிரிக்கும்போது எல்லா நரம்புகளும் பங்கெடுக்குதாம் (அறிவியல் சொல்லுதுங்க, அடியேன் இல்ல!).. இப்போ எல்லா நரம்பும் உஷார் ஆயிருக்குமில்லையா…..இப்ப கீழே உள்ளத படிங்க!

i cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The
phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde
Uinervtisy, it dseno’t mtaetr in waht oerdr the ltteres in a wrod are, the
olny iproamtnt tihng is taht the frsit and lsat ltteer be in the rghit
pclae. The rset can be a taotl mses and you can sitll raed it whotuit a
pboerlm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by
istlef, but the wrod as a wlohe. Azanmig huh? Yaeh and I awlyas tghuhot
slpeling was ipmorantt! fi yuo cna raed tihs, yuo hvae a sgtrane mnid too!

நூத்துல அம்பது பேராலதான் இதை வாசிக்க முடியும், நான் படிச்சுட்டேன், நீ முயற்சி பண்ணுன்னு நண்பர் ஒருத்தர் அனுப்பி வைத்தார். ஆனா நீங்க எல்லாரும் இதை ஈசியா படிச்சுட்டீங்கதானா!? உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆயுத எழுத்துன்னு (247) கரைச்சி குடிச்ச நம்மகிட்ட போய் வெறும் 26 எழுத்தைத் திருப்பித் திருப்பி எழுதி வாசிக்கச் சொல்லிக்கிட்டு, என்னங்க!!!!! இருந்தாலும், ஆங்கில 26 எழுத்திலேயும் நம்ம புலமை எப்படின்னும் ஒரு கை பார்த்துடுவோம் வாங்க…

http://www.freerice.com/

பார்த்திட்டாங்களா!….எவ்வளவு தானியம் கொடுத்தீங்க…? இது ஆங்கில அறிவு வளர்ப்பு மட்டும் இல்லீங்க….நம்ம முண்டாசு கவி பாரதியின் ‘ஓர் உலகம்’ கனவினை நோக்கிய பயணத்தின் முதல் படியான பட்டினி ஒழிப்புக்கு நம்முடைய சிறிய பங்களிப்புக்கான ஒரு வாய்ப்பு.

சரிங்க… விடை பெறுகிற நேரம் வந்துட்டதால இப்போதைக்கு உங்ககிட்ட இருந்து உத்தரவு வாங்கிக்கிறேன். கிளம்பறத்துக்கு முன்னால ஒரு சின்ன சந்தேகம்… ஆளாளுக்கு உலகம் இப்ப அழியுது… அப்ப அழியுதுன்னு பீதிய கிளப்பி விட்டுட்டு இருக்காங்க, இவங்க எதோ சொல்லுறாங்க!

http://www.2012unlimited.net/Site.A.html

இப்போ சொல்லுங்க! அழியப் போதா??? மாறப் போதா? யோசிச்சு சொல்லுங்க….

மீண்டும் சந்திக்கிற வரை.. வாழ்க்கை வாழ்வதற்கே! அப்படின்னு உற்சாகமா, சந்தோசமா பயணத்தை தொடருவோம்.

வரட்டா!!!!!!

About The Author

7 Comments

  1. P.Balakrishnan

    குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. இதை உணர்ந்து நடந்தால் என்றும் உறவுதான்.

  2. maleek

    ஒத்துக்கிறேன்…அந்த லட்டரை அனுப்பியது ஒரு
    கிரகவாசிதான்னு ..ஒத்துக்கிறேன்.

  3. P.Balakrishnan

    மெய்ப்பு பார்க்கிறவர்கள்(புரூப் ரீடர்ஸ்)மட்டும் ஒவ்வொரு எழுத்தாகப் பார்ப்பார்கள்.

  4. Rishi

    ஹேமா : என்னால actually” மட்டும் படிக்க முடியல.. மத்தபடி எல்லாத்தையும் ஃபாஸ்ட்டா வாசிச்சுட்டேன்.

    [[ இப்போ சொல்லுங்க! அழியப் போதா??? மாறப் போதா? யோசிச்சு சொல்லுங்க…. ]]
    நீங்க சொல்ற காலகட்டத்துல நிலாச்சாரல் 603 இதழ்களை முடிச்சு 604க்காக நாமெல்லாம் உட்கார்ந்து அரட்டை எழுதிக்கிட்டு இருப்போம். அதுதான் உண்மையா இருக்கக்கூடும்!!!”

  5. Hema Manoj

    நீங்க சொல்வது உண்மைதான் திரு.பாலு சார், குற்றம் பார்க்கிறத தவிர்க்கிறது, நிலைத்த உறவுக்கு அவசியமாகிறது. நன்றி.

  6. Hema Manoj

    ஆமா நண்பர் மாலிக் அவர்களே, அது நம்ம பக்கத்து கிரகத்து நண்பர் அனுப்பியதுதான்…..நீங்களும் சரியா படிச்சிட்டீங்கதானே!!! நம்ம கிரக மக்களுக்கு இது சாதாரணமான விசயமாச்சே!!!!

  7. Hema Manoj

    சித்தர் ரிஷி,(எல்லாத்தையும் ஃபாஸ்ட்டா வாசிச்சுட்டேன்) நீங்க படிக்காட்டி யாரு படிக்கிறது???…..

    அருமையான கணிப்பு ரிஷி (603 இதழ்களை முடிச்சு 604க்காக நாமெல்லாம் உட்கார்ந்து அரட்டை எழுதிக்கிட்டு இருப்போம்) நினைச்சு பார்க்கும் போதே சந்தோசம இருக்கு!…

Comments are closed.