சில்லுனு ஒரு அரட்டை

வந்தனம் வந்தனம்னு வாசகர்களுக்கு வணக்கம் சொல்றது கொங்கு நாட்டு சிங்கி.

எல்லோரும் எப்படியிருக்கீங்க? நான் ரொம்ப டயர்டா இருக்கேன். அரிசோனாவிலிருந்து டென்வர்க்கு காரிலேயே போனதால வந்த சோர்வு. ஏறக்குறைய ஆயிரம் மைல்களை அரை நாளில் கடந்தோம். இரவு 9.00 மணிக்கு கிளம்பி, காருக்குள்ளேயே உண்டு, உறங்கி ஒரு வழியா எங்கள் உறவினர் வீட்டுக்கு அடுத்த நாள் காலை 9.30க்குப் போனோம்.

சென்னையிலிருந்து மும்பை போகும் தூரம் வந்திருந்தாலும் அங்குள்ள வெள்ளைப் பனிமலைகளைப் பார்க்கையில் அத்தனை களைப்பும் களிப்பாக மாறிவிட்டது.

முதல் நாள், பனிச்சறுக்கு விளையாடும் இடத்திற்கு போனோம். எவ்வளவு வெயில் அடித்தாலும் பனிக்கட்டிகள் கரையாமல் மலை முழுவதும் உறைந்து இருப்பதைப் பார்த்த போது நிலாச்சாரலில் வெளிவந்த நெய் உருகாத சிவலிங்கம் கட்டுரை நினைவிற்கு வந்தது.

https://www.nilacharal.com/ocms/log/10190918.asp

பனிச்சறுக்கு விளையாடுகிறேன் என்று பல இடங்களில் விழுந்து எழுந்து வலிக்கவே இல்லையினு கதை விட்டாங்க எங்க வீட்டு வாலுங்க – கீழே விழுந்தும் மீசையில் பனி ஒட்டாத கதையா!

அடுத்த நாள் "Garden of Gods" என்னும் மலைப் பாறைகளை பார்க்கப் போனோம். முதலில் பச்சைக் கலரில் இருக்கும் மலைகள் பின் செந்நிறமா மாறி இருக்க, அதன் மேல் சூரிய ஒளி படும்போது இயற்கையின் ஆபரணங்கள் நாங்கள்னு சொல்ற மாதிரி இருந்தது. செடோனாவில் பார்த்த மலைகள் மாதிரியே இருந்தாலும் இங்குள்ள குன்றுகளில் மக்கள் கயிறு கட்டி ஏறும் அளவிற்கு உயரம் குறைவாகவும் இருந்தன. செடோனா பத்தின என் அரட்டையை படிச்சிட்டு வாங்க , ‘Hot sulpher springs’ -ல குளிக்கலாம்:

https://www.nilacharal.com/ocms/log/06010915.asp

பூமியின் 35,000 அடி ஆழத்திலிருக்கும் கனிமங்களின் கலவையால் இயற்கையாகவே வெந்நீர் ஊற்றுக்கள் உருவாகியுள்ளன ராக்கி மலைக் குன்றுகளில். 104 முதல் 126 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெளிவரும் வெந்நீரை, நீச்சல் குளங்களில் 95 முதல் 112 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக இருக்குமாறு வடிவமைத்து உள்ளனர்.

கனிமங்கள் கலந்த வெந்நீர் குளியல் உடல், மன ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இந்நீரைக் குடிக்கலாம் என சிப்பந்தி கூறிய போதும் அதிலிருந்து வந்த வாசனையால் நாங்கள் குடிக்கவில்லை. இதைப் பற்றிய செய்திக் குறிப்பைக் கீழேயுள்ள சுட்டியில் படிக்கலாம்.

http://www.hotsulphursprings.com/history.htm

Pikes Peaks என்னும் 14,110 அடி உயரமுள்ள மலைக்கு கடைசி நாள் போனோம். செங்குத்தான பாதையில் வளைந்து வளைந்து உச்சிக்குச் செல்ல ஒரு மணி நேரம் ஆனது.

எவரெஸ்டில் பாதியிருக்கும் மலையின் உச்சியில் இருக்க 15 நிமிடம் மட்டுமே அனுமதி. மிக மிக மெதுவாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஏறினால், அடடா! இத்தனை அழகைப் பார்க்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தகும்னு தோணுச்சு. தமிழில் அழகை வர்ணிக்க எத்தனை வார்த்தைகள் இருக்கிறதோ அத்தனையும் சேர்த்து சொன்னால்தான் ஒரளவு வர்ணித்ததாகும். மேகங்களா? மலை முகடா? இரண்டும் சேர்ந்து அமைந்த புகைமூட்டமான்னு சொல்ல முடியாத அற்புதம் அது! பூமியின் எல்லையையே பார்த்தது போல் இருந்ததில் சில தருணங்கள் உங்களுக்காக:

 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போகும் போது அங்கங்கே உப்பு குவித்தது போல இருந்த பனி வரும் போது பனி விழும் மலர்வனமா இருந்ததை என்னால் முடிஞ்ச அளவுக்கு தெளிவா எடுத்திருக்கேன்.

அடுத்த சுற்றுலாவுக்கு பனியில் தெளிவா புகைப்படம் எடுக்கும் கேமராவை வாங்கித் தர ஆசிரியரிடம் சொல்லியிருக்கேன் (ரிஷியோட கேமராவை சுட்டுட வேண்டியதுதான்!).

அடுத்ததா வாலண்டைன் தினம் கொண்டாடப் போலாமா? இந்தியாவில் காதலர்களுக்கு மட்டுமே கொண்டாட்டம். இங்கு நம் நேசத்தை அன்புக்குரியவர்களிடம் தெரிவிக்கும் தினம். பள்ளிக் குழந்தைகள் முதல் பாட்டி தாத்தா வரை ஒருவருக்கொருவர் வாழ்த்து அட்டைகள், பரிசுகள் கொடுத்துக் கொள்கிறார்கள். மற்றவர் மீது வைக்கும் அன்பை, நேசத்தை அமெரிக்கர்கள் வெளிப்படுத்தும் விதம், இது போல் நம்மூரில் இல்லையே என நினைக்க வைக்கிறது. பார்க்கும்போதெல்லாம் இல்லாவிட்டாலும் கவலையுடன் இருக்கும் தந்தையை மகன் அணைத்தோ, முத்தமிட்டோ ஆறுதல் அளிக்கும் காட்சிகள் நம்மிடம் ஏன் இல்லை?

வார்த்தைகளால் வருடும் பழக்கம் இருப்பினும், சாய்ந்து கொள்வதில் என்ன தவறு? பசி, தூக்கம், கனவு, காதல் போலவே கண்ணீரும் ஒரு வகை உணர்ச்சியின் வெளிப்பாடு. நமக்காக வாழ்பவர்களின் முன் ஆண்மகன் அழுது, தன் மன உளைச்சலைக் குறைப்பதில் எந்த விதத்தில் வீரம் குறைந்து விடும்? எதுக்கு இந்த பில்டப்னு நீங்க சொல்றது கேக்குது. சிம்பிளா கமல் மாதிரி கட்டிப்பிடி வைத்தியமும், தனுஷ் மாதிரி expressive ஆகவும் (படத்தில்தாங்க, நிஜத்தில் அவங்கெல்லாம் எப்படின்னு எனக்குத் தெரியாது!) நம்மில் எத்தனை பேர் வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் வாழ்கிறோம்? உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

தேவிராஜன் மதுரை மீனாட்சி கோயிலைச் சுத்திக் காட்டினாங்களா? நான் திருவண்ணாமலையைச் சுத்திக் காட்டுறேன் கீழேயுள்ள சுட்டியில் :

http://view360.in/virtualtour/thiruvannamalai/

திருவண்ணாமலையில் இன்னொரு விசேஷம், அந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் எம்.ராஜேந்திரன் மாணவர்களுடன் இணைந்து நடத்தும் மரம் வளர்க்கும் இயக்கம். மாவட்டத்தின் 820 பஞ்சாயத்துகளிலும் 1000 மரக்கன்றுகள் வீதம் நட வைத்துள்ளார். வெறுமனே மரம் வளர்க்காமல் மலைப்பகுதியில் உள்ள கருங்குரங்கு, மான்களுக்கு உணவளிக்கும் விதத்தில் புளி, நெல்லி போன்ற மரங்களை வளர்க்க ஊக்கப்படுத்துகிறார். நாங்க சென்னை சிட்டியில் இருக்கோம். நாங்க என்ன செய்யறது அப்படிங்கறவங்களுக்காகவே கீழேயுள்ள சுட்டி:

http://nizhaltn.org/

ரிஷி காதலர் தினத்துக்கு எழுதின கவிதையைப் படிச்சிட்டு, எங்க தல ஜோவுடன், துணைத் தலைவி நான், உறுப்பினர்கள் தேவிகா, செந்தில்வேல் பாலசுந்தர், தேவிராஜன் மற்றும் பலர் இணைந்து ரிஷியைக் கண்காணிக்கும் குழு அமைத்து உள்ளோம். குழுவோட அறிவுரையாளர் தேவிராஜன் முதலில் ரிஷிக்கு புதுப் பேர் வைக்கணும்னு சொல்லியிருக்காங்க.

ரிஷியோட அரட்டை அடிக்க, நீங்கெல்லாம் ரெடின்னு தெரியும். நான் அவரைப் பேட்டி எடுக்கலாம்னு இருக்கேன். கேள்விகளை அனுப்புங்கள் வாசக நண்பர்களே! (இப்படியாவது நானும் குழுவில் இருக்கேன்னு காட்டிரனும்)

கேள்விக் கணைகளால் ரிஷியைத் துளைக்கும் வரை,

அன்பாய் இருங்கள் ! ஆரோக்கியமாய் இருங்கள் எனக் கூறிப் போய் வருகிறேன்!
நேசங்களுடன்,
சிங்கி.

About The Author

35 Comments

  1. C.PREMALATHA

    வணக்கம் கவிதா. உலகைச் உங்களால் முடிந்த அளவு சுற்றி வந்து அதையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க நன்றி. அப்புறம் ரிஷியை கண்காணிக்க குழுவா? இந்த கொ.ப.செ இருக்கும் வரை எங்கள் தலைவரை யாரும் நெருங்க முடியாதுங்க. முதலில் எங்க வீட்டுக்காரரிடம் சொல்லி எங்க தலை வருக்கு பாதுகாப்பு கொடுக்கோ சொல்லோணும்…

  2. பாலசுந்தர் செந்தில்வேல்

    வணக்கம் தலைவி, உங்கள் கட்டுரை மிகவும் அருமை. காட்சிகளை கண் முன்னே நிறுத்துகிறது. ரிஷிக்கு (கலியுக கண்ணன்)அப்டினு வச்சிடலாம்.

    என்னுடைய கேள்வி,
    ரிஷி, உங்கள் எழுத்துக்களுக்கு யார் தூண்டுகோல்?”
    “நீங்கள் முதல் முதலாக எப்பொழுது எழுத ஆரம்பித்தீர்கள்?”
    “எங்கள் குழுவை பற்றி உங்கள் கருத்து (இப்படை தோற்கின் எப்படை வெல்லும்னு சொல்ல வேண்டாம் அது எங்களுக்கே தெரியும்)?””

  3. DeviRajan

    அதெல்லாம் சரிதான் கவி, ஆனா இந்த கொ.ப.செ நம்மளுக்கு ரொம்ப எதிர்ப்பா இருப்பாங்க போல இருக்கே! அடியாள் எல்லாம் வச்சிருக்காங்களோ?
    ரிஷி ஊர் வேற சிவகாசி விருதுநகர் அப்படின்னு அடிக்கடி நம்மள பயமுறுத்துறாரே! ஆனா எங்க குழுவை எதிர்க்கிற எல்லார்க்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன்! பி கேர்புல்!!!(நான் என்னைச் சொன்னேன்!)

  4. பாலசுந்தர் செந்தில்வேல்

    தேவிராஜன், அவங்க சிவகாசி, விருதுநகர் அப்டின்னா நான் மதுரைக்காரன் இருக்கேன் எதுக்கும், யாருக்கும் பயப்படாதீங்க (என்ன மட்டும் காப்பாத்திடுங்க)

  5. Devika

    வணக்கம் கவிதா.
    கட்டுரை மிகவும் அருமை.

    “கவல படாதீங்க தேவிராஜன் நான் திருநெல்வேலி ஆளாக்கும் ரொம்ப தைரியமான பொண்ணு. (ஆனா ஒண்ணு முதல்ல என்ன நான் காப்பாத்திட்டு தான் உங்கள காப்பத்த முடியும் 🙂 )”

    ரிஷிக்கு நான் 100 மதிப்பென்களுக்கு கேள்வி தயார் பன்னிட்டு இருக்கேன்” (தேர்வில் வெற்றி பெற்றால் நம்ம குழு கொஞ்சம் அனுதாபம் காட்டலாம்னு நினைக்கிறேன்)
    என்ன சொல்றீங்க கவிதா?

  6. C.PREMALATHA

    எல்லோரும் மதுரைக்காரன் சொன்னால் நாங்கள் என்ன மலேசியாக்காரவுகளா? நாங்களும் இராமநாதபுரம் மாவட்டமாக்கும். அருவாளை எடுத்தோம் வெட்டாமல் ………. (அப்படியே ஓடிடுவோம்)

  7. Kavitha Prakash

    கொ.ப.செவை நம்ம தல ஜோவோட நண்பி சொர்ணாக்கா மூலம் கவனிச்சிடலாம் தேவி. சொர்ணாக்கா ரொம்ப நாளா அரட்டை அரங்கிற்கு வரலை. ரிஷிக்கு கலியுக கண்ணன் என பேர் வைக்கும் விழாவிற்கு இப்பின்னூட்டம் மூலம் சொர்ணாக்காவிற்கு அழைப்பு விடுக்கிறோம்.

    பாலசுந்தர் செந்தில்வேல் :
    உங்கப் பேரிலேயே வேலுனு இருக்கே!. யாமிருக்கப் பயமேன்னு கிளம்புங்க””

  8. Rishi

    ஆஹா..! சொன்ன மாதிரியே பேரு வச்சிட்டாய்ங்களா…!!!!
    பாலசுந்தர்.. இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு உங்க பக்கம் வர்றேன்… இருங்க..
    (இந்தக் கூட்டணிய உடைக்கணுமே… நாங்க ரெண்டு பேருதான் இருக்கோம்! எதிர்த்த டீம்ல நாலு பேருல்ல இருக்காக….!!)

  9. பாலசுந்தர் செந்தில்வேல்

    பிரேமலதா, நீங்க இராமநாதபுரம் மாவட்டம் நான் மதுரை மாவட்டம். மதுரைகாரன தவிர ஒருத்தரும் நான் மதுரைகாரன்னு சொல்ல முடியாது.

    ஆகட்டும் தலைவி, வீறு கொண்ட வேங்கை என புறப்படுகிறேன். (எதுக்கும் என் பேர்ல இன்ஷுரன்ஸ் பண்ணி வச்சிடுங்க).

  10. Rishi

    // பி கேர்புல்!!!(நான் என்னைச் சொன்னேன்!)
    யாருக்கும் பயப்படாதீங்க (என்ன மட்டும் காப்பாத்திடுங்க)
    (ஆனா ஒண்ணு முதல்ல என்ன நான் காப்பாத்திட்டு தான் உங்கள காப்பத்த முடியும் 🙂 )” //

    பிரேம்ஸ்.. எல்லோருக்கும் உள்ளூர ஒரு பயம் இருக்கு… நம்மளைப் பத்தி கொஞ்சம் விசாரிச்சிருப்பாங்க போலிருக்கு..! இன்னிக்கு நமக்கு நாலு அடிமைங்க சிக்கிட்டாங்க….:-))

  11. sornakka

    யார்லே அது, சொர்ணா தம்பிய வம்புக்கிழுக்கது?
    அமைதியா இருக்கலாமுன்னா விடமாட்டேங்காங்களேய்யா…

  12. Rishi

    //ரிஷிக்கு நான் 100 மதிப்பென்களுக்கு கேள்வி தயார் பன்னிட்டு இருக்கேன்” (தேர்வில் வெற்றி பெற்றால் நம்ம குழு கொஞ்சம் அனுதாபம் காட்டலாம்னு நினைக்கிறேன்) //

    கவிதா!
    நமக்குள்ல ஒரு உடன்பாடு! தேவிகாவோட கொஸ்டின் கொஞ்சம் அவுட் பண்ணீங்கன்னா… உங்க கட்டுரைகளுக்கு என் 50 பின்னூட்டங்கள் இலவசம்!!!! சம்பளத்திற்கு ஆள் போட்டுக்கூட பின்னூட்டம் போட வச்சிடறேன்!!!!”

  13. Rishi

    //ரிஷிக்கு நான் 100 மதிப்பென்களுக்கு கேள்வி தயார் பன்னிட்டு இருக்கேன்” (தேர்வில் வெற்றி பெற்றால் நம்ம குழு கொஞ்சம் அனுதாபம் காட்டலாம்னு நினைக்கிறேன்) //

    கவிதா!
    நமக்குள்ல ஒரு உடன்பாடு! தேவிகாவோட கொஸ்டின் கொஞ்சம் அவுட் பண்ணீங்கன்னா… உங்க கட்டுரைகளுக்கு என் 50 பின்னூட்டங்கள் இலவசம்!!!! சம்பளத்திற்கு ஆள் போட்டுக்கூட பின்னூட்டம் போட வச்சிடறேன்!!!!”

  14. Rishi

    ஹைய்யா…!! சொர்ணாக்கா உள்ள வந்தாச்சா.. இனி அடி தூள்”தான்! (நம்ம கூட்டணி பலம் கூடிட்டே போவுதே!)
    பாலசுந்தர் தம்பி,
    என் மேல் கருணை காட்டுமாறு முதல்வருக்கு தந்தி அனுப்பியிருக்கேன். மேட்டர் என்னான்னா…. ரி.க.கு. ஒழிப்பு வாரியம் ஒன்றை அமைத்து இதற்கு தீர்வு காணுமாறு!! ஆவன செய்றதா சொல்லிருக்காரு. அதோட மட்டுமல்ல… அவரோட இலவசக் காப்பீட்டுத் திட்டம் இருக்காம். ராமநாதபுரத்துல இருந்து எத்தனை பேரு வந்து உங்களைத் துவைச்செடுத்தாலும் அது உங்களைக் காப்பாத்துமாம்…!!!”

  15. Devika

    ரிஷி, ஆமா நீங்க இப்போ எத்தன பேர சம்பளத்திற்கு வச்சிருக்கீங்க பின்னூட்டம் போட? எதுக்கு கேட்டேன்னா, ரெண்டு ரெண்டா அணுப்புறீங்களே அதான் கேட்டேன்.

    கவிதா வாங்க சீக்கிரம் நம்ம குழுவை பலப்படுத்த வேண்டும்.

    ரிஷி, எங்கள யாரும் நெருங்க முடியாது நொறுங்கி போயிடு(வோம்ங்க)வாங்க.
    ஆன ஒண்ணு சொல்றேன். நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க……………

  16. Devika

    தேவிகாவோட கொஸ்டின் கொஞ்சம் அவுட் பண்ணீங்கன்னா… உங்க கட்டுரைகளுக்கு என் 50 பின்னூட்டங்கள் இலவசம்!!!! ”

    இதெல்லாம் வேறயா………… அப்போ ஒரு பரிட்ச்சையும் தானா படிச்சி எழுதல?…”

  17. Kavitha Prakash

    சொர்ணாக்கா,

    ரிஷி உங்க தம்பின்னு தெரிந்தும் பேர் வைக்க உங்களை அழைக்கிறோம் என்றால், சுத்துப்பட்டு எட்டு கணடத்திலும் (எத்தனை நாளைக்குத்தான் கிராமம்னு சொல்றது?) பரவியிருக்கும் உங்களின் நியாயமான தீர்ப்பு பற்றிய நம்பிக்கைத்தானுங்க!

    விழாவுக்கு மறக்காம வந்திருங்கோ!

  18. Kavitha Prakash

    நண்பரே!

    //சம்பளத்திற்கு ஆள் போட்டுக்கூட பின்னூட்டம் போட வச்சிடறேன்// – வாரே வாவ்.

    இதைக் காட்டியே ஆசிரியரிடம் என் சம்பளத்தை உயர்த்தச் சொல்லனும்.

    தேவிகா,

    எங்கே கொண்டாடலாம் என் சம்பள உயர்வு விருந்தை?. உங்க கேள்வியில் பாதி சொன்னால் 50 பின்னூட்டம் என்றால், முழுசாச் சொன்ன, சொர்ணாக்கா சம்பாதித்தது முழுக்க ரிஷி எனக்குக் கொடுத்திருவாரு போலிருக்கே?.

    தல ஜோ,

    பறந்து வாங்க பாகிஸ்தானிலில் இருந்தாலும் !. தமிழ்நாட்டை விலைக்கு வாங்கணும் ரிஷி கொடுக்கப் போகும் பணத்தில்

  19. Jo

    என்னதிது, தல உள்ள வர கொஞ்சம் தாமதமானதால, எதிர்க்கட்சி ரொம்ப வாலாட்டுற மாதிரி இருக்கே.

    அன்பார்ந்த கட்சி நண்பர்களே, தமிழனுக்கு அழகு வீரமும், காதலும். எதிர்க்கட்சி காதலை கையில் எடுத்ததும், நீங்க வீரத்தைக் கையிலெடுத்ததெல்லாம் சரிதான். அதை அப்படியே தக்க வச்சுக்காம இப்படி தொடை நடுங்கலாமா? தல இருக்க பயமேன்..

    ரிஷின்னு பேர் வச்சுட்டு காதல் லீலைகள் புரியும் எதிர்க்கட்சியினரே, எச்சரிக்கை, என்னோட தொண்டர்களை யாருக்கும் அடிமையாக விடமாட்டேன்.

    சொர்ணாக்கா, நீங்க கூட பயந்து போய் எதிரணிக்கு துணை போய்ட்டீங்களே, இவ்ளோ தானா உங்க வீரம்?

  20. SANTHOSHI

    வணக்கம் கவிதா பிரகாஷ்.
    கட்டுரை அற்புதம். பசி, தூக்கம், கனவு போன்று கண்ணீரும் ஓர் அற்புதமான உணர்வுதான். மிக அழகாய் சொல்லியுள்ளீர்கள். ஆண்கள் அழுதால் நிறைய பேர் அதை தவறாக நினைக்கிறீர்கள். இதில் ஆண் மகன் அழலாமா என்றொரு கேள்வி வேறு! ஏன் ஆண் மகன் அழக்கூடாதா? அவன் அழுகின்றான் என்றால் எந்த அளவிற்கு பாதிக்கப் பட்டிருக்கிறான் என்று யாரும் புரிந்து கொள்வதில்லை. இது பில்டப் இல்லை கவி. உண்மை. உண்மையைக் கூறிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
    அது சரி எதற்கு ரிஷியை இப்படி எல்லோரும் சேர்ந்து கலாய்க்கிறீர்கள்? பாவம் இல்லையா?

  21. DeviRajan

    இப்போ என்ன பிரச்சினை? ரிஷி உண்மையைச் சொல்லணும் ஆனா சொல்லமாட்டேங்கறாங்க. ஒரு உண்மையை மறைக்க எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேணும்னாலும் தயாரா இருக்காங்க, கேட்டா ஆள் வெச்சு மிரட்டறாங்க. அடுத்த கட்டமா, விருதுநகர் கவுன்சிலருக்கு நிக்கப் போறாரு போலருக்கு. கவி, நீங்க இந்த லஞ்சத்துக்கு மட்டும் துணை போயிடாதீங்க! நம்ம குழு உண்மைக்காக, உண்மையை கண்டுபிடிக்க உருவான குழு. காதலா வீரமான்னு நம்ம சண்டை போடலை. காதலை வீரமா ஒத்துக்கணும்னு சொல்றோம்! கரெக்ட் தானே!(என்னையே கன்ப்யூஸ் பண்றாங்களே) பாலசுந்தர் நீங்க மதுரைதானே, அப்ப எதுக்கும் விருதுநகர் பக்கம் அடிக்கடி உங்க கேமராவை திருப்பி வையுங்க(உங்க கண்ணைத்தான் அப்படிச் சொன்னேன்)

    (அப்பா நாம ஆரம்பிச்சு வச்சது நல்லா போயிகிட்டு இருக்கு!!!)

  22. பாலசுந்தர் செந்தில்வேல்

    தல, ரி.க.கு ஒழிப்பு வாரியத்துக்கு என்ன பதில்? நாம பிரதமர சந்திச்சே ஆகணும். தலைவி, தமிழ்நாட்ட வாங்கினா மதுரைய மட்டும் எனக்கு குடுத்துடுங்க ப்ளீஸ் (யாரும் பயப்பட வேண்டாம் நான் தனி மாநிலம் எல்லாம் கேட்க மாட்டேன்)

    ரிஷி அண்ணே, எவ்வளவு பேர் வந்து தொவச்சாலும் நாங்க (அதவாது நான்) தாங்குவோம். எங்க தல வந்தாச்சு, இனிமே எதுக்கும் பயப்பட மாட்டோம்.

  23. Devika

    தல, உங்களை வருகை இந்த குழுவிற்க்கு புது தெம்பு ஊட்டியுள்ளது.
    தல இருக்க பயமேன்.., வேல் வேல் வெற்றி வேல் என்று புறப்பட்டு விட்டோம்.

    (கவி, நீங்க இந்த லஞ்சத்துக்கு மட்டும் துணை போயிடாதீங்க!”)
    நம்ம கவி அப்படியெல்லாம் போகமாட்டங்க தேவி. நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் காதலை வீரமா ஒத்துக்க வைக்கணும்னு தான் இந்த குழு உருவானது ஆனா இப்போ போற போக்க பாத்தா நெறயா உண்மை வெளிய வரும் போல இருக்கே…… (லஞ்சம், காதல் …….)
    இதுதான் போட்டு வாங்குறதோ……?”

  24. Jo

    பாலசுந்தர், எதிர்க்கட்சி ரி.க.கு, கொ.ப.சென்னு சொல்லிட்டிருக்காங்கன்னா, அங்க ஏற்கனவே அரசியல் புகுந்துடுச்சு. கவுன்சிலர், லஞ்சம் இதெல்லாம் அரசியல் மொழி தானே! நமக்கு எதுக்கு அரசியல்?தேவி சொன்ன மாதிரி நாம உண்மைக்காக பாடுபடுற குழு. உண்மையான குழு. நமக்கிட்ட மக்கள் சக்தி அதிகமா இருக்கு(6 பேர் இருக்கோம்ல) அதனால, அரசியலில்லா மக்கள் இயக்கம் ஆரம்பிச்சு உண்மையை வரவழைப்போம்.

    நம்ம கவி வருங்கால ஆட்சியர். மக்களுக்கு சேவை செய்யப் போறாங்க. அவங்களைப் போய் லஞ்சம்னு சொல்லில்லாம் யாரும் விலைக்கு வாங்க முடியது. ரிஷியோட பாச்சா கவிகிட்ட பலிக்காது.

  25. பாலசுந்தர் செந்தில்வேல்

    தல, எதிர்கட்சியினர் அனைவரும் பயந்து பின் வாங்கி விட்டதால், நம் குழு வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டுகிறேன் 🙂 (இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?).

    ரிஷி அண்ணே, நீங்க ஒத்துக்கிறத தவிர வேற வழியில்ல.

    தலைவி, நாம இந்த வெற்றியை எங்கே கொண்டாடலாம்?

    நம் குழுவினர் அனைவரும் வெற்றியை கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  26. Hema

    என்ன நடக்குது கவிதா…. எல்லாருமா சேர்ந்து ஏன் எங்க ஊர்காரர போட்டு வாட்டி எடுக்குறீங்க? ரிஷி கவலைப்படாதீங்க….உங்க தரப்பு நியாயங்களை எடுத்து சொல்ல நானும் வரேன்….

  27. Rishi

    //ரிஷி, ஆமா நீங்க இப்போ எத்தன பேர சம்பளத்திற்கு வச்சிருக்கீங்க பின்னூட்டம் போட? எதுக்கு கேட்டேன்னா, ரெண்டு ரெண்டா அணுப்புறீங்களே அதான் கேட்டேன். //
    தேவிகா,
    வாங்கற சம்பளத்துக்கு அதிகமா வேலை பார்க்குறாரு என் மேனேஜரு…!! அவரக் கொஞ்சம் உணர்ச்சி வசப்படாம இருக்கச் சொல்லணும்!!

    ஜோ,
    நாம என்ன அப்படியா பழகிருக்கோம்.. நாமள்லாம் ஒண்ணுக்குள்ள ஒன்னு இல்லையா… கொஞ்சம் தனியா புறவாசல் வழியா வாங்க.. பேசி.. கரெக்ட் பண்ணிடலாம். (அப்பாடி! தலயவே உள்ள இழுத்தாச்சு!)

    தேவிராஜன்,
    ஒளிப்பதிவாளர் பாலசுந்தருக்கு உங்க இன்ஸ்ட்ரக்ஷன்லாம் பலமா இருக்கு? கோடம்பாக்கத்துக்கு அடுத்த லேடி டைரக்டர் ரெடி போலருக்கு! நம்ம பிரேம்ஸ் எடுக்கற படத்துக்கு நீங்க தான் டைரக்டர்.நான் ஹீரோ! (அப்பாடி! இன்னொரு டிக்கெட்டையும் வளைச்சுப் பிடிச்சாச்சு!!!)

    தேவிகா,
    வேல் வேல் வெற்றிவேல்னு சொல்லிக்கிட்டு பழனிக்கு பாதயாத்திரை போனாக்கூட புண்ணியம் கிடைக்கும். இந்தக் கூட்டணியோட சேரலாமா?? அப்படியே நம்ம பக்கம் வந்துடுங்க.. நைஸா காதுல மட்டும் சொல்றேன்.. (அப்பாடி! தேவியோட இனி கா இல்லை.. பழம்தான்!!!!)

  28. Rishi

    //அது சரி எதற்கு ரிஷியை இப்படி எல்லோரும் சேர்ந்து கலாய்க்கிறீர்கள்? பாவம் இல்லையா?//
    அட! நமக்காக குரல் கொடுக்கக் கூட ஒரு ஜீவன் இருக்கே! வாங்க சந்தோஷி!
    இந்த அரட்டையை படிச்சிட்டு கரெக்டா பதில் கொடுத்திருக்கறது நீங்கதான்!! நன்றி.

  29. Rishi

    மக்களே
    ஆக மொத்தத்துல கவிதைங்கற பேர்ல நான் ஒரு நாலு வரி எழுதுனதுக்கே இம்புட்டு பூகம்பம் வெடிக்குதே.. அடுத்து ஒரு பரிசுத்தமான காதல் காவியம் முழுநீள நாவல் எழுதப் போறேன்னு சொன்னா என்ன்ன்ன்னா ஆகப்போவுதோ!!!!!!

  30. Kavitha Prakash

    வாங்க சந்தோஷி!,

    நான் விவாதிக்க விரும்பிய கருப்பொருளுக்கு, சரியான கருத்து சொன்னதுக்கு நன்றி. மெயின் கதையில் காமெடி வேண்டாமா?.

    அதுக்குத்தான் ரிஷியை வம்பிழுக்கிறது !. ஜாலியா எடுத்துக் கொள்ளுங்களேன்.

  31. Kavitha Prakash

    ரி.க.கு. :

    நிச்சயம் ரிஷியின் பாச்சா இங்கே பலிக்காது. வருங்கால ஆட்சியராகிவிட்டாலும் பராவாயில்லை. ஊராட்சி மன்றத் தலைவி ஆகிக் கொள்கிறேன்.

    ரிஷி,

    நீங்க ஒத்துக்கிறத தவிர வேற வழியில்ல.

  32. பாலசுந்தர் செந்தில்வேல்

    ரிஷி அண்ணே, நீங்க எப்படி பேசினாலும் எங்க குழுவில இருக்கிற யாரும் உங்க பக்கம் சாய மாட்டாங்க (சாயவும் விட மாட்டோம்…..) நாங்க வெற்றி பெற்றதா அறிவிச்சாச்சு. விழா ஒண்ணு தான் பாக்கி அது உங்க தலைமையில (செலவுல) நடக்கும். நடத்தி தரும் படி எங்கள் குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

  33. Devika

    ரிஷி,
    இப்படி ஒரு கட்சி வெற்றி பெற்ற உடனே அவங்கள எதிர் கட்சி ஆளுங்க இளுக்குறது அரசியல்ல சாதாரணமப்பா.
    ஆன நாங்க வெற்றி பெற்றது இப்போ தான் உறுதியாகி உள்ளது.

    இப்போ நாங்க உங்க அடுத்த படைப்புக்காக காத்துட்ருக்கோம்.

  34. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்

    ரிஷியின் எதிர்க்கட்சி திட்டமிட்டு கூட்டு சதி செய்து விட்டதால் அவர்களது வெற்றி செல்லாது என அறிவிக்கப்படுகிறது.

    (பின் குறிப்பு : நிச்சயமாக இது ஜனாதிபதியின் பின்னூட்டம்தான்! ரிஷியின் சம்பள ஆள் போட்டதல்ல!!!!)

  35. Balasundar Senthilvel

    தல, ரிஷி குழுவினர் கள்ள ஓட்டு போட்டு ஜெயிக்கிற கோஷ்டின்னு நெனைக்கிறேன். இவங்க இப்டி பண்ண பண்ண நம்ம மேல உள்ள பயம் அதிகமாகுதுன்னு கண்கூடா தெரியுது. (வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்.. கொள்கை வெல்வதே நான்(ம்) கொண்ட லட்சியம்)

Comments are closed.