சில்லுனு ஒரு அரட்டை !

வணக்கம் நண்பர்களே!

எப்படி இருக்கீங்க? நான் நல்லாருக்கேன்.

வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவம் எடுக்குது நம்ம சென்னை தட்பவெப்பம் மாதிரி. 9 மணி வரை குளிர், 5 மணி வரை வெயில், திரும்ப பனி – கொஞ்ச நாள்ல பெங்களூர் மாதிரி வந்துடுமோன்னு நினைச்சா, ஒரு வாரமா சரியான வெயில். உலக வெப்பமயமாதல்னு எல்லோரும் சொல்றப்போ இல்லை இது உலகக் குளிர்மயமாதல்னு (GLOBAL COOLING) இன்னொரு பக்க விஞ்ஞானிகள் சொல்றாங்க. 1940-70கள்ல உலகக் குளிர்மயமாதல் ஏற்பட்டதாவும், அது அடுத்த ‘பனிக் காலம்’ (ICE AGE) வரப்போறதுக்கு முன்னறிவிப்புன்னும் சொல்றாங்க. இந்தச் சுட்டிகள்ல விலாவாரியாப் படிக்கலாம்:

http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/all-that-matters/Global-warming-or-global-cooling/articleshow/1034077.cms

http://www.foxnews.com/scitech/2010/01/11/years-global-cooling-coming-say-leading-scientists/

அவங்க சொல்றதைப் படிக்கறதை விட நம்ம மருத்துவர் ஐயா (அந்த ‘மருத்துவர் ஐயா’ இல்லைங்க, நான் சொல்றது நம்ம அரட்டை நண்பர் சுப்பிரமணியன் ஐயாவை.) என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்கத் தான் ரொம்ப ஆவலா இருக்கேன்.

வெப்பமயமாதலா, குளிர்மயமாதலான்னு ஒரு சர்ச்சை நடக்குதுன்னா, இன்னொரு சர்ச்சை சிவராத்திரிக்கு. பாதி பேர் பிப்ரவரி 12ல சிவராத்திரின்னு சொல்ல, இன்னொரு பாதி மாசி மாசம்தான் சிவராத்திரி, அதனால மார்ச் 13ம் தேதி தான் கொண்டாடுவோம்ங்கறாங்க. இதெல்லாம் வேதங்களையும், சாஸ்திரங்களையும் சரிவர புரிஞ்சுக்காததால வர்ற குழப்பமா என்னன்னு தெரியலை. ஆனால் இந்தக் குழப்பத்துக்கு நம்ம பாலகிருஷ்ணன் விடை சொல்வார்னு நினைக்கிறேன்.

அடுத்த சர்ச்சை ‘பி டி கத்தரிக்காய்’. ஐயய்யோ நீயுமான்னு ஓடாதீங்க. இது சரியா தவறான்னு ஆராய்ச்சியில் நான் இறங்கப் போறதில்லை. ஆனால் ஒரே ஒரு தகவல் மட்டும் சொல்லிக்கிறேன். "மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் விற்கவோ, பயரிடவோ தடை செய்யப்பட்டு உள்ளது."

இத்தோட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டு என் சோகக்கதைக்கு வர்றேன். போன வாரம் வழக்கம்போல ‘கடன் அட்டை’ (CREDIT CARD) வேணுமான்னு கேட்டு தொலைபேசியில் அழைப்பு வந்துச்சு. நான் எப்பவும்போல ஆர்வமில்லைன்னு சொல்லலாம்னு நினைச்சப்போ, வழங்கறது STATE BANK OF INDIAன்னு சொன்னதும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டேன். (கேட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு அப்பத் தெரியல) ஏன்னா அரசாங்க வங்கியாச்சே. அவங்க சொன்ன கவர்ச்சிகரமான திட்டங்கள் என்னன்னா,

1. irctc.co.in (இந்திய ரயில்வே இணையதளம்) ல் பயணச்சீட்டு பதிவு பண்ணினா, 10% பணம் திரும்பத் தரப்படும் காலம் முழுக்க
2. Apollo pharmacy ல் 20% வரை தள்ளுபடி காலம் முழுக்க
3. Pizza hut ல 100ரூ தள்ளுபடி முதல் தடவை மட்டும்
4. கடன் அட்டையின் குறைந்தபட்ச தொகை ரூ 80,000.
5. ரூ 7,00,000 க்கு ஆயுள் காப்பீடு, மாசத்துக்கு வெறும் ரூ 24 கட்டினா போதும்.
6. வருட வாடகை 250ரூ, அதுவும் தள்ளுபடி செய்யப்படும் – வருசத்தில் ரூ 25,000க்கு மேல் கடன் அட்டை உபயோகித்து பொருட்கள் வாங்கிருந்தா.
7. பெட்ரோல் வங்கிகளில் 10% தள்ளுபடி.

இதெல்லாம் கேட்டப்பறம் ஆர்வமில்லைன்னு சொல்ல வாய் வரலை. சரின்னு சொல்லிட்டேன். மட மடன்னு வேலை நடந்துச்சு. 10 தொலைபேசி அழைப்புகள், 3 நேரடி விசாரிப்புகள் அது இதுன்னு எல்லாம் முடிஞ்சு, 10 நாள்ல அட்டை கைக்கு வந்துடுச்சு. கூடவே ‘கட்டாயம் படி’ன்னு சொல்லி ஒரு குறிப்பேடும், சில பல காகிதங்களும். படிச்சுப் பார்த்தப்போதான் தெரிஞ்சது, மேல சொன்ன எல்லாமே உண்மையில்லைன்னு.

1. irctc.co.in – 10% தள்ளுபடி – SBI Railway card க்கு மட்டும் – அதுவும் குளிர்சாதன வகுப்பிற்கு மட்டும் – அதிலும் ‘Subh Yatra’ திட்டத்திற்கு மட்டும் – இதுக்கு வருடத்திற்கு 10,000 ரூ வரை கட்டணும்.
2. Apollo pharmacy – இந்த வார்த்தையையே காணோம்.
3. Pizza hut – இதையும் காணோம். அதுக்குப் பதில் இன்னொரு பெரிய்யயய கடையில் 100ரூக்கு ஒரு தள்ளுபடிச் சீட்டு. அந்தக் கடையில் குறைஞ்சபட்ச விலையே ஆயிரங்கள்ல இருக்கும்போல.
4. 80000 ல் 3ல் ஒரு பங்கு கூட இல்லை
5. ஆயுள் காப்பீடு கட்டணம் – 24 ரூ + 20 ரூ (வங்கிக்கு) + அந்த மாத நிலுவைத் தொகையில் 0.1%. ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் இயற்கை மரணம் எய்தினால் 1,00,000 ரூ. செயற்கை மரணம் எய்தினால் 6,00,000 ரூ குடும்பத்திற்கு. குறிப்பிட்ட வயதுக்குள் மரணமடையாவிட்டால் ஒரு பைசாவும் கிடையாது. (நாம மாசாமாசம் கட்டுன பணம் என்னாச்சுன்னு கேள்வில்லாம் கேட்கக் கூடாது. இந்தப் பணத்திற்காக சாகவா முடியும்?)
6.ரூ25000 = 250ரூ வாடகைத் தள்ளுபடி இரண்டாமாண்டிலிருந்துதான் தொடங்கும். 250ரூ எடுத்துட்டுதான் அட்டையே கொடுக்கறாங்க.
7. காதுல பூ

இத்தனையும் இதுக்கு மேலயும் படிச்சுப் பார்த்துட்டு தலை சுத்திடுச்சு. இந்தக் கடன் அட்டையே எனக்கு வேண்டாம்னு உடனடியா திருப்பிக் கொடுத்தாலும் 250ரூ திருப்பித் தர மாட்டாங்க. மாசாமாசம் ஆயுள் காப்பீட்டுக்குப் பிடிக்கிற தொகைக்கு 20 நாளைக்குள்ள பணம் கட்டணும். இல்லைன்னா அதுக்கொரு வட்டியும், சேவை வரியும் பிடிச்சுக்குவாங்க. இதெல்லாம் தேவையா எனக்கு! எனக்கு முதல்ல அழைப்பு விடுத்த அந்தப் பெண்ணைத்தான் தேடிட்டிருக்கேன்.. புண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்துன்னுவாங்க, புகை பிடிக்கிறது தப்புங்கறதால, நல்ல இசை கேட்டு மனசை ஆத்திகிட்டேன். உங்களுக்கும் தேவைப்பட்டா இங்க சொடுக்குங்க

http://www.nilashop.com/product_info.php?products_id=489

பழிக்குப் பழி வாங்க நினைக்கிறவங்க நம்ம ரிஷியோட திட்டங்களைப் பின்பற்றிப் பாருங்க:

https://www.nilacharal.com/ocms/log/03240810.asp

நான் சொல்றதெல்லாம் ஒன்னே ஒன்னுதான். தீர விசாரிக்காம எந்தச் செயலையும் செய்யாதீங்க.

தீ விபத்தில் காயம்பட்டவர்களுக்கும், ஒட்டிய காது, மூக்கு அல்லது வாய் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கும், கொடைக்கானல் பாசம் மருத்துவமனையில் மார்ச் 23லருந்து ஏப்ரல் 4 வரைக்கும் இலவச அறுவை சிகிச்சை (plastic surgery) செய்றாங்க. முழுக்க இலவசம்னு சொல்றாங்க. தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 04542 – 240668, 245732. தேவையுள்ள நபர்களுக்குத் தெரியப்படுத்துங்க, நண்பர்களே!

சென்னையில் புறநகர்ல புற்றீசல் மாதிரி பலமாடிக் குடியிருப்புகள் வர ஆரம்பிச்சுடுச்சு. செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், பாண்டிச்சேரி வரை போயிட்டாங்க, பெரிய பெரிய ஜாம்பவான்லாம் களத்தில் இருக்காங்க. ஆனா குறைஞ்சது 50 லட்சம் இருந்தாதான் வாங்கமுடியும் போல. என்னால முடியாது. ஆனா வாங்கற சக்தி உள்ளவங்களுக்கு நிறைய குழப்பங்கள் இருக்கும் – இந்தத் தளத்தில் ஓரளவுக்கு எல்லா கட்டுமானங்களுக்கும் விமர்சனங்களும், உண்மை நிலவரமும் இருக்கு. போய்ப் பாருங்களேன்:

http://www.chennaimetroblogs.com

சரி அறுவையை நிறுத்தற நேரம் வந்தாச்சு. போன வாரக் கதைக்கு பாலசுந்தர் சரியான பதிலளிச்சிருந்தார். விடை என்னன்னா
//
அந்த முனிவர் அண்ணனின் குதிரையை தம்பியும், தம்பியின் குதிரையை அண்ணனும் செலுத்துமாறு கூறினார். இதன்படி தம்பி முன்னால் சென்றால், போட்டியின் படி அண்ணன் செலுத்தும் தம்பியின் குதிரை மெதுவாக வந்து, தம்பி வெற்றி பெறுவான். அதுபோலவே அடுத்தவனுக்கும். இவ்வாறு எண்ணி இருவரும் வேகமாக சென்றனர். உண்மையில் போட்டி இவர்களில் யார் மெதுவாக வருகிறார்க்ள் என்பதல்ல. யாருடைய "குதிரை" மெதுவாக வருகிறது என்பதே. இதைத்தான் அந்த முனிவர் அவர்களுக்குப் புரிய வைத்தார்.
//

குறிப்பு: இக்கதை எனது சொந்தக் கற்பனை அல்ல. பள்ளிப் பாடத்திலிருந்து சுட்டது.

இப்போ அடுத்த அரட்டைக்குத் தகவல் சுடப் போறேன். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது

உங்கள் ஜோ

About The Author

19 Comments

  1. இரா.சேகர்

    படிப்பினையூட்டும் கட்டுரை..நன்று

  2. C.PREMALATHA

    வணக்கம் ஜோ! இவ்வளவு புத்திசாலியா இருந்துட்டு இப்படி ஏமாறலாமா? அதுவும் நம்ம அரசாங்கம் நிலை தெரிந்தும்! கொடைக்கானலில் நடைபெறும் இலவச சிகிச்சை பற்றி சொன்னீர்கள். பயனுள்ள தகவல். நன்றி. வாழ்த்துக்கள்.

  3. Balasundar Senthilvel

    ரொம்ப அருமை தல. ஆனா இந்த கடன் அட்டை ஒரு நாய் மாதிரி பழக்கிட்டா வாலாட்டும் இல்லேனா கடிச்சுடும். வரம் பாதி சாபம் பாதி கலந்து செய்த கலவை இந்த கடன் அட்டைகள்.

  4. Rishi

    வணக்கம் ஜோ
    என்கிட்ட ஐசிஐசிஐ, ஹெடிஃப்சி, ஆக்ஸிஸ்… இன்னும் பல பேங்க்குகளோட கிரெடிட் கார்டு வாங்குறதுக்கான விபரங்கள் இருக்கு… பாத்தீங்கன்னா சா…ர்.. இப்போ வந்து.. இந்தப் புது ஸ்கீம்ல.. ஹலோ..ஹலோ.. எங்கே ஓடுறீங்க..கொஞ்சம் நில்லுங்க.. ப்ளீஸ்… ஒரு கார்டாவது வாங்கிக்கங்க…!!!!!!

  5. Jo

    நன்றி இரா.சேகர். ப்ரேமா, உங்களுக்கும் நன்றி. ஆனா, அரசாங்கத்திலும் சில நல்ல திட்டங்கள் இருக்கத்தான் செய்யுது. என்ன, அதனோட விவரங்கள் நமக்கு சரிவரத்தெரிய மாட்டேங்குது.

    பாலசுந்தர், ரொம்ப அனுபவப்பட்டிருப்பீங்க போல.. தத்துவமா பொழியறீங்க.

    ரிஷி,

    இதுக்கு தான் சொல்றது, ஃபோன் ல ஒரு பொண்ணு பேசிட்டா, யாரு என்னன்னு தெரியாம மொக்கை போடக்கூடாதுன்னு. ஒரு விற்பனைப் பெண்ணையும் விட மாட்டீங்க போலருக்கு. பார்த்துங்க. பேசறதோட நிறுத்துக்கீங்க. ஆர்வக் கோளாறுல கார்டெல்லாம் வாங்கிடாதீங்க.

  6. Rishi

    பாலகிருஷ்ணன் சாரும், டாக்டர் ஐயாவும் பதில் சொல்லுவாங்கதான். ஆனால் பின்னூட்டப் பெட்டிகளை நிரப்பி நிரப்பி நாம அடிச்ச கூத்துல.. கொஞ்சம் ஒதுங்கிட்டாங்க போலிருக்கு. அவங்க பின்னூட்டங்களையே காணோம்!!!

  7. maayan

    இப்படிதான் இந்த ஃபோன் மூலமாகவே பலரும் ஏமாந்துவிடுகின்றனர். என்ன பேச வேண்டும் என்று இல்லாமல் அவர்கள் இஷ்டத்திற்கு அளந்துவிடுகின்றனர். அவர்கள் சொல்வது அத்தனையும் உண்மையாகத்தான் இருக்கும், ஆனால் சின்ன விஷயத்தை பெரிதாக ஃபில்டப் கொடுத்து சொல்லிவிடுகின்றனர். இனியாவது எழுத்துப்பூர்வமாக உள்ளவற்றை மட்டுமே நம்பி தலையை கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் டெர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்களும் முழு நீல புத்தகங்களாகவும், சிறிய எழுத்துக்களிலும் கொடுத்து, அவற்றைப் பற்றி அறியும் ஆபத்துகளை அறியவிடாமல் செய்துவிடுகின்றன. எல்லாத்துக்கும் மேல் நம் சோம்பேரித்தனமே மூல காரணம். இந்த மாதிரியான விஷயத்தையெல்லாம் முற்றிலும் விசாரித்து அறிந்தபின் வாங்குவதே சிறந்தது, ஆனாலும் அவர்கள் விடமாட்டார்கள் இன்றைக்கே இந்த ஆஃபர் முடிந்துவிடும் என்று நம் மனதை மாற்ற முயற்சிப்பர்.

    இப்படித்தான் நண்பர் ஒருவரிடம் இதே மாதிரி ஒரு கால், உங்களைப்போன்ற சிலருக்கு இ.எம்.ஐ கார்டு வழங்குகிறோம். இதை கண்டிப்பாக வாங்க வேண்டும், ஆனால் சார்ஜ் எதுவும் கிடையாது என்று சொல்ல, வாங்கியாச்சு. அப்பறம்தான் அறிந்திருக்கிறார், இது கம்பல்சரி அல்ல என்று. இப்படி வாய்வார்த்தைகளில் ஏமாறுபவர் பலர். ஏமாற்றுபவரும்!!

  8. Dr. S. Subramanian

    >>பாதி பேர் பிப்ரவரி 12ல சிவராத்திரின்னு சொல்ல, இன்னொரு பாதி மாசி மாசம்தான் சிவராத்திரி, அதனால மார்ச் 13ம் தேதி தான் கொண்டாடுவோம்ங்கறாங்க. இதெல்லாம் வேதங்களையும், சாஸ்திரங்களையும் சரிவர புரிஞ்சுக்காததால வர்ற குழப்பமா என்னன்னு தெரியலை

  9. Balasundar Senthilvel

    தல, அது எதுக்கு அப்டி போட்டேன்னா வெளிய போகும் போது எதாவது ஒரு பொருள் நம்ம கிட்ட இருக்கிற பைசாவ விட கூட இருந்தா வாங்காம வந்துடுவோம் ஆனா அட்டை இருந்தா தேய்ச்சிடுவோம் (அது தேவையில்லைனா கூட). அட்டை வாங்கினாலும் பெரிய கடைகளுக்கு போகும் போது அட்டையை வீட்டில் வைத்து விட்டு செல்வது நல்லது.

    நம் குழு அன்பர்களே ரிஷியை பற்றி இன்னுமொரு துப்பு கிடைத்துள்ளது.

    ரிஷி அண்ணே, எங்க சக்ரவியூகத்துல இருந்து தப்பிக்கவே முடியாது.

  10. Dr. S. Subramanian

    My comment on Sivaratri did not appear at all in full. Only what I quoted from Jo appeared. Anyway here is my response. Maha Shivaratri has to occur on the night of Chaturdasi(14th day) of Krishna paksham (dark half of the moon) and extend into the next day (amAvasai) in the month of mAsi. This year the condition was satisfied only on February 12th even though mAsi began on Feb 13. That is because the month Panguni begins on the amAvasai day in March and so the March day does not cover the conditions in full.

  11. Jo

    சுப்ரமணியன் சார், எப்படி இப்படி எல்லா விஷயத்தையும் கரைச்சுக் குடிச்சிருக்கீங்க. விளக்கத்துக்கு ரொம்ப நன்றி.

  12. Jo

    மாயன், எங்க போனீங்க இவ்ளோ நாள்? உங்க அரட்டையை ஆவலோட எதிர்பார்த்துட்டிருக்கோம்.

  13. Jo

    பாலா, நீங்க சொல்றது ரொம்ப சரி. 1ம் தேதியானா, கடனை அடைக்கிற மன உறுதி இருக்கிறவங்க மட்டும் தான் கடன் அட்டை வாங்கணும்.

  14. maayan

    திரும்பவும் வந்துட்டோம்ல..(வடிவேலு பாணியில்)

  15. Dr.S. Subramanian

    Jo:
    I made two other posts– one on globl warming which you expected from me and another a so-called buyer beware” advice on the credit card marketing scheme. Your editor chose not to publish them.”

  16. nila

    //I made two other posts– one on globl warming which you expected from me and another a so-called buyer beware” advice on the credit card marketing scheme. Your editor chose not to publish them.//
    Dr,
    Scientists should not jump into conclusions without knowing the fact.
    Your comments were not received for whatever reason. why would we choose not to publish informative comments?”

  17. Rishi

    பின்னூட்டங்களில் ஒற்றை மேற்கோள் குறி இருந்தால் அது டேட்டாபேஸில் போய் ஸ்டோர் ஆகாது. ஏனெனில் அக்ஸஸ் டேட்டாபேஸ், ஒற்றை மேற்கோள் குறியை மெமொ ஃபீல்டுக்காக உபயோகப்படுத்திக் கொள்கிறது. அதனால் மேலும் ஒரு ஒற்றை மேற்கோள் குறி இருக்கும்போது அது ஸ்டோர் ஆவதில்லை. இரட்டை மேற்கோள் குறி போட்டால் ஒன்றும் பாதகமில்லை. எதுவும் போடாவிட்டாலும், பின்னூட்டம் வரவில்லையென்றால் வேறு ஏதேனும் தற்காலிக தொழில்நுட்பக் கோளாறாகத்தானிருக்கும். இதை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். வன்மமான செய்திகளோ, தனிநபர் தாக்குதல்களோ, ஆபாச பின்னூட்டங்களோதான் மட்டுறுத்தப்படுகின்றன. மற்றபடி, அவை வெளியிடாமல் மறைப்பதற்கு காரணம் ஒன்றுமில்லை.

  18. P.Balakrishnan

    பள்ளிப் பாடம் படிப்பதற்கும் பிறருக்கு எடுத்துக் கூறுவதற்கும் தானே!

  19. Jo

    நன்றி பாலகிருஷ்ணன் சார்! சுட்ட தகவலுக்குக் கூட ஒரு சமாதானம் கொடுத்துட்டீங்க.

Comments are closed.