சில்லுன்னு ஒரு அரட்டை

"உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்.. என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்.."

இந்தப் பாட்டு தாங்க எனக்கு உடனே தோணுச்சு.. இந்த வார வெப் ஜாக்கி நீ தான்னு சொன்னப்போ!

சரி நம்ம முன்னோடிகள் எவ்வழி சென்றார்களோ அவ்வழி செல்வோம்னு ஸ்வர்ணாக்கா (சொர்ணாக்கா!?) பக்கத்தைப் புரட்டிப் பார்த்தா நம்ம சோகக்கதையையே அவங்களும் எழுதியிருக்கிறாங்க.. காலையிலிருந்து ராத்திரி வரை கணிப்பொறியே கதின்னு கிடக்கிறதால கொஞ்சூண்டு (என் மனசைத் தேத்திக்கிறதுக்காக கொஞ்சம்னு சொல்லிக்கறேன்) எடை கூடிப் போனதா வீட்டில் சொல்றாங்க.. வேற வழியில்லாமல் நானும் நடக்க ஆரம்பிச்சு இரண்டு நாள் தாங்க ஆச்சு.. இவ்ளோ நாள் சுள்ளுன்னு காய்ஞ்சுட்டிருந்த சூரியன் கொஞ்ச நாள் ஓய்வெடுக்கணும்னு இப்ப தானா நினைக்கணும்? ஒரே மழை! ஆனாலும் ஒரு வைராக்கியத்தோட குடையைத் தூக்கிட்டுக் கிளம்பிட்டேன். இருந்தாலும் பாருங்க ஒரு சந்தோஷம். நம்மால ஊருக்கே மழை பெய்யுதேன்னு.. (பின்ன அதிசயம் நடந்தா மழை பெய்யுந்தானே!)

நீங்களும் மழையில் நனையணுமா? இதோ உங்களுக்காக ஒரு கவிதை மழை https://www.nilacharal.com/stage/kavithai/tamil_poem_268b.asp உங்களுக்கு மழையில் நனையறது பிடிக்குமா? மழையைப் பார்த்தா உங்களுக்கு நினைவு வர்ற நிகழ்ச்சி ஏதாவது இருந்துச்சுன்னா அதையும் எழுதுங்களேன்.. (எப்படி ரேடியோ ஜாக்கி மாதிரியே சம்பந்தா சம்பந்தம் இல்லாம உளர்றேனா? வரிக்கு வரி பாட்டு தான் போட முடியலை.. கவிதையாவது படிக்க சொல்லலாமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான்… கூடவே உங்களைத் திரும்ப சந்திக்கிற வாய்ப்பு ஏற்படுத்திக்கிற நோக்கமும் தான்)

சரி திரும்ப விட்ட இடத்துக்கே போவோம்.. எங்க விட்டேன்.. ஆங்.. நடைப்பயிற்சி… ஆனாலும் சொர்ணாக்கா.. தப்பு.. தப்பு.. ஸ்வர்ணாக்கா மாதிரி என்னால நாவடக்க முடியாதுங்க.. தமிழர் உணவான இட்லி தோசையில்லாம என் நடைப் பயிற்சியோடு சேர்ந்த உடற்பயிற்சி முடிவடையறதும் இல்ல.. ஆனால் தமிழர் உணவு பத்தி இவங்க வேற சொல்றாங்க..
https://www.nilacharal.com/tamil/research/tamil_literature_232.asp

ஆச்சரியமாயிருக்குல்ல.. நம்ம ஆட்கள் எதைத் தான் கண்டுபிடிக்கல.. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தின்னு விஞ்ஞானம் தோணுமுன்னே சொல்லலையா? எனக்குல்லாம் பாட புத்தகத்தில் படிச்சு தான் அணுவைப் பத்தித் தெரியும். ஆனா ஒரு தமிழ்க் கவிஞர் அணுவைத் துளைக்க முடியும்ங்கற அளவுக்குத் தெரிஞ்சு வச்சிருக்கார்னா, நம்ம மூதாதையர் எவ்ளோ அறிவானங்களா இருந்திருக்கணும்..

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" ன்னு நிமிரும் போதே இப்ப இருக்கற தமிழர் வாழ்க்கை தலையில் குட்டுற மாதிரி இருக்கு.. பின்ன என்னங்க.. வீட்டில் பிள்ளைங்ககிட்ட கூட பெத்தவங்க தமிழ் பேசறதில்லை.. அப்புறம் எப்படி தமிழன் சாதிக்கிறது?.. வேற்றுமொழி மட்டும் படிச்சா நீ தொழிலாளியா தான் இருக்க முடியும்.. தாய்மொழி தெரிஞ்சாத்தான் முதலாளியாக முடியுங்கறது ஏங்க யாருக்கும் புரிய மாட்டேங்குது. இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கொஞ்சம் எனக்கு எழுதுங்களேன்.. விவாதிக்கக் கூட யாரும் தமிழ் பேச மாட்டேங்கறாங்கங்க இந்தப் பட்டணத்தில.. எழுதவீங்கன்னு நம்பறேன்..

எங்கருந்து எங்க தவ்விட்டேன்.. ஆங்.. அணுவைப் பத்திப் பேசிட்டிருந்தோம்ல… ஜெனீவால ஒரு பெரிய ஆராய்ச்சி அமைதியா நடந்துட்டிருக்கு தெரியுமா? "Mother of all experiments" – http://www.boston.com/bigpicture/2008/08/the_large_hadron_collider.html
உலகம் உருவான மர்மம் அவிழப் போகுதா? இல்லை உலகத்தையே அழிக்கப் போகுதா இந்த ஆராய்ச்சின்னு எல்லாரும் ஆவலா எதிர்பார்த்திட்டிருக்காங்க.. ஏன்னா "All should leave Geneva" ன்னு நாஸ்ட்ரோடாமஸ் வேற சொல்லிருக்கறதா ஒரு தகவல். உறுதிப்படுத்திக்கலாம்னு தேடினா அவரைப் பத்தி உருப்படியா ஒரு இணையதளமும் கிடைக்கலை. உங்க யாருக்காவது நாஸ்ட்ரோடாமஸ் இணைய தள முகவரி கிடைச்சா எனக்குத் தெரியப்படுத்துங்க…

அப்புறம் யாருக்காவது பரதநாட்டியம் கத்துக்கணும்னு ஆசையாயிருக்கா? ஆனா நேரம் தான் இல்லையா? அப்படின்னா, நீங்க இந்த சிடி, டிவிடி வாங்கி வீட்டிலிருந்தே கத்துக்கலாம். அதெல்லாம் எங்க கிடைக்கும்னு பார்க்கறீங்களா? யாமிருக்க பயமேன்.. இங்கே சொடுக்குங்கள்..

http://www.nilashop.com/index.php?cPath=22

சரி ரொம்பப் பேசிட்டேன்.. நான் மட்டுமே பேசிட்டிருந்தாப் பத்தாது.. நீங்களும் பேசணும்.. அதாவது எழுதணும்.. இந்த வாரம் படிச்சாச்சு.. அடுத்த வாரம் திரும்ப வரலாம்னு browser window வை close பண்ணிட்டுப் போயிடாதீங்க.. ஒரு வார்த்தையாவது எழுதிட்டுப் போங்க.. அப்போ தானே நாம திரும்ப சந்திக்க முடியும்.. எழுதுங்க எழுதுங்க னு சொல்றீங்க எங்க எழுதறதுன்னு யோசிக்கறீங்களா? கீழே இருக்கிற பின்னூட்டப் படிவத்தில் நீங்க நினைக்கறதை எழுதுங்க.. நிறைய எழுதணும்னா எழுத்தாளர் பகுதிக்கு வாங்க.. அதைப் பத்தி இங்க தெரிஞ்சுக்கலாம்.. https://www.nilacharal.com/write.html

நான் இப்போ விமலா ரமணி எழுதின கதை படிக்கப் போறேன்.. அதைப் பத்தி அடுத்த தடவை சொல்றேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் …………. (ஆஹா.. பேரே சொல்லலையா இதுவரைக்கும்.. உங்களை இவ்வளவு நேரம் அறுத்தது யாருன்னு தெரியணும்னா எனக்கு மடல் அனுப்புங்க… அப்புறம் சொல்றேன் என் பேரென்னன்னு..)

பின்குறிப்பு: நீங்க எழுதறது, மத்தவங்க எழுதறது எல்லாத்தையும் இந்தப் பக்கத்திலேயே படிக்கலாம்(பின்னூட்டப் படிவத்துக்குக் கீழ வரிசையா வெளியாகும்), என்னோட பதிலும் இந்தப் பக்கத்திலேயே இருக்கும். அப்பப்ப வந்து பார்த்துக்குங்க!

About The Author

7 Comments

  1. Raafy

    ஏன்ன சார் ரொம்ப பிலைடு பொடுரிங்க? உபயொகமா எதாவது சொல்லுங்க சார்.

  2. !?

    ஹலோ ராஃபி, இது தானே தொடக்கம்.. போகப் போகப் பாருங்க (இந்த மாதிரி பில்டப் தாங்க நம்ம ஷ்பெஷாலிட்டி) நீங்களும் உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல தகவலைச் சொல்லலாமே!

  3. MahiArun

    அறுவை போடற மாதிரியே நிறைய செய்திகள் சொல்லறிங்க ரேடியோ ஜாக்கி!!! பயனுள்ள பகுதி!!!

  4. maleek

    ஓ..அவுரா நீங்க.. நாங்க கண்டுபிடிச்சிடுவோம்ல…
    சவாலா?…ம்…யார்க்கிட்ட.

  5. !?

    ரொம்ப நன்றி மகிஅருண் (சரியாத் தானே உச்சரிக்கிறேன்?). நிறைய பயனுள்ள செய்திகள் தர முயற்சிக்கிறேன். ஆனாலும் நீங்க கேள்விக்கெதுக்கும் பதில் தரலையே. ஒரு பக்கமே பேசிட்டிருந்தா நல்லாயிருக்குமா சொல்லுங்க?

  6. !?

    சவாலே தான்! கண்டுபிடிங்களேன் பார்ப்போம்!

  7. Ravi

    என்னது இது…. தெரிஞ மேட்டரா இருந்தாலும் சும்மா நருக்குன்னு சொல்லிருக்காங்க….. சூப்பருங்க….

Comments are closed.