தமிழ் என்னும் விந்தை! -கூட சதுர்த்தம் – 2

கூட சதுர்த்தம் என்னும் வடமொழிப் பெயரைத் தமிழில் கூட சதுக்கம் எனச் சொல்வது மரபு.
யாப்பருங்கல விருத்தி தரும் உதாரணச் செய்யுள் இது:-

கருமால் வினைகள் கையேறிச் செடிசெய்து காறடப்போ
யருமா நிரயத் தழுந்துதற் கஞ்சியஞ் சோதிவளர்
பெருமாள் மதிதெறு முக்குடை நீழற் பிணியொழிக்குந்
திருமா றிருந்தடைக் காளா யொழிந்ததென் சிந்தனையே

இதில் நான்காம் அடியான, ‘திருமா றிருந்தடைக் காளா யொழிந்ததென் சிந்தனையே‘ என்பதில் உள்ள எழுத்துக்கள் ஏனைய மூன்று அடிகளில் வந்துள்ளதைக் கண்டு மகிழலாம்.

இனி யாழ்ப்பாணம் கவிஞர் மயில்வாகனப் பிள்ளை இயற்றிய கூட சதுர்த்த செய்யுளைப் பார்ப்போம்:-

நீணலம் வாய்த்திட நின்மல மேவல்
வேணுறு வாழ்க்கையி லேகுபு வாழ்வேந்
தாணுவை யீசனை மாமயல் சாரா
மாணகு லேசனை வாழ்த்திட வம்மே

இதில் நான்காம் அடியான, ‘மாணகு லேசனை வாழ்த்திட வம்மே‘ என்பதில் உள்ள எழுத்துக்கள் ஏனைய மூன்று அடிகளில் வந்துள்ளதைக் காணலாம்.

பா.முனியமுத்துவும், கூட சதுக்கத்தில் ஒரு சித்திர கவி இயற்றியுள்ளார். அது வருமாறு:-

வாதா இனிதா வான பதமே நாதூ தாவே தாகோலா தானாக மாதா வேதமே தாவேநீ யேகா தாதா பாநா வேலாக வேதாயே!

இந்தப் பாடலில் நான்காம் அடியான, ‘தாதா பாநா வேலாக வேதாயே!’ என்ற அடி முதல் மூன்று அடிகளில் மறைந்து வந்துள்ளது.

இவர் கூட சதுக்கமாக தருகின்ற இன்னொரு சித்திரப் பாடல் இது:-

தமிழ் என்னும் விந்தையில் என்னென்ன ஜாலங்கள் எல்லாம் இருக்கிறது, பார்த்தீர்களா?!

(தொடரும்)

About The Author