மடை திறந்து… (2)

போன வாரம் என்னோட உற்சாகம் தங்களையும் தொற்றிக் கொண்டதா எழுதியிருந்த 2 x சித்ரா, ஸ்ரீ, விஜயா எல்லாருக்கும் நன்றி. நான் தினமும் கடவுள்கிட்டே கேக்கற வரம் என்ன தெரியுமா? ‘Let me be a clear channel of love, light and joy’. அது நனவாகறது உங்க மூலமா தெரிய வந்திருக்கு.

எனக்கு மிகவும் பிடிச்ச பிரார்த்தனை செயின்ட் ஃபிரான்ஸிஸ் அசிஸியுடையது. அதைப் படிக்கும்போதே நம்மோட ஈகோ எல்லாம் உடைஞ்சு விழற மாதிரி இருக்கும். அதை ஆங்கிலத்திலேயே கீழே தர்றேன்:

NilarajLord, make me an instrument of your peace,
Where there is hatred, let me sow love;
Where there is injury, pardon;
Where there is doubt, faith;
Where there is despair, hope;
Where there is darkness, light;
Where there is sadness, joy;

O Divine Master, grant that I may not so much seek to be consoled as to console;
To be understood as to understand;
To be loved as to love.

For it is in giving that we receive;
It is in pardoning that we are pardoned;
and it is in dying that we are born to eternal life.

சின்ன போட்டி: இதை யார் அழகா தமிழ்ப்படுத்தி அனுப்பறீங்களோ அவங்களுக்கு என்னோட நாவல் ஒன்று அனுப்பி வைக்கிறேன். அழகு பார்க்கறவங்க கண்ணிலதானே இருக்கு? அதனால இந்தப் போட்டில என் கண்ணுக்கு அழகா தெரியற வரிகளுக்குத்தான் பரிசு… (என்ன பண்றது, நீங்க பொறுத்துதான் ஆகணும்!)

பல பேர் எங்கிட்டே கேக்கற கேள்வி: மதத்துக்கும் ஆன்மீகத்துக்குமுள்ள வேறுபாடு என்ன? ரொம்ப ரொம்ப அழகா இந்த வீடியோல சொல்லப்பட்டிருக்கு… பாருங்க… கண்டிப்பா உங்க மனதில ஒரு ஜன்னல் திறக்கும்:

http://www.youtube.com/watch?v=PcWKFMz62yU&feature=related

இதே ரெவரண்ட் டேனியல் நியுஸொம் மூலமா ஆர்க் ஏஞ்சல் ரஃபேல் பேசும்போது ஒரு அற்புதமான மெஸேஜ் வந்தது:
வெற்றி என்பது மனதின் ஆசைகளை நனவாக்குவது.

ஆனா நாம வெற்றியை எப்படி அளவிடறோம்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. முக்கால்வாசி நேரம் நம்ம அளவுகோல் ஒப்பீடுகளின் அடிப்படையிலதானிருக்கு. நாம வளர்க்கப்பட்ட விதம் அப்படி. இது சரி, இது தப்புன்னு ரொம்ப ஆழமான அடிப்படை நமக்குப் போடப்பட்டிருக்கு.

உதாரணத்துக்கு, ரொம்ப நல்லா படிச்ச தோழி ஒருத்தி (தேவின்னு வச்சுக்கலாம்) ஒரு சிறிய நகரத்தில டீச்சரா செட்டில் ஆயிட்டா. அவளைப் பற்றி மற்ற தோழிகள் பேசும்போதெல்லாம், “அவ மட்டும் சென்னை வந்திருந்தா எப்படி எல்லாம் இருந்திருப்பா!” அப்படின்னு குறைபட்டுப்பாங்க. ஆனா இப்படி குறை பட்டுக்கறவங்க பெரிய பெரிய நிறுவனங்கள்ல மிகப் பெரிய பதவிகள்ல இருந்தாலும் சரியா சாப்பிட, தூங்க, குடும்பத்தோட இருக்க நேரமில்லாம கால்ல சக்கரத்தைக் கட்டிக்கிட்டு ஓடிட்டிருக்காங்க. தேவிக்கு வீட்டிலருந்து 10 நிமிஷ நடையில பள்ளி, மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்துட்டுப் போற வசதி, குழந்தைகளை நல்லா பார்த்துக்க முடியற நிறைவு. இதுல யார் வாழ்க்கையில வெற்றி பெற்றவங்கன்னு தீர்ப்பு சொல்றது யாரு? யார் யாருக்கு மனதுக்குப் பிடிச்சதைச் செய்ய முடியற சுதந்திரம் இருக்கோ அதுதான் வெற்றின்னு எனக்குத் தோணுது. ‘அதுக்காக ஒரு பிச்சைக்காரனை வெற்றியாளன்னு சொல்ல முடியுமா’ன்னு நீங்க கேக்கலாம். இந்த உலகமே அவனைக் கேவலமா பாத்தாலும் அவன் சந்தோசமா சுதந்திரமா இருந்தா அவன் வெற்றியாளன்தானே? ‘ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் மகிழ்ச்சியை நோக்கிய பயணமாகத்தானிருக்கிறது’ அப்படின்னு ஆன் ஃப்ராங்க் சொல்லிருக்கார்… So…

என்னோட இரத்தினச் செவ்வில ‘தாயாகவும், மகளாகவும், மனைவியாகவும்….. வாழ்ந்தது போக தானாகவும பெண்கள் வாழணும்’னு நான் சொன்னதுக்கு ஹேமா விளக்கம் கேட்டிருந்தாங்க.

கீழ்க்கண்ட கேள்விக்கான உங்கள் பதில்ல இதற்கான விளக்கம் கிடைக்கும்னு நினைக்கிறேன்:

பணம் பற்றிய தேவையே இல்லாத, முழுக்க முழுக்க அன்னியர்களால் (ஷங்கரோட பயங்கரமான அன்னியன் இல்லைங்க… முன்னப்பின்ன தெரியாத மனுஷங்க) நிறைந்த ஒரு புது உலகத்தில நீங்க விரும்பறதை எல்லாம் செய்யற சுதந்திரம் இருந்தால் நீங்க என்னென்ன செய்ய விருப்பபடுவீங்கங்க?

இந்தக் கேள்வியை நான் நிறைய இந்தியப் பெண்கள்கிட்டே கேட்டிருக்கேன். மிகப் பெரும்பான்மையான பேருக்கு பதில் சொல்லத் தெரியலை!!! உங்க பதிலை இங்கே எழுதுங்க. உங்க பதில் என்னைக் கவர்ந்ததுன்னா என்னோட நாவல்ல ஒண்ணு உங்களுக்குப் பரிசா அனுப்பிவைக்கிறேன் – முடிவு மறுபடியும் என்னுடையதே 🙂 (வேற பரிசே உலகத்தில கிடையாதான்னு நீங்க முனகறது கேக்குது)

போன மாதம் பிரிட்டிஷ் லைப்ரரிலர்ந்து தொலைபேசி, பூஞ்சிட்டுன்னு ரெண்டே ரெண்டு சிறுவர் இதழ் தங்கள்கிட்டே இருக்கறதாவும் அதனோட மற்ற பிரதிகளையும் தங்களுக்கு அனுப்ப முடியுமான்னு கேட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதோட, என்னைப் பற்றியும் விசாரிச்சாங்க. நான் என் நூல்களைப் பற்றிச் சொன்னப்போ, உடனே ‘அட, கருவறைக்கடன் எங்ககிட்டே இருக்கே’ன்னு சொன்னாங்க. கூடுதல் மகிழ்ச்சி.

2003 – 4ல அன்லிமிடட் அப்படிங்கற சேவை நிறுவனத்தின் நிதி உதவியோட, 5 சிறுவர் மலர்களை அச்சில் கொண்டுவந்தேன் – பல குழந்தைகளோட பங்களிப்போடு. உண்மையாகவே அற்புதமான அனுபவம் அது. மிக நல்ல வரவேற்பு இருந்தது. அன்லிமிடட் பூஞ்சிட்டினை ஒரு வர்த்தக இதழாகக் கொண்டுவர விருப்பமிருந்தால் உதவுவதாகச் சொன்னாங்க. ஆனா, வேலைப் பளு அதிகமா இருந்ததால அவங்ககிட்டே முதல்ல கமிட் பண்ணினது போல 5 இதழ் மட்டும் கொண்டு வந்துட்டு நிறுத்திட்டேன்.
பிரிட்டிஷ் லைப்ரரிக்கு அனுப்பறதுக்காக பூஞ்சிட்டு இதழ்களைத் தேடி எடுத்தப்போ எனக்கு அவ்வளவு பரவசமா இருந்தது; அந்தப் பரவசம்தான் சுறுசுறுன்னு போனவாரம் என்னை எழுத வைச்சது… So, credit goes to all the kids that worked with me on Poonchittu!
பூஞ்சிட்டு இதழ்களோட பிடிஎஃப் நகல் நிலாச்சாரல்ல இருக்கு. விரும்பினா தேடிப்பிடிச்சுப் பாருங்க…

இந்தப்படத்தில நான் கட்டியிருக்கற புடவை கல்யாணி காட்டன்னு சொன்னாங்க. இது பாபா எனக்குப் பரிசாகக் கொடுத்தது. அதுசரி, என்னவோ நான் ஸ்மார்ட்டா செலக்ட் பண்ணுவேன்னு சொல்லிட்டு பரிசா கிடைச்ச புடவைகளையே காட்றேன்னு நினைக்கறீங்கதானே? என்ன பிரச்சினைன்னா, பெரும்பாலும் நான் ஃபோட்டோகிராஃபரா இருக்கறதுனால, எனக்கு படங்கள்ல இருக்கற வாய்ப்பு குறைவு. அதனால தேடித் தேடி எடுக்கணும். கிடைக்கற படங்களை முதல்ல போடறேன்.

நான் போட்டிருக்கற நகை நான் செலக்ட் பண்ணினது. அண்ணி எனக்கு வாங்கிக் கொடுத்தது. (ஓசிலேயே வாழ்க்கை ஒடுது ) இந்தப் புடவையும் நகையும் பலபேரோட பாராட்டைப் பெற்றன.

எனக்கு பாபாவைப் போன்ற ஆன்மீகவாதிகளை சந்திக்கறதுல மிகவும் விருப்பம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சந்திச்சு ஆசி வாங்கிருக்கேன். சில அற்புதங்களையும் அனுபவிச்சிருக்கேன். ஆனா ஏனோ என்னால யாரோட தீவிர பக்தையாகவும் ஆக முடியலை. எனக்குத் தெரிஞ்ச சில நண்பர்கள் அவங்களோட குரு சொன்னா கிணத்தில குதிக்கக் கூட தயாரா இருப்பாங்க; தான், குடும்பம் எல்லாத்தையும் விட குருதான் முக்கியம்னு மொத்தமா சரணடைஞ்சிருக்காங்க. சில சமயம் எனக்குப் பொறாமையா கூட இருக்கும். இப்படி இருக்கறதால அவங்க எதுக்குமே கவலைப் பட மாட்டாங்க- ‘எல்லாத்தையும் அவர் பார்த்துப்பார்’னு ஒரு நம்பிக்கை.

ஆனா சில சமயம் நினைச்சுப் பார்த்தா இதுவும் கூட ஒரு மாயையோன்னு தோணும். ஏன்னா அப்படி அதீத பற்று கொண்டிருக்கறவங்க பலர், அந்த மகான்களின் போதனைகளைக் கடைப்பிடிக்கறதில்லை. தவிர என் குருதான் உலகத்திலேயே சிறந்தவர்னு வாதம் வேற பண்ணுவாங்க. அப்போ அங்கே அன்பு அடிபட்டுப் போகுதே!

அதீத ஈடுபாடு/பற்று – அது எந்த விஷயத்தில இருந்தாலுமே அது ஈகோவோட வெளிப்பாடுன்னு எக்கார்ட் டோலே சொல்றார். அவர் தர்ற விளக்கங்கள் எனக்கு சரியாத்தான் படுது. நான் இரண்டுக்குமிடையில இருக்கேன்னு நினைக்கிறேன். புத்தரின் பற்றற்றிருத்தல் என்னை எப்போதும் கவர்ந்திருக்கு. வீட்டில முணு புத்தர் சிலை வச்சிருக்கேன். ஆனா நான் மிகச் சாமானிய மனுஷியாய் எல்லாத்திலேயும் பற்றோடுதானிருக்கிறேன்… போக வேண்டிய தொலைவு மிக அதிகம்… ஆனால் இதுவும் நலமே!
அப்பறம் உங்க வாழ்க்கை எப்படி போகுதுன்னு ஒரு வரி எழுதிப் போடுங்க, நண்பர்களே!

அடுத்தவாரம் பார்க்கும் வரை…
Happy Monday
Happy Tuesday
…..
……..
Happy Sunday

அபரிமிதமான அன்புடன்,
நிலா.

About The Author

6 Comments

  1. vijayaveni

    I will make a group of people who are all having interest in social service.
    We will identify who are all not having basic necessities of life and will provide them the same.
    We will try to slove problems of the people who are all suffering for basic necessities and without getting help from relatives and from neighbours.

  2. chitra

    ஆதரவற்ற குழந்தைகள்,ஆதரவற்ற முதியோர்கள் இந்த இரண்டும்தான் என்னை ரொம்ப யோசிக்க வைக்கும். அதனால் அவர்களுக்கு அன்பாக ஆதரவாக அரவணைப்பாக அவங்க துன்பங்களை எல்லாம் முடிந்த வரை துடைத்து, ஒரு தாயாக மகளாக பேத்தியாக…இப்படி வாழ விரும்புகிறேன்.

  3. N.Maithreyi

    Dear Nila,
    Your question is very interesting – ‘what would you like to do in a new society, with strangers and no financial problems?’
    Presently, I am living in such a society. I am recently widowed, and have no children. I lived as a daughter for 25 years and a wife for another 25 years during which, like most women, I lead a life ‘other than my own’. Even my basic likes and dislikes were restricted and I passed through many ups and downs. Now, for the first time ever I am on my own – living among strangers, with manageable income and no compulsions in a society where the socio-cultural norms are very flexible.
    In this society, I am putting myself through a process of self-discovery – my likes, dislikes, taste, aim/visions etc. Psychologically and spiritually I am going through a phase of self-search, trying to see myself from ‘inside’. My past life has taught me some very valuable lessons emerging out of my life experiences, both positive and negative. This experience is a guiding tool for my self-analysis and soul-searching. Currently, I am doing community services as a volunteer , where i have opportunities to move with people from marginalised/oppressed backgrounds (mostly refugees) helping them to discover their own strengths and abilities, during the course of which I re-discover mine.
    I thank you for giving me an opportunity to express myself.
    Kind regards,
    Maithreyi.

  4. Hema

    நிலா,அன்னியர் தேசததில் இருப்பதால் விரும்பும் பலவற்றை செய்ய சுதந்திரம் உண்டு…ஆனால் தேவைகளுக்காக பணத்தை தேடி ஓட வேண்டி இருப்பதால் பல நேரம் சலிப்பு உண்டாகிறது. பணத்திற்காக பெரிதாக ஓட வேண்டி இல்லாதிருந்தால்….முதலில் கடிகாரம் என்னை பயம்காட்டது…எவ்வளவு பெரிய சுதந்திரம்…..அப்புறம் தொலைபேசியையோ, கணிணியை தொட அவசியப் படாத ஒரு நாள்….. இருட்டும் இல்லாமல் முழு சூரியனும் இல்லாத அதிகாலையில் பறவைகள் பேசிக் கொள்வதை…சூடான தேநீர் (காபி இப்பெல்லாம் உடம்புக்கு ஒத்துக்கிறதில்லீங்கோ!) பருகிக் கொண்டே விரும்பும் வரை ரசிக்க வேண்டும்…..வீட்டுக்கு கொஞ்சம் பக்கத்தில் தெளிவான தண்ணி இருக்கிற ஒரு ஏரி…சரி அதுவும் இல்லையா….வீட்டிற்குள்ளே புத்தர் தலைக்கு பின்னால் இருந்து தண்ணி விழுமே…அதேதாங்க…..(தமிழல்ல என்ன சொல்லறதுன்ன சரியா தெரியலைங்க…)…இருந்தா அதிகாலை தென்றல காற்று வருடுற சுகம் இருக்குங்க… அப்புறமா கொஞ்சமாக ரிலாக்ஸ் யோகா(இதற்கு சுதந்திரம் இருக்கு…ஆனா கொஞ்சம் சோம்பேறித்தனம் மற்றும் அந்த நாளின் நிகழ்ச்சி நிரல் ஒரு ஒருமுகப்பட்ட அமைதியான சூழலை பெரும்பாலும் தரதில்லை…சரி நம்ம சோகக் கதையைய் விடுவோம்…கற்பனை சுதந்திர கொண்டாட்டத்தை தொடருவோம்…..)…பின் பாட்டு இல்லாத யோகாவா???( என்னால முடியாதுங்க). ரம்மியமான மார்கழி பூவே போன்ற பாடல்கள்….அப்புறம் அவரசப்படுத்திக்கொள்ளாமல் வெது வெதுப்பான நீரில் குளியல்…அப்புறமா….காலை உணவு…ஓட்ஸ் அல்லது அவரது உறவினர்கள் இல்லாத அந்த நேரத்தில் மனதிற்கு தோன்றும் ஒரு உணவு (யாராவது ஒரு தேவதை வந்து கையில கொடுத்திட்டு போகனும் சரியா) .. கொஞ்சம் நேரம் கால் போன போக்கில் நடந்துகிட்ட கடந்து செல்கிற மனிதர்களையும் அவர்கள் செயல்களையும் ரசிக்குனும்…அவர்களை தொந்திரவு செய்யாமல்…கவனிக்கிப்படுகிறோம்முன்னு அவங்களுக்கு தோணாத வகையில்….(ஒத வாங்க கூடாதில்ல…) நினைச்ச இடத்துல உட்காரனும்…அப்புறம் நடக்கனும்…இல்ல..அதிக கூட்டமில்ல்லாத பஸ் அல்லது டிரெயின்ல ஜன்னல் சீட்ல பிரயாணம்…. பசிக்கும் போது …. நல்ல வெஜிடேரியன் சாப்பாடு…யாரவது பண்ணறது தான்…. தூக்கம் வந்தால் குட்டித்தூக்கம்….(மூச்..சத்தமில்லா இருக்கனும் சுத்தி…)….எழுந்து இந்த உலகத்துக்கு வந்துட்ட பிறகு ஜில் தண்ணில கொஞ்சம் நேரம் முகத்தை கழுவுனும்….ஏதாவது ஒரு நல்ல புத்தகம் எளிதில் புரியக்கூடியதா ….கையில கிடைச்ச … படிக்கனும் (மூளைக்கு அதிக வேலை கொடுக்காத புத்தகமா இருக்குனும்…பல புத்தங்கங்கள் அடியேனுக்கு பிரியறதில்லாததால படிக்கிறது ரொம்ம கம்மி..)..இல்லாவிட்டால் நல்ல பீச் கேடகனும்…… ஷாப்பிங் எனக்கு அதிக விருப்பமில்லாத ஒரு விசயம்….அதனால தேவையான பொருள்லாம் எல்லாம் எப்பவும்…தேடமா கிடைக்குன்னு….( ரொம்ப ஓவர இருக்கோ!!!….கற்பனைதானா..மன்னிச்சு விட்டிருங்க….)காதுல பாட்டு கேட்டுக்கிட்டே வெளிச்சம் மறஞ்சு இருட்டுல ( நோ கும்மிருட்டு)…. தண்ணில லைட்டா கால் டச் பண்ணி ஒரு வாக்கிங்…..கால் போதுன்னு சொல்லற வரையில…….திரும்பி கொஞ்ச நேரத்தில் லேசான இரவு உணவு….அப்புறமென்ன????தூக்கம்தான்…ஆனா அது கடைசித்தூக்கமா இருக்குனும்….தூங்கிறதுக்கு முன்னால ஒரு நன்றி…இதே மாதிரி எல்லாருக்கும் ஒரு மனதிருப்தி தரும் அமைதியான வாழ்க்கை தர வேண்டி ஒரு சின்ன வேண்டுதல்…..யாருகிட்ட???? நம்ம கடவுள்கிட்டதான்……டாட்டா….( நிலா, ஏன்டா இப்படி ஒரு கேள்வி கேட்டமுன்னு நீங்க கேட்கறது காதுல விழுறது….!!!!!)

  5. kanmany

    காலை 6-7மணிக்குள்ள ஒரு மெல்லிய இசையோட [சுப்பிரபாதம் என்றாலும் ஓகே] எழும்பி யன்னலை திறந்துவிட்டுட்டு நிதானமாக பல்லுவிளக்கி யாரும் போட்டுத் தாற தேத்தண்ணியை பாண் அல்லது பணிஸ் [எல்லா ரக பணிசும் பிடிக்காது எனக்கு பிடிச்சதை தரணும்] அதை அப்படியே கொம்பியூட்டர்ல மெயில், பேஸ்புக், நிலாச்சாரல் வரை பார்த்தபடி ரசிச்சு குடிக்கணும் [அப்போ யாராவது நான் வாசிச்ச எனக்கு பிடிச்ச நியூசை கேட்க இருந்தால் பக்கத்தில டபுள் சந்தோசம்.] எப்பிடியும் குறைந்தது ஒரு மணித்தியாலம் வேணும். அப்புறம் மெதுவாக எழும்பி மெல்ல மெல்ல கிளினீங் செய்ய தொடங்கணும். அது முடிய நைசா கை காலை மட்டும் கழுவிற்று சமைக்க போகணும். வெயிடபுள் எண்டால் நோ கெல்ப். இறைச்சி, மீன் எண்டா கட் பண்ணித்தர ஒருவர் அவசியம். ரகுமான் அல்லது யுவன் மியூசிக் பொக்ஸ் ல சவுண்ட் வைச்சு போட்டு கேட்டபடி ஒரு மணித்தியால சமையல். [சமைக்க பிடிக்கும் ஆனால் கன நேரம் சமைக்கிறது பிடிக்காது..]
    சமையல் முடிஞ்சதும் நல்ல ஒரு குளியல்.. [கேட்ட பாட்டை முணுமுணுத்தபடி அல்லது நல்ல பகல்கனவுகளோடு]
    பிறகு சாப்பாடு [கொம்பனி அவசியம்] டைனிங் ரேபிளில் இருந்தபடி ரிவி பார்த்தபடி ஆறுதலாக 1-2மணித்தியாலயம் சாப்பிடணும். பிறகென்ன நிதானமாக செற்றில சாய்ஞ்சு பிடிச்சபுக் ஏதும் இருந்தால் வாசிக்கணும். பின்னேரம் சொப்பிங் போகலாம். போனால் டினர் வெளில முடிச்சுட்டு நிதானமாக 9-10 இற்குள்ள வீடு திரும்பிடணும்.
    [வீட்ல இருந்தா ரிவி அல்லது புக் [2-3 மணித்தியாலம்] அப்புறம் ஏதாவது புதுசா செய்யணும். [எழுதுறது அல்லது தைக்கிறது அல்லது சமையல்] பின்னேர ரீ ஏதாவது கடிக்க அவசியம். நேரமிருந்தா பிரண்ட்ஸோட சற்றிங.; பிறகென்ன டினர்… லைற்றா மேல் கழுவிட்டு இளையராயா மியூசிக் ஏதாவது ஒரு புக் அப்பிடியே ..குட்நைட்…….]

  6. ravi

    Hஎம நேங கூட எழுத அரம்பிசிடுலம் , கர்க்பனை வருது, எழுது நடைஅ கோட கொஞம் வரப்பல இர்ருக்கு. ரசிக்கரப்பல இர்ருகு. Tகன்க்ச்.
    ணில அவர்கல்லுகு, கர்பனயெ இல்லம ஒரு வழ்கை பொஇட்டு இருக்குங, ணன் யெர்கனவெ, அல்fஅ மின்ட்பொநெர் cலச்ச் அட்டென்ட் செஇதிருக்கென். எதையும் cஒன்டிஉனிட்ய் பன்ன முடியல்ல.

Comments are closed.