ஞாயிறு முதல் சனி வரை (4)

புதன்

புதன்மலை – ஓராண்டுக்கு முன்பு..

டிவி, பத்திரிகைகள் என அனைத்து ஊடகங்களிலும் புதன் மலையைப் பற்றியே பேச்சு, புதன்மலை – சித்தர்களின் மலை, நோய் நொடிகளைத் தீர்க்கும் மலை என்று பரவலாக பேசப்படுகிறது!

சடையப்பனுக்கு எல்லாமே தெரியும். எத்தனை தடவை கலெக்டர் ஆபிஸிற்கு ஏறி இறங்கி இருப்பான் ஒரு நல்ல ரோடு வேண்டுமென்று! இப்பொழுது ‘சித்தர்கள் இருக்கிறார்கள்’ என்று தான் கிளப்பிவிட்ட புரளியினால் ரோடு போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நல்லதுதான்! சடையப்பன் சிரித்துக்கொண்டான்.

புதன்மலை – இன்று..

"இங்கு சாமியார்கள் இருக்கிறார்களாமே.. நோய் எல்லாம் தீர்ப்பார்களாமே.." என்று பக்தர் ஒருவர் சடையப்பனிடம் கேட்கவும், "சாமியாரும் இல்ல.. ஒண்ணுமில்ல.. ஊரப்பாத்து போங்கப்பா!" என்று திட்டினான்.

காரணம் – புதன்மலை இன்று அழிந்து கொண்டிருக்கிறது. மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்றும் சடையப்பன் கலெக்டர் ஆபிஸிற்கு அலைந்து கொண்டிருக்கிறான் – மரம் வெட்டுவதைத் தடுக்க வேண்டி…!

About The Author