<<<<<சென்றவாரம்
8அடுப்பைசோடியம் உலோகத்தை நீரில் இடால் தீப்பற்றிக் கொள்வது ஏன்?
வசோடியம் உலோகம் நீருடன் சேரும்போது வேதியியல் வினையின் மூலம் ஹைடிரஜன் வாயுவும் பெருமளவு வெப்பமும் வெளி வருகின்றன. இவ்வினையைக் கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் அறியலாம். இதற்கு வெப்ப உமிழ் வினை
(exothermic
reaction) என்று பெயர்.
2Na
+
2H2
O
H2 +
2NaOH
சோடியம் + நீர் ஹைடிரஜன் + சோடியம் ஹைடிராக்ஸைடு
இவ்வேதியியல் வினையின் மூலம் வெளிவரும் பெரும் வெப்பம், எளிதில் தீப்பிடித்துக் கொள்ளும் இயல்புடைய ஹைடிரஜன் வாயுவை எரியூட்டிவிடும். இதைத் தவிர்க்கும் பொருட்டு சோடியம் உலோகத்தை மண்ணெண்ணெய், பென்சீன் போன்ற கரைப்பான்களில்
(solvents) வைப்பது வழக்கம். இவற்றில் சோடியம் நீருடன் சேர்ந்து வினைபுரியும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. எனவே தீப்பிடித்துக் கொள்ளும் வாய்ப்பும் இல்லை.
8மரபுப் பொறியியல்
(genetic
engineering) என்றால் என்ன?
தங்களுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தைகள் மரபுவழிக் குறைபாடின்றி உருவாக, பல பெற்றோர்கள் மருத்துவ ஆலோசனையும், உதவியும் பெறுவது தற்போது பெருகி வருகின்றது. அரிவாள் செல் சோகை
(sickle cell anemia) போன்ற நோய்கள் மரபுவழிக் குறைபாட்டினால் உண்டாவதாக அறிஞர்கள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் மரபுவழி நோய்கள் உண்டாகாமல் தடுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத் துறையே மரபுப் பொறியியலாகும். குறையுடைய மரபணுக்களை
(genes), குரோமோசோம்களில்
(chromosomes) இருந்து நீக்கி இயல்பான மரபணுக்களை பதிலுக்குப் பொருத்த முடியும் என்று அறிஞர்கள் நம்புகின்றனர்.
8கண்ணாடிப் பொருட்கள் நொறுங்கும் பண்பைப் (brittleness) பெற்றிருப்பதற்கு என்ன காரணம்?
ஒரு பொருள் மென்மை அல்லது கெட்டித்தன்மை பெற்றிருப்பதும், நொறுங்கும் தன்மை அல்லது கடினத் தன்மை பெற்றிருப்பதும் அப்பொருளின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வாறு அமைந்துள்ளன மற்றும் பிணைக்கப்பட்டுள்ளன என்பவற்றைப் பொறுத்ததாகும். ஒரு பொருளின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் தமக்குள்ளே இருக்கும் பிணைப்புகளைத் துண்டித்துக் கொள்ளாமல் இடம் பெயரும் தன்மை பெற்றிருக்குமானால், அப்பொருள் தன் மீது செலுத்தப்படும் விசையைத் தாங்கிக் கொண்டு உடையாமாலிருக்கும். எடுத்துக்காட்டாக, உலோகத்தின் ஒரு பகுதி தகைவுக்கு
(stress) உட்படும்போது, அப்பகுதியிலுள்ள அணுக்கள் வேறிடத்திற்கு இடம் பெயர்ந்து அங்குள்ள அணுக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். இந்நிகழ்ச்சி உருத்திரிவு
(deformation) எனப்படுகிறது. மூலக்கூறுகளுக்கு இடையேயுள்ள பிணைப்பு, நெகிழ்ச்சித் தன்மையுடனிருந்தால் மட்டுமே இ·து இயலும்.
கண்ணடியைப் பொறுத்தவரை அதில் பலவகைப்பட்ட அணுக்கள் -- அதாவது சிலிகான், உயிர்வளி, போரான், சில உலோகங்கள் ஆகியவற்றின் அணுக்கள்_மிகவும் உறுதியுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இவ்வணுப் பிணைப்புகள் ஏதேனும் அழுத்ததின் காரணமாக சிதைந்து போனால், அவ்வணுக்கள் இடம் பெயர்ந்து மற்ற அணுக்களுடன் இணைந்து மீண்டும் பிணைப்பைப் பெறமுடிவதில்லை. எனவேதான் கண்ணாடிப் பொருள் எளிதில் உடைந்து விடுகிறது. ஆனால் உலோகங்களையோ தகடுகளாகவும், கம்பிகளாகவும் மாற்ற முடிகிறது.
8அதிர்ச்சிக்கும், உணர்ச்சிக்கும் உள்ளாகும்போது நாம் வியர்ப்பது ஏன்?

வியர்வை வருவதற்குக் காரணம், நம் தோலில் அமைந்துள்ள நுண்ணிய வியர்வைச் சுரப்பிகளே
(sweat
glands). இவற்றின் எண்ணிக்கை பல மில்லியன்களாகும். இவ்வியர்வைச் சுரப்பிகள் இருவகைப்படும். அவை முறையே, எக்ரின் (eccrine) சுரப்பிகள், அபோக்ரின் (apocrine) சுரப்பிகள் என்பன. இச்சுரப்பிகள் மனித உணர்ச்சிகளின் தூண்டுதல்களுக்கு
(stimuli) உட்படக் கூடியவை. முதலில் கூறப்பட்ட எக்ரின் வியர்வைச் சுரப்பிகள் மனித உடல் முழுதும் இருப்பவை. உடலின் வெப்ப நிலைக்குத் தகுந்தவாறு மிகுதியாகவோ, குறைவாகவோ வியர்வையை வெளியேற்றுபவை. அடுத்துக் கூறப்பட்ட அபோக்ரின் வியர்வைச் சுரப்பிகள் அக்குள், தொடையிடுக்கு ஆகிய உடற்பகுதிகளில் அமைந்திருப்பவை. இச்சுரப்பிகள் பேரச்சம், கடுஞ்சினம் முதலிய தீவிரமான உணர்ச்சிகளுக்கு உட்பட்டு வியர்வையை வெளிக்கொணர்பவை. நாம் அதிர்ச்சிக்கும், ஆழ்ந்த உணர்ச்சிக்கும் ஆட்படும்போது இச்சுரப்பிகள் வியர்வையைச் சுரக்கும். மழை நாட்களிலும், குளிர்காலத்திலும் கூட நாம் வியர்ப்பதற்குக் காரணம் இதுவே.
*****